Sunday, July 7, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்... விமர்சனம்



              மதுமிதா எனும் பெயரில் எழுதும் பி.சந்தானகிருஷ்ணன்  என்
நண்பன்.
              பள்ளி முதல் கல்லுர்ரி வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
              எனக்கு முன்னால் எழுத்துலகில் தடம் பதித்தவன்.
              சின்ன சின்ன சொற்களால் வசீகரிப்பவன்.
              எழுதும்போது வேகமாக எழுதுவான். ஆனால் கதையிலோ காதல்
கொஞ்சும். நட்பு இளகும். பரிவு இழையும். பளிச்சென்று ஒளிரும் நடை.
               இருவரும் சேர்ந்து கரந்தை நுர்லகத்தில் படைப்புலகம் சார்ந்த
ஒரு புத்தகத்தைக்கூட விடாது வாசித்தவர்கள்.
               துர்ரத்திலிருந்தே இருவரும் அட்டையைக் கொண்டே அது எந்தப்
புத்தகம் என்று அடையாளப்படுத்திவிடுவோம்.
               கரந்தை சாந்தி டீக்கடையில் நின்று மணிக்கணக்கில் பல டீக்கள்
குடித்தும் இலக்கியமும் படைப்பும் பேசியிருக்கிறோம்.
                 நிறைய எழுதிக் குவித்திருக்கிறோம்.
                 இன்னும் அவன் எழுத்தின்மேல எனக்கு ஒரு காதல் இருந்துகொண்டே இருக