Monday, March 12, 2012


        எஜமானியின் வசவில் எழும்
        கண்ணீர்த் துளிகளை
        துலக்கும் பாத்திரங்களின்
        அழுக்கோடு நீக்குகிறாள்
        கண்களிலிருந்து
        தன் வீட்டின்
        முகப்பில் விளையாடும்
        பிள்ளைகளை எண்ணியபடி

       -----------------------------------------------------

       நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில்தான்
      வாழ்க்கையோடுகிறது என்றாலும்
      அவற்றின் அறியா வண்ணம்
      வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும்
      உயிர்ப்பாக்குகிறது
      வாழ்தலின் பிடிப்பும்
      நம்பிக்கையும்
      தேடலின் உழைப்பும்
      மனிதனாக்கும்
      வாழும் வரைக்கும்.....
      உணர்ந்து மீறலில்
      சிதைந்துபோகிறது எல்லாமும்
      சபிக்கப்பட்ட புலம்பல்களினுர்டாக

      0000000000000000000000000000000

      புத்தனின் சிரிப்பை
      பேசிய பூமியில்
      புத்தனின் மௌனத்தை
      கல்லறைகளில்
      மொழிபெயர்க்கிறது
      ஒரு கூட்டம்...

       ••••••••••••••••••••••••••••••••••••••

       (நன்றி -----  குறி... இலக்கிய மாத இதழ்....திண்டுக்கல்...
            மார்ச்-ஏப்ரல் 2012)

7 comments:

  1. //எஜமானியின் வசவில் எழும்
    கண்ணீர்த் துளிகளை
    துலக்கும் பாத்திரங்களின்
    அழுக்கோடு நீக்குகிறாள்
    கண்களிலிருந்து
    தன் வீட்டின்
    முகப்பில் விளையாடும்
    பிள்ளைகளை எண்ணியபடி
    //

    எஜமானியின் வசவில் எழும்
    கண்ணீர்த் துளிகளில்
    துலக்கும் பாத்திரங்களின்
    அழுக்கை நீக்குகிறாள்
    கண்களிலிருந்து
    தன் வீட்டின்
    முகப்பில் விளையாடும்
    பிள்ளைகளை எண்ணியபடி

    ippadi potta eppadi irukku

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தளத்திற்கு வந்துள்ளேன்...(பதிவுலகிற்கும்.. :) )
    நல்லதோர் படைப்பு.. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. முதல் கவிதையில் கொஞ்சம் அழுத்தம்,கலக்கம்,ஏக்கம்..அருமை...

    ReplyDelete
  4. முதல் கவிதையில் விழுந்தேன்..

    ReplyDelete
  5. வாழ்வியலின் சில பகுதிகள் சித்தரிக்கப்பட்ட முறை அருமை.

    ReplyDelete
  6. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

    ReplyDelete
  7. முதல் கவிதையில் துளிர்த்த கண்ணீர் மூன்றாவது கவிதையில் வழிந்தது குருதியாய்

    ReplyDelete