Sunday, December 5, 2010

சுமை





காய்கறிகளைச் சாப்பிடும்
சுவையைவிட விலை
சுமை...

சுவைக்குள்ளும் பல
சூட்சுமங்கள் சுமை...

பெய்யாமல் கெடுத்ததுபோக
பெய்து கெடுக்கிறது மழை
செய்யும் எந்த வேலையும்
மழையில் சுமை...

நீண்ட சரக்கு ரயிலைப்போல
ஊழல் ரயில்
பெட்டிகள்தோறும் விதவிதமாய்
ஊழல் சரக்குகள்...

வண்ணவண்ண விளையாட்டுக்கள்
வானவில் ஜாலங்கள்

கொஞ்சம் எலும்புகள்
கொஞ்சம் சதைகள்
கொஞ்சம் ரத்தம்
இதுதான் மனிதன்
சாப்பிடவும் முடியாமல்
துர்ங்கவும் முடியாமல்
சுகப்படவும் முடியாமல்

நாளெல்லாம் பொழுதெல்லாம்
ஏறிகொண்டேயிருக்கிறது
சுமை...சுமை...
சுமைகளைத்தவிர
வேறொன்றுமில்லை..

6 comments:

  1. சுமைதான் சுகமென வாழப்பழகிவிட்டோம் ஒரு பொதிமாடு போல் கழுதை போல்.

    விழிப்புணர்வோடு கூடிய ஒரு தலைவனின் தேவை நம் போன்றவர்களிடம் புதைந்து கிடக்கின்றது.வெகு சீக்கிரம் வீறிட்டு எழும் சாத்தியங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கி மறைகிறது காலம்.

    அருமை ஹரணி.

    ReplyDelete
  2. நீண்ட சரக்கு ரயிலைப்போல
    ஊழல் ரயில்
    பெட்டிகள்தோறும் விதவிதமாய்
    ஊழல் சரக்குகள்...

    ஹ்ஹ்ம்ம் ...ம்ம்ம்.............

    ReplyDelete
  3. சுவைக்குள்ளும் பல
    சூட்சுமங்கள் சுமை...

    இதன் தாத்பர்யம் சொல்லில் அடங்காது. அனுபவித்தே அறியலாம்.

    ReplyDelete
  4. சுமைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
    அதன் சுமை தாங்க இயலாது.

    ReplyDelete
  5. சில‌ சுமைக‌ள் சுக‌ம்தான் எப்போதும்
    அந்த‌ வ‌லிக‌ளும் சுக‌ம்தான் பேறின் போது.
    ........
    க‌டைசி ம‌யிலிற‌குக்காய் காத்திருக்கிற‌து
    ஊழ‌ல் பொதிக‌ளேற்றிய 'அராசா'ங்க‌ இர‌யில்.

    ReplyDelete
  6. நன்றி சுந்தர்ஜி.
    நன்றி நிலாமகள்.
    நன்றி ரிஷபன்.
    நன்றி மதுமிதா.
    நன்றி வாசன். கடைசி மயிலிறகுக்காய் காத்திருக்கிறது. வள்ளுவனைப் பொருத்திய புரிதல் அற்புதம் வாசன்.

    ReplyDelete