Sunday, May 29, 2011

வாசிக்க (சு) வாசிக்க


சமீபத்தில் படித்த புத்தகம் இது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் இது.

நல்ல பேச்சாளராகவும் நல்ல வாசிப்பாளராகவும் அவர் இருக்கிறார்
என்பதற்கு இந்தப் புத்தகப் பரிந்துரை சாட்சி.

புத்தகத்தின் பெயர் சாணக்ய நீதி ஸமுச்சயம். தஞ்சை சரசுவதி மஉறால்
நுர்லக வெளியீடு. சமஸ்கிருதத்தில் அமைந்த காகிதச்சுவடி. இதிலுள்ள
சுலோகங்களைத் தமிழ் வரிவடிவத்தில் அமைத்து பொழிப்புரை எழுதப்
பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர் மேற்படி நுர்லகத்தில் சமஸ்கிருதப்
பண்டிட்டாகப் பணிபுரியும் புலமையாளர் முனைவர் ஆ.வீரராகவன் அவர்கள்.

ஸமுச்சயம் என்பதற்கு தொகுப்பு என்பது பொருளாகும். சாணக்கியரால்
கூறப்பெற்ற நீதிகள் இதில் சுலோகங்களாக உள்ளன. அத்தனையும் வாழ்ககை
நீதிகள். அத்தனையும் அற்புதப் பயன் விளைவிப்பவை. அரசனுடைய கடமை
தீயோர்களை ஒடுக்கி நல்லோர்களாகிய மக்களைக் காக்கவேண்டும். அதற்காக
இதற்கு ராஜநீதி என்றும் அழைப்பார்கள்.

இதன் விலை முப்பது ரூபாய். அவசியம் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய
புத்தகம்.

இதிலிருந்து சில நீதிகள் / நெல்லிக்கனி சுவைபோல...


ஃ பணிவற்ற வேலையாள்.கொடைத்திறனற்ற அரசன்.கெட்ட நண்பர்கள்.
பணிவில்லாத மனைவி. நாலவரின் செய்கையும் தலையைத்துளைக்கும்
கொடிய வியாதிகள்.

ஃ மதிப்பும்,வேலையும்,சுற்றமும்,கல்வியும் எங்கு கிடைப்பதில்லையோ
அங்கு ஒருக்காலும் வசிக்கக்கூடாது.

ஃ சிறந்த அறிஞர்களாக இருந்தாலும் ஒரு பாமரச்சிறுவனின் நற்கருத்துக்களை
ஏற்கலாம். அது வயதான அனுபவம் வாய்ந்தவரிடமும்கூட கிடைக்காது.

ஃ முறையாக இருந்தால் பகைவரிடமிருந்தும் நல்லொழுக்கத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

ஃ செல்வச்சிதைவு,மனவருத்தம்,மனையில் நிகழும் தகாச்செயல்கள்,
வெகுமானம், அவமானம் ஆகியவற்றை அறிவாளி வெளிப்படுத்தமாட்டான்.

ஃ உணவு செரிக்காதபோது தண்ணீர் அருமருந்து. செரித்தபின் அது உடலுக்கு
வலிமை. உண்ணும் வேளையில் அம்ருதமாகும தண்ணீர் உணவின் முடிவில்
விஷமருந்தியதற்கு ஒப்பாகிறது.

ஃ பிறர் பொருளைக் காணும்போது குருடானாகவும், பிற பெண்டிருடன் பழகும்
போது அலியாகவும், பிறர்மீது குற்றம் சுமத்துகையில் ஊமையாகவும்
இருப்பவன் துர்ய்மையானவன்.

ஃ மிக அதிகமான புண்ணியங்கள்- மிக அதிகமான பாவங்கள் எதற்கும் பலன்
இப்பிறவியிலேயே கிடைத்துவிடும். 3 நாட்கள் அல்லது 45 நாட்கள் அல்லது
3 மாதங்கள் அல்லது 3 வருடங்கள் அதற்கான காலம். எனவே எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

ஃ வண்டிக்கு ஐந்து கை தொலைவும், குதிரைக்குப் பத்துகை தொலைவும்,
யானைக்கு ஆயிரம்கை தொலைவும், தீயவனுக்கு வெகுதொலைவும் என
விலகிச்செல்லவேண்டும்.

ஃ திரும்பப் பயிற்சி புரியாமல் கல்வியும், செரிக்காத நிலையில் உண்ணும்
உணவும், வறியவன் பலருடன் சேர்ந்து பொழுதுபோக்கலும், வயது முதிர்ந்த
வனுக்கு பருவ மங்கையும் விஷத்திற்கொப்பாகும்.


