Sunday, June 10, 2012

சொற்காத்தல்



                     பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான். பேசிய வார்த்தை நமக்கு எஜமான்  என்று பழமொழி உண்டு.

                      வள்ளுவர் இதைத்தான் ,,,, நா காக்க என்றார்,

                     என்ன பேசுகிறோம் என்பதில் தெளிவில்லாமல் சமயங்களில் நினைவிழந்து வார்த்தைகளைக் கொட்டி இறைக்கிறோம். நெல்லை கொட்டினால் அள்ளமுடியும் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பார்கள்,

                     இனிய சொல் பேசுகிற நாவையும் மனத்தையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று நீதிநுர்ல்கள் வலியுறுத்துகின்றன,

                     புரிதலை உருவாக்கிக்கொள்ளப் பேசத்தொடங்கி கடைசிவரை புரிதல் இல்லாமல் அவஸ்தைப்படுகிறோம். அவமானப்படுகிறோம். அல்லல் படுகிறோம்.

                     இன்றைக்கு நிகழ்ந்த நிகழ்வு மனதில் உறுத்திக்கொண்டேயிருக்க இந்தப் பதிவை எழுதுகிறேன்.

                     என்னுடைய அம்மா வீட்டுத்தெருவில் இருக்கிறது அந்த உறவினர் வீடு. துர்ரத்து உறவில் அவர் எனக்கு சித்திமுறை. அவருக்கு ஒரு பையன். பொறியியலில் முதுகலை முடித்துவிட்டு ஒரு கல்லுர்ரியில்  விரிவுரையாளராகப் பணிபுரிகிறான். அவனுக்குத் திருமணமாகி நாலைந்து வருடங்கள் ஆகின்றன. ஒரேயொரு குழந்தை. பள்ளிக்கு செல்லும் பருவம்.

                    சித்தப்பா அளவுகடந்த பொறுமை. சித்தியும் அப்படித்தான்,. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.  அவருடைய மருமகள் இன்று காலை பத்து மணிக்கு முன்னதாக வரை நன்றாக இருந்திருக்கிறாள். அதற்குப் பின்னர் குறுகிய நிமிடங்கள் பிள்ளையோடு  மாடியில் துர்க்கில் தொங்கிவிட்டாள். உயிரும் போய்விட்டது. குழந்தை தப்பித்திருக்கிறது.  அந்தப் பெண்ணின் சித்தப்பா (வளர்ப்புத்தந்தை) காவல்துறையில் பணிபுரிய விவகாரம் பெரிதாகி பெண் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யவும்,,, சித்தப்பா சித்தி,,,அவர்களின் பையன் ஆகியோரை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டார்கள். வீட்டைக் காவல்துறை பூட்டிவிட்டார்கள்.

                 அதற்குள் செய்தியறிந்து பெண் வீட்டார் வந்து சித்தி. சித்தப்பா மற்றும் அவரது மகனைத் தாக்கியிருக்கிறார்கள்.  உடனே அவர்களைக் காப்பாற்றி பக்கத்துவீட்டில் அடைக்கலம் வைத்து பின் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்  சென்றிருக்கிறார்கள்.

                சித்தி. சித்த்ப்பா இருவரும் பணிஓய்வு பெற்ற நாள் வரை தெருவில் யாருடனும் பிரச்சினை இல்லை. சுமுகமான பழக்கம்தான். இருக்கிற இடமே தெரியாது. அதற்கான நேரமும் அவர்களுக்கு இல்லை. காலையில் வேலைக்குக் கிளம்பினால் மாலைதான் அந்த வீட்டிற்குள் வருவார்கள். நான்குபேரும் நான்கு திசைகளில்.

              என்ன நடந்திருக்கும்? எல்லாமே ஊகங்களாவே பேச்சுக்கள் இருக்கின்றன,

              சொற்களின் வலிமை நிமிடத்திற்குள் யோசிக்கவிடாமல உயிர் மடிக்க வைக்கிறது,

                   பேசி தீர்த்துக்கொள்ளவேண்டியதை பேசி உயிர் தீர்ப்பதா?

                    யாரை குறைசொல்லமுடியும்?

                    கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று இரவு முழுக்க காவல் நிலையத்தில் இருப்பார்கள். விசாரணை முடியும்வரை அவர்கள் இருக்கவேண்டும். நிம்மதியாக உறங்கும் இரவில் இன்றைய இரவு அவர்களுக்கு சபிக்கப்பட்டுவிட்டது. மனம் கலங்குகிறது.

                  ஆனாலும் யார் தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனை என்பது வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

                     ஏனெனில் வாழவேண்டிய ஒரு குருத்து சிதைந்துபோய்விட்டது.

                     அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இனி என்ன ஆதரவு?

                      பரஸ்பரம் யோசித்துப் பார்த்தால் பேசாதிருந்திருக்கலாம் என்று தோணியிருக்கும். நிமிடத்தில் எடுக்கிற முடிவு உயிர் இழப்பாகிவிட்டது. .

                      இதைத் தடுத்திருக்கலாம் அல்லவா?

                      சொற்காத்தல் என்பது எத்தனை முக்கியமானது?

                      சொற்கள் உதிர்வதற்கும் விளைவுகள் ஏற்படுவதற்கும் அதன் பின்னர் இன்னல் அனுபவிப்பதற்கும் எல்லாம் சொற்பநிமிடங்கள்தான். சொற்ப வார்த்தைகள்தான்.

                            யோசிக்கவேண்டும் சொற்காத்தல் பேண.

8 comments:

  1. குழந்தையின் நிலை தான் பரிதாபம்

    ReplyDelete
  2. மனதை வலிக்க செய்தது பதிவு ஆனாலும் யோசிக்க வேண்டிய விஷயம் இந்த வார்த்தைக்கு தான் எத்தனை கூர்மை,...........அருமையாக வார்த்தைகளை செதுக்குரீர்கள்

    ReplyDelete
  3. கனக்கிறது மனம். நிகழ்ந்ததை எப்படியேனும் தடுத்திருக்கலாமோ என்று அலைபாய்கிறது..

    ReplyDelete
  4. படித்ததும் மனதை என்னவோ செய்கிறது. அந்தக்குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

    // சொற்கள் உதிர்வதற்கும் விளைவுகள் ஏற்படுவதற்கும் அதன் பின்னர் இன்னல் அனுபவிப்பதற்கும் எல்லாம் சொற்பநிமிடங்கள்தான். சொற்ப வார்த்தைகள்தான்.

    யோசிக்கவேண்டும் சொற்காத்தல் பேண.//

    ஆமாம் ஐயா. மிகவும் நல்லதொரு அறிவுரை தான். நன்றி.

    ReplyDelete
  5. மனத்தை மிகவும் நெகிழ்த்திய விஷயம். கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது. போன உயிரை மீட்கவும் இயலாது. குழந்தையின் எதிர்காலம்? இந்த செய்தியைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு பாடம் இது. இனியேனும் எந்தத் தருணத்திலும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளின் வெளிப்பாடு நிகழாதிருக்கட்டும். கனத்த மனத்துடன் போகிறேன்.

    ReplyDelete
  6. நிகழ்வைப் படிக்கையில் யாரோ வார்த்தைகளை அளவுக்கதிகமாகப் பிரயோகித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.உணர்ச்சி வேகம் படித்தவர் பாமரர் என்று யாரையும் விடுவதில்லை. சில சமயம் வார்த்தைகளுக்கு எண்ணிப் பார்க்கப் படாத பொருளும் உண்டு என்று தெரிவதில்லை. சில நாட்களுக்கு முன் வார்த்தை என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

    ReplyDelete
  7. அன்பின் ஹரணி

    மிக ஆழமான தேவையான பதிவு. கற்றுக் கொள்ள இருக்கிறது இந்தப் பதிவில். கற்றுக் கொள்கிறேன்.

    ஆமாம் ஹரணி குழந்தை என்ன ஆனாள்?

    உடைகிறது ஹரணி.

    ReplyDelete
  8. மனம் கனத்துப் போனது.அந்தச் சூழலை நினைத்தால் நடுங்குகிறது உள்ளம்.

    ReplyDelete