Thursday, July 25, 2013

மூன்று செய்திகள்.....அன்புள்ள...


                     ஹ ர ணி வணக்கமுடன்.

                     மூன்று செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மகிழ்கிறேன்.


                    ஒன்று


                                புதிய தரிசனம் என்று ஒரு இலக்கிய மாதமிருமுறை இதழ்
வெளிவருகிறது. இதில சிறந்த வலைப்பக்கங்கள் பற்றி மதிப்பிற்குரிய திரு எட்வின்(நோக்குமிடமெல்லாம நாமன்றி வேறில்லை வலைப்பக்கம்) அவர்கள் எழுதப் பத்திரிக்கை கேட்டுள்ளது. அதன்படி இந்த மாதம்
இரண்டாம் இதழில் என்னுடைய வலைப்பக்கம் பற்றி எழுதியுள்ளார்.

                  இரண்டு

                                 மானா மதுரையிலிருந்து  வளரி எனும் இலக்கிய இதழ் வருகிறது. இதன் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன். ஒருநாள் இரவில் என்னுடன் கைப்பேசியில் தன்னை அறிமுகம் செய்துகொண்டு நாங்கள் மாதா மாதம் இலக்கிய இதழ்களில் வரும் சிறந்த கவிதைகளைத் தெரிவு செய்து அதற்கு கவிப்பேராசான் மீரா விருது அளிக்கிறோம். அந்தவகையில் சென்ற மே மாதம் கணையாழியில் வந்த எனது கவிதை ஆறுதல் என்னும் தலைப்பிலானது தெரிவுசெய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்து வாழத்துத் தெரிவித்தார். உங்களின் முன்னதாக அவருக்கு மீண்டும் எனது நன்றிகளைத்
தெரிவித்துக்கெர்ள்கிறேன்.

                  மூன்று

                  மொரீஷியசில் மகாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஒன்று உள்ளது. இது அரசு கல்வி நிறுவனமாகும்.  இதில் என்னுடைய நண்பர் பேரா. கேசவன் சொர்ணம் தமிழ்த்துறையின் தலைவராக உள்ளார். அவருக்கு என் சில புத்தகங்களை அனுப்பிவைத்தேன். அதில் ஒரு புத்தகம் பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா  என்பதாகும். இது அவர்கள் கல்வி நிறுவனத்தில் பார்வை நுர்லாக வைக்கப்பட்டுள்ளதையும் பாடத்திற்கு உதவியாக உள்ளதையும் தெரிவித்தார்.

                       இது உங்களின் பகிர்தலுக்கு.

                     
                    0000000000000000


                   அடுத்த குறுந்தொடரின் தலைப்பு ..........

                                              எழுதப்படாத உயில்...

21 comments:

 1. மகிழ்வூட்டும் செய்திகள்
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மிக்க மகிழ்ச்சி
  தங்களைத் தொடர்பவராக இருப்பது
  பெருமிதம் கொள்ளச் செய்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மேன்மேலும் பல சிறப்புகளை எய்துதற்கு வாழ்த்துகின்றேன்!...

  ReplyDelete
 3. மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 4. மீண்டும் கூறுகிறேன். மேவு புகழ் பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 6. அன்புள்ள ரமணி சார் அவர்களுக்கு

  ஹ ர ணி வணக்கமுடன்.

  நான் விரும்பிப் படிக்கும் வலைப்பதிவுகளுள் உங்களுடைய வலைப்பதிவும் இருந்தது. இப்போது உங்கள் வலைப்பதிவை என்னால் வாசிக்கமுடியவில்லை. நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொருண்மைகள் எப்போதும் எனக்குப் பிடித்தவை. எனக்குக் கணிப்பொறி தொழில்நுட்பம் அதிகம் தெரியாததால் வலைப்பூவின் அமைப்பில் ஏற்படுத்தும் வடிவங்களைக் கண்டு உள்ளே புகமுடியவில்லை. உங்கள் பதிவுகளை வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள்.

