Saturday, April 9, 2011

மகிழ்ச்சி பரிமாறல்...என்னுடைய மகன் க.அ.குகன் தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழ்கத்தில் பி.டெக். பயோடெக்னாலஜி மூன்றாமாண்டு படித்து வருகிறான். இயல்பிலேயே ஆராய்ச்சி மனம் கொண்டவன். அவனுடைய திட்டமாக ஒரு ஆராய்ச்சியை முடித்துள்ளான். இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவே அதுபற்றிய எச்சரிக்கையை கைபேசி வழியாகத் தெரிவித்து மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவேத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கெனக் கைபேசியின் ப்ளூடூத் வழியாகக் கண்டறியும் வகையில் ஒரு பயோசென்சாரை வடிவமைத்திருக்கிறான். இதுகுறித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகத்திலும் (ஐஐடி) அதனைத் தொடர்ந்து சில கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்துள்ளமைக்கு சிறந்த ஆய்வு என்பதற்கான பரிசு வழ்ங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து அவனுடைய நேர்காணல் 7.4.2011 நாளிட்ட எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அவனுடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில் கைபேசி தயாரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மனித குலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் அதுதான் வாழ்வ்தின் அடையாளம் என்று சொல்லி மேலும் புற்றுநோய் தடுப்பிற்கும் ஏதாவது சிந்தனை செய் என்று வேண்டுகோள் வைததிருக்கிறேன்.

மேலும் மரபு சார்ந்த இசையிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உள்ளவன். அதேபோன் நல்ல கவிதைகளை இனங்கண்டு மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வான். உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ம்கிழ்ச்சியுடன்.

18 comments:

 1. சபாஷ் குகன்.

  குகன் அப்பாவுக்கும் ஒரு சபாஷ்.

  குகனின் செயல் பெருமிதமளிக்கிறது. எதிர்காலக் கண்டுபிடிப்புகள் வெற்றியடையப் ப்ரார்த்திக்கிறேன் ஹரணி.

  குகன் மூக்கு மட்டும் அப்பா. மற்றதெல்லாம் அம்மாவோ.

  ReplyDelete
 2. தந்தையின் பெருமையை உணர முடிகிறது.
  வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் :)

  ReplyDelete
 3. "செயற்க‌ரிய‌ செய்வார் பெரியார்"
  அறிவிய‌லால் வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கிடையே,
  அறிவிய‌லையே வ‌ள‌ர்க்கும் உங்க‌ள் புதல்வ‌னை
  எண்ணி விய‌க்கிறேன். வாழ்த்துக்க‌ள்.
  அந்த‌ நேர்காண‌லையும் இண‌த்திருக்க‌லாம்.

  ReplyDelete
 4. குகனுக்கும், அப்பா ஹரணிக்கும் என் வாழ்த்துகள்.
  உதவி செய்வதாக வாக்களித்துள்ள பல்கலைக் கழகம் செய்யும் என்று காத்திருக்காமல் முயற்சியோடு முட்டி மோதி அதனைப் பெறவேண்டும். அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. குகனுக்கு ஆசிகள். நல்லதோர் மகனைப் பெற்ற தாய்க்கு வணக்கம். தந்தைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 7. நல்ல விதை... நல்ல நிலம்... விளைச்சலும் அபரிமிதம்...!! மகிழ்வாயிருக்கிறது. வணக்கமும் வாழ்த்துகளும்!!பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு இதைவிட என்ன கைம்மாறு இருக்க முடியும்?!

  ReplyDelete
 8. அவையத்து முந்தியிருக்கச் செய்திருக்கிறீர்கள் தங்கள் பிள்ளையை,

  தங்கள் பிள்ளையும் எந்நோற்றான் கொல் எனச் சொல்ல வைத்திருக்கிறார். சந்தோசாமாய் இருக்கிறது ஹரிணி சார்

  ReplyDelete
 9. ஆஹா ஹரணி!
  கொஞ்சம் வேலை இருக்கு. நேரே வந்து பிள்ளையைப் பார்க்கிறேன்.கிஷோருக்கு நாளை இந்தப் பதிவைக் காட்ட வேண்டும். உங்கள் மகிழ்ச்சியில், உங்கள் பெருமிததில், உங்களொடு நானும்

  ReplyDelete
 10. மனமார்ந்த சந்தோஷமும், இந்த சாதனைக்கும், புதிய கனவுகளுக்கும், அவை நனவாவதற்கு வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும்!

  ReplyDelete
 11. மனம் மிக்க பெருமிதம் கொள்கிறது..

  ReplyDelete
 12. மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றிகள்.
  திரு சுந்தர்ஜி
  திரு நாகா
  திரு வாசன்
  திரு ஜிஎம்பி ஐயா
  திரு மோகன்ஜி
  திருமிகு நிலாமகள்
  திரு சிவகுமரன்
  திரு எட்வின்
  திருமிகு மிருணா
  திரு ஆர்ஆர் ஐயா

  ReplyDelete
 13. திரு குகனுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் செய்து மனித சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் உங்கள் வீட்டுக்கும் பெருமை சேர்க்கட்டும்.
  நன்றி.

  ReplyDelete
 14. நன்றி தங்களின் முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும். தொடர்ந்து வாருங்கள். நன்றி.

  ReplyDelete
 15. ஆஹா! ரொம்ப ரொம்ப மகிழ்வாக இருக்கிறது பதிவைப் படிக்க... உங்கள் புதல்வர் திரு.குகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

  ReplyDelete
 16. நன்றி ஜனா. உங்களின் இனிய வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும். நன்றிகள் ஜனா.

  ReplyDelete

Follow by Email