Wednesday, March 2, 2011

அல்லது


ஒரு பயணம்
ஒரு துயரம்
ஒரு அலுப்பு
ஒரு ஆர்வம்
ஒரு முனைப்பு
ஒரு கோபம்
ஒரு இயலாமை
ஒரு ஆதங்கம்
ஒரு அபிலாஷை
ஒரு அதிகாரம்
ஒரு கனவு
ஒரு கலைப்பு
ஒரு திட்டமிடல்
ஒரு உறக்கம்
ஒரு முகந்தெரியாதவனின் இடர்
ஒரு பிச்சைக்காரியின் கவலை
ஒரு சக பயணியின் எரிச்சல்
ஒரு நண்பனின் மரணச் செய்தி
ஒரு காய்கறிகாரியின் அலைச்சல்
ஒரு காமம் கிடைக்காத அவள்
ஒரு உறவின் நீக்கம்
ஒரு டீத்தாத்தாவின் எப்எம் ரேடியோ


ஒரு இளஞ்சூடான சூரியனின் வருகைவெப்பம்
ஒரு ஏக்கமுடன் பிரியும் பனியுடன் இரவு
ஒரு பறவையின் காலை வணக்கக்குரல்
ஒரு கிராசிங்கில் ஓடிக்கரையும் ரயில்,


ஏதோவொரு சந்திப்பில்
கிடைக்கும் ஒரு குழந்தையின்
அசையும் புன்னகை

அல்லது

மகளின் தொலைபேசி
அழைப்பு...

எல்லாம் இணைக்கும்
எல்லாம் மறக்கும்
எல்லாம் மணக்கும்......

11 comments:

  1. THIS I WRITE IN ENGLISH AS THIS LAPTOP DOES NOT HAVE TAMIL SOFTWARE DOWNLOADED. THE MIND SUBCONSCIOUSLY YEARNS FOR SOMETHING AND WHEN IT GETS THAT THE WHOLE WORLD LOOKS A SWARGA BHOOMI. HARANI SIR FINDS PEACE IN A CHILDS SMILE AND IN HIS DAUGHTERS CALL, PERHAPS.THIS OR THAT OR THAT OR HOW MANY OTHER THINGS SIR ,THAT COULD MAKE YOU RID OF ALL PROBLEMS.

    ReplyDelete
  2. இதுவா அதுவா என்றலைந்து எல்லாமுமேயென்றுணரும் தருணம் பொக்கிஷம் போன்றது ஹரணி.

    ReplyDelete
  3. ஒரு அற்புதமான எழுத்து..
    ஒரு நிமிடத்தில் படித்த,
    ஒரு அற்புதமான உணர்வு,
    ......
    ......
    என்னுள்!!!!

    ReplyDelete
  4. படிக்க சுகமாய்...

    ReplyDelete
  5. இயல்பு ...
    அருமை ஹரிணி

    ReplyDelete
  6. நன்றி ஜிஎம்பி ஐயா. உங்கள் தோற்றம்தான் முதுமை அடைந்திருக்கிறது. உங்கள் மனம் இத்தனைப் பிரவாகம் எடுத்து உடனுக்குடன கருத்துரை எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  7. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete
  8. ஐயா..ஆர்ஆர் அவர்களே மனம் நெகிழ்கிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  9. இதமான நன்றி மோகன்ஜி.

    ReplyDelete
  10. நன்றி வேல்கண்ணன்.

    ReplyDelete
  11. தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும் .
    \\எல்லாம் இணைக்கும்
    எல்லாம் மறக்கும்
    எல்லாம் மணக்கும்....//
    எல்லாம் இனிக்கும் .

    சுகமான வரிகள்.

    இரு சிறகுகள் முளைத்து
    பறந்துவிட்டு வந்ததை போன்ற உணர்வு.
    அருமை

    ReplyDelete