  தங்களின் வாழ்த்துரைக்கு நன்றிகள்.  ReplyDelete
 7. அன்புள்ள செல்வராஜ் சார்

  எப்படியிருக்கீங்க? உங்கள் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு கரந்தையில் நாம் உரையாடிய உரையாடல்களே நினைவுக்கு வருகின்றன.
  எப்போது தஞ்சை விஜயம்?

  தங்கள் பாராட்டுரைகளுக்கு நன்றி,

  ReplyDelete
  Replies
  1. அன்புடையீர்!.. வணக்கம். நலம். நலமறிய ஆவல். அடுத்த சில மாதங்களில் வருவதற்கு உத்தேசித்துள்ளேன்!.. மீண்டும் சந்திப்போம்!.

   Delete
 8. அன்புள்ள திண்டுக்கல் தனபாலன்

  உங்கள் வலைப்பதிவிற்கு வரும்போதெல்லாம் வியந்துபோகிறேன். என்னென்னவோ விந்தைகள் செய்கிறீர்கள வடிவமைப்பில், வடிவமைப்பில் மட்டுமல்ல எடுத்துக்கொள்ளும் சமுகப் பொருண்மைகளும் அருமையானவை.

  தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

  தங்களின் அனுபவ வாழ்த்திற்கு நன்றிகள் பல.

  என்றும் நினைவில் கொள்வேன்.

  எப்போதும் ஒன்றிற்காகப் பாராட்டு பெறும்போது வெகு கவனமாகவே அடுத்த பயணத்தைத் தொடர்கிறேன். பெறுவதைவிதைவிட பெற்றதைத் தக்கவைத்தல்தான் வெகு சிரமமானது.

  நன்றிகள்.

  ReplyDelete
 10. அன்புள்ள சுப்பு தாத்தா

  வணக்கம்.

  நன்றிகள்.

  தொடர்ந்து வாருங்கள். காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. விருதுக்கும் சிறப்புக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ஹரணி சார். தங்களுடைய ஆறுதல் கவிதை வலைப்பூவில் இருக்குமானால் சுட்டி தாருங்கள். வாசித்து மகிழ்வேன். நன்றி.

  ReplyDelete
 12. மகிழ்ச்சி தந்த செய்திகள்....

  வாழ்த்துகள்....

  ReplyDelete
 13. மனமார்ந்த பாராட்டுகள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. விருதிற்கும் சிறப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா.

  ReplyDelete
 15. விருதுகளுக்கும் சிறப்புகளுக்கும்
  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..
  பாராட்டுகள் ஐயா...!

  ReplyDelete
 16. அன்புள்ள கீத மஞ்சரி அவர்களுக்கு

  தங்களின் அன்பான வாழ்த்துரைக்கு நன்றிகள்.

  இன்றைய பதிவில் கணையாழி கவிதையைப் பதிவிட்டுள்ளேன்.

  மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
 17. அன்புள்ள வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு,,

  தங்களின் இனிய வாழ்த்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 18. அன்புள்ள செல்லப்பா ஐயா

  அவர்களுக்கு வணக்கம்.

  சமீபமாக உங்கள் வலைப்பதிவின் பல பதிவுகளைப் படித்துவிட்டேன். எல்லாம் புதிய சுவையான செய்திகள்.
  தொடர்ந்து வாசிக்கிறேன்.

  தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 19. அன்புள்ள ஜெயக்குமார்..

  வணக்கம்.

  உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் என்னை மேலும் பயணிக்க வைக்கிறது. இருப்பினும் பெற்றதைத் தக்கவைக்கவேண்டும் குறையாமல் என்கிற பயமும் இருக்கிறது.

  தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 20. அன்புள்ள இராஜேஸ்வரி அவர்களுக்கு

  வணக்கம்.

  தங்களின்அன்பான வாழத்துக்ளுக்கு நன்றிகள்.

  ReplyDelete

Follow by Email