இவை சில சான்றுகள். 79 பக்கங்கள். அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்துவிடலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் அதற்குரிய சுலோகங்களுடன் அனுபவித்துப் படிக்கலாம்.>

18 comments:

 1. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் நோக்கில், நீங்கள் படித்த புத்தகத்தின் குறிப்புக்களையும், அப் புத்தகம் பற்றிய அறிமுகத்தையும் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றிகள் சகோ.

  ReplyDelete
 2. நல்ல முறையில் செய்யப்பட்டுள்ள நூல் அறிமுகம்.
  உதாரணங்கள் அருமையான நீதிக்கருத்துக்களாகவே உள்ளன.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அருமையான கருத்துகளைக் கொண்ட புத்தகம். பகிர்வுக்கு நன்றி.
  \\ உண்ணும் வேளையில் அம்ருதமாகும தண்ணீர் உணவின் முடிவில்
  விஷமருந்தியதற்கு ஒப்பாகிறது.//

  இதன் பொருள் எனக்கு புரியவில்லையே. எப்படி விஷமாகும் ?

  ReplyDelete
 4. நூல் அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 5. நன்றி நிருபன் சகோ.
  நன்றி வைகோ ஐயா.
  நன்றி எல்கே.

  ReplyDelete
 6. நன்றி சிவக்குமரன்.

  இதில் அறிவியல் உண்மை இருக்கிறது. சாப்பிடுவதற்கு முன் மட்டுமே தண்ணீர் அருந்தவேண்டும். அது கிரைண்டரில் அரிசிக்கேற்ற தண்ணீர் சேர்த்து அரைப்பதைப் போன்றது. சாப்பிட்டவுடன் செரிமானம் நடக்கிறவேளையில் தண்ணீர் அருந்தினால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நீர்த்துவிடுவதால் செரிமானம் தடைப்பட்டு சாப்பிட்ட உணவு அப்படியே தேங்கி விஷமாகிறது என்பதுதான் செய்தி. நன்றி.

  ReplyDelete
 7. ந‌ல்ல‌தொரு நூல் அறிமுக‌ம் கிடைத்த‌து. ந‌ன்று.ந‌ல்ல‌ன‌வெல்லாம் கால‌ம் க‌ட‌ந்தும் நிற்கின்ற‌ன‌. ஆட்சியாள‌ர்க்கு ம‌ட்டுமின்றி அனைவ‌ருக்கும் உரிய‌ அரிய‌ க‌ருத்துக‌ள். த‌ஞ்சை ஆட்சியாள‌ர் ப‌ற்றியும் உவ‌ப்ப‌ளிக்கும் த‌க‌வ‌ல். ந‌ன்றி அய்யா!

  ReplyDelete
 8. நன்றி நிலாமகள். அறிமுகமான சில நிமிடங்களிலேயே தரமான ஆட்சியாளரைச் சந்தித்த அனுபவம் அது. வாழ்வின் எதார்த்தங்களைப் பின்பற்றுபவர். வெரி பிராக்டிகல் மேன். நல்லமேடைப் பேச்சாளர். அதைவிட நல்ல புத்தகங்களை வாசிப்பதோடு அதனை அறிமுகம் செய்யும் விதமும் பாராட்டுக்குரியது. நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 9. எடுத்துக் காட்டிய மொழிகளே ஆர்வம் தூண்டின..

  ReplyDelete
 10. நன்றி ரிஷபன்.

  ReplyDelete
 11. அரிய பொக்கிஷங்களின் மகத்தான வரிகள் ஐயா... படிக்க வாய்ப்பு கிடைத்தது உங்க தளம் வந்ததன் மூலம்.... கண்டிப்பாக பயன் பெறுவார்கள் இந்த அருமையான வரிகளை படித்து அதன்படி நடக்க முயன்றால்... நானும் அப்படியே... அன்பு நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 12. தங்களின் முதல் வருகைக்கு நன்றி மஞ்சுபாஷிணி. கருத்துரைக்கு நன்றிகள். தொடர்ந்து வருக.

  ReplyDelete
 13. விளக்கத்திற்கு நன்றி அய்யா.
  நான் உணவருந்தும் வேளையில் இடையிடையே நீர் அருந்துகிறேன். தவறு என்கிறார்கள் . என்னால் தவிர்க்க முடியவில்லை. விக்கல் வந்து விடுகிறது.
  என்ன செய்வது ?

  ReplyDelete
 14. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் நோக்கில், நீங்கள் படித்த புத்தகத்தின் குறிப்புக்களையும், அப் புத்தகம் பற்றிய அறிமுகத்தையும் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றிகள்

  ReplyDelete
 15. எல்லாவற்றிற்கும் விதிகள் உள்ளன சிவகுமரன். முடிந்தவரை பின்பற்றுவோம். அவ்வளவுதான்.

  ReplyDelete
 16. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாலதி.

  ReplyDelete

Follow by Email