Sunday, January 1, 2012

தமிழால் வாழ்வோம்...


தமிழ் வாழ்க... தமிழ் மாண்பு வாழ்க..தமிழின் மேன்மை வெல்க.

தழைய இழையும் அழகிய முயலாய்
தாவி செழிக்குது இவ்வாண்டு
தந்திரம் இல்லை மந்திரம் இல்லை
உண்மையும் நேர்மையும்
ஓய்ந்தொலிக்குது இவ்வாண்டு
நம்பிக்கை ஒளிருது
உழைப்பு சிரிக்குது
உண்மையில் இவ்வாண்டு...

தமிழும் இனமும்
தன்மான உணர்வும்
வளமாய் வாழ்வில் பெருகியே
வந்து நிலைக்குது இவ்வாண்டு...

தமிழ்தான் நமக்கு
தாயாய் அன்னமிடும்
தளிர் இலக்கியக் கரத்தால் அணைத்திடும்
தளராத வண்ண வாழ்வில்
தம்மோடு நம்மையும் இணைத்திடும்..

தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட
தமிழோடு இவ்வாண்டைக் கொண்டாடுவோம்
பதிவுலகில் தத்தமது இலக்கில்
தங்ககொடி நாட்டிடுவோம்...
தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட..


துன்பம் ஒழியுது தொல்லைகள் தொலையுது
நன்மைகள் சேருது நாலுதிசையும் நமக்குத்தான்..
அசையாத வேராய் நம்பிக்கை
அடிமனத்தில் கொள்வோம்...


வணக்கம் வணக்கம் புத்தாண்டு
வணக்கம் தமிழால்..சொல்வேன்...
உடலின் உயிர் நிலைக்கும்வரை...

9 comments:

  1. நம்பிக்கை துளிர்க்கும் வரிகள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. "தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட" வரி வரும் வரை பொறுமையாய் வாசித்தேன்...வந்ததும் எப்படி வாசிக்க வேண்டுமென உணர்ந்து மறுபடியும் முதலில் இருந்து ஒரு பறை பாடல் போல வேகமாய் வாசித்து பார்த்தேன்...இன்னும் நல்லா இருந்தது...
    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    கவிதையில் சொல்லியது போல...தமிழர்களின் வாழ்வு இவ் ஆண்டில் மேன்மையுற்றால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  4. நல்ல கவிதை வரிகள்...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. சாமக்கோடாங்கியின் சத்தியவாக்கென வேகம் காட்டும் வரிகளுக்கு என் வணக்கம். தமிழால் வாழ்வோம். தமிழாய் வாழ்வோம். பாராட்டுகள் ஹரணி சார்.

    ReplyDelete
  6. ஒரு கோடி சிந்தனை பூக்கள் புத்தாண்டில் பூக்க வாழ்த்துக்கள் திரு.ஹரணி.

    ReplyDelete
  7. தத்தகிரிட தத்தகிரிட தித்தோம் .
    மனம் துள்ளுகிறது. பாரதியின் தமிழ் இன்னமும் நம்மிடையே அங்கங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கையில் மனம் விமுகிறது ஹரணி.
    புத்தாண்டு நமக்கானதாய் , நந்தமிழுக்கானதாய் இருக்கட்டும். சொல்லும் போதே விழிகளில் நீர் அரும்புகிறது.

    ReplyDelete
  8. ரொம்பவே அழகான கவிதை...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. ஜக்கம்மாவின் அருளாசி பெற்று வாக்கு சொல்லும்
    கோடாங்கியின் வாக்கு பொய்ப்பதில்லை
    அந்த சந்தத்திலேயே உயர்வானவைகளை
    வேண்டும் உங்கள் வாக்கும் நிச்சயம் பொய்க்காது
    அருமையான மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete