Tuesday, July 16, 2013

ஜால்ரா.....குறுந்தொடர்,,,7
                          வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் தொடங்கியிருந்தன.

                           வெளிச்சுவர் முழுக்க சரி செய்தாகிவிட்டது.

                           வேணுகோபால் தன்னுடைய செலவில் குங்கும வண்ணமும் யானைத் தந்த வண்ணமுமான டைல்ஸ்களை ஒட்டி அழகாக்கியிருந்தார்.
துர்ரத்தில் இருந்து பார்த்தாலும் தெரிந்துவிடும் அது கோயில் என்று.

                             அது சரியான கோயில் வண்ணத்தில் பொருந்தியதில் வேணுகோபாலுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.

                            யாராவது கேட்டால்  எனக்கென்னங்க தெரியும்.. அவருக்குத் தெரிஞ்சிருக்கு.. என்ன் செய்யுடான்னு கேட்டு வாங்கிட்டாரு..என்ன அம்சமா இருக்கு பாருங்க சுவரு... என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அப்படி பேசும்போதெல்லாம் வலம்புரி விநாயகரையும் பார்த்து கும்பிட்டுப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டார்.

                              வீட்டில் தாமோதரன் மனதுக்குள் பல திருட்டுப் பூனைகள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தன.

                               சேச்சே.. அந்த  சாமியார் சிலை அவன் வீட்டுல மாட்டிடிச்சி...
தெரிஞ்சிருந்தா அப்பவே மாத்தியிருக்கலாம்.. இன்னைக்கெல்லாம் லட்சக்கணக்கில போவும்.. என்ன அம்சமா இருக்கு.. அது கையில இருந்த ஜால்ராவே அன்னிக்கு நல்ல விலை ஐம்பொன்னுன்னு அள்ளிட்டுப் போயிட்டான்.. அதுவும் ஞானப்பால் குடிச்ச குழந்தைக்கிட்ட இருந்ததுதுன்னு பெருமையா வரலாறு சொல்லி வாங்கிட்டுப்போயிட்டான்.. இனி ஒண்ணும் பண்ணமுடியாது.. பேசாம வாய விடாம இருந்திருந்தா அவன் வீட்டுலேயே வச்சிருப்பான்.. சமயம் வரும்போது ஆட்டய போட்டிருக்கலாம்.. நம்ப வாயாலே பேசி அவனை கோயில்ல கொண்டு வந்து வக்க வச்சிட்டோம்.. பாப்போம்.. சமயம் கிடச்சா மாத்திடலாம்.. அதுக்குள்ள அதுமாதிரி ஒரு மாதிரி எடுத்து வச்சிடணும்.. கும்பாபிஷேகம் முடியட்டும்..

                              சட்டென்னு சட்டையை மாத்திக்கொண்டு கோயிலுக்கு வந்தார்.

                              ஆட்கள் உள்வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

                              எப்பய்யா முடிப்பீங்க?

                              முடிச்சிடுவோங்க... இன்னும் பின் பிரகாரச் சுவரு மட்டும்தான் பாக்கி..

                               இதையேதான் நாலுநாளா பேசறீங்க?  வாய்தான்.. வேலை ஓடமாட்டேங்குது..

                              இல்லங்கய்யா முடிச்சிடுவோம்..

                              அந்த வேணுகோபால் தானே உங்கள வச்சது.

                              ஆமாங்கய்யா..

                              ஆமா வேலைய இழுத்து செய்யறதுக்கு எவ்வளவு கமிஷ்ன் பேசியிருக்கீங்க அவன்கிட்ட

                               ஐயா.. என்ன இப்படி கோயில்ல தப்பா பேசறீங்க.. அவரு எங்ககிட்ட கோயில்காரியம் கொறச்சு வாங்கிக்கங்கன்னாரு.. நாங்களே ஒருநாள் கூலிய வேண்டாம்னுட்டுத்தான் செய்யறோம்.. கோயில் காரியம்.. எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டும்னு...

                                நல்லா பேசறீங்கய்யா.. சரி.. வேலைய முடியுங்க..

 என்றபடி உள்ளே திருஞானசம்பந்த்ர் சிலையைத் தேடினார்.

                              உள்ளே கருவறைக்குள் போனார். உள்ளே இடது பக்கத்தில் நின்றிருந்தார் ஞானசம்பந்தர்.

                              சட்டென்று தன்பையில் இருந்து கேமிரா செல்போனால் அதைப் படம்பிடித்தார்.. மாதிரி வேண்டுமே..

                              பிடித்துவிட்டு வெளியே வரும்போது வேணுகோபால் நின்றுகொண்டிருந்தார்.

                              என் பையன் அருட்பிரசாத கவரு ஆயிரம் போடணும்னு சொன்னான்.. அதான் விநாயகரைப் படம் பிடிச்சேன்... தானாகப் பேசினார்.

                             நான் எதுவும் கேக்கலியே... எதாச்சும் செய்... என்றார் வேணுகோபாலன்.

                              நமக்கு வாயிலேயே சனி என்று நினைத்துக்கொண்டு தாமோதரன் தனக்குள் பேசியபடி கோயிலை விட்டு வெளியே வந்து வீடு நோக்கிப்போனார்.

                             எதிர்வீட்டில் எப்எம் பாடியது.. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..

                             வலம்புரி விநாயருக்குப் பெரிதாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேணுகோபால் அப்படியே தரையில் உட்கார்ந்துகொண்டார். வெளியிலிருந்து காற்று சிலீரென்று உள்ளேபோய் அவரின் முகத்தில் மோதியபோது உடம்பு மனசு எல்லாம் குளிர்ந்ததுபோலிருந்தது. ஒருமுறை திரும்பி விநாயகரைப் பார்த்துக்கொண்டார்.

                             தனம் மனம் முழுக்க வேதனைப் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன, இத்தனைகாலம் கோயில் வாசலில் கிடந்ததுக்கு இப்படியொரு பழியா?

                             மனம் கொள்ளாமல் தவித்தாள்.

                             துவண்டு துவண்டு படுத்தாள்.

                             என்னம்மா ஆச்சு? என்றாள் மகள்.

                             ஒன்றுமில்லையென்று  சொல்லி சமாளித்தாள்.

                              அன்று மாலை குமரேசன் வீடுதேடிப் போனாள். குமரேசன் தவில் வித்வான். தன்மையானவன்.

                               வாங்க  தன்த்தக்கா என்றான்.

                                நல்லாயிருக்கியா தம்பி..

                                நல்லாயிருக்கேன் அக்கா.. சொல்லுங்க என்ன செய்தி? என்றான்.

                               உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா.
என்றாள்.

                                சொல்லுங்கக்கா.. என்றான்.

                               தன் இடுப்பு சுருக்குப் பையை விடுவித்து அதிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

                                  என்னக்கா இது?

                                  பிரிச்சுப் பாருப்பா... என்றாள்.

                                                                                                          (ஜால்ரா ஒலிக்கும்)

                                 

                            

8 comments:

 1. காணாமல் போனது கிடைத்து விட்டதா...?

  ஆவலுடன்...

  ReplyDelete
 2. சுருக்குப்பை பொட்டலத்துக்குள் என்ன இருக்கும்!... தனத்தின் மனக்கவலை தீர்ந்தால் சரி!..

  ReplyDelete
 3. பொட்டலத்தில் இருந்ததைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன்

  ReplyDelete
 4. சுருக்குப் பைக்குள் என்ன?..... ஆவலுடன் நாங்களும் காத்திருக்கிறோம்....

  ReplyDelete

 5. கதையின் முடிச்சு அவிழப் போகிறதா.?ஹரணிஐயா, நெடுங்கதைகள் இடைவெளி அதிகம் விட்டு வந்தால் நினைவில் இருத்த மீண்டும் பழைய இடுகைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. சிரமம் தவிர்க்கலாமே.

  ReplyDelete
 6. வீட்டில் தாமோதரன் மனதுக்குள் பல திருட்டுப் பூனைகள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தன.

  படம் பிடித்துக்காட்டிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 7. அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு...

  வணக்கம். தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். தங்களின் சிரமத்திற்கு மன்னிக்கவும். காரணம் என்னுடைய பணிப்பளுவால் உடனடியாக அடுத்த நாள் எழுதவேண்டும் என்கிற முயற்சி எடுத்தும் தவறிவிடுகிறது. சிலசமயம் நான் வீட்டிற்கு வருவதே 10 மணிக்கு மேலாகிவிடுகிறது. அப்போது உட்காரலாம என்றால் மின்வெட்டு அப்படி மின்வெட்டு இல்லையென்றால் இணையம் பணியாற்ற மறுக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இனிவரும் தொடரில் இப்படி நேராது.

  திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
  திருமிகு துரை செல்வராஜ் அவர்கள்
  திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
  திருமிகு வெங்கட் நாகராஜ் அவர்கள்
  சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள்

  உங்கள் அனைவரின் கருத்துரைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புடையீர்!... தங்களின் மேலான விளக்கத்தினைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டது!...

   Delete

Follow by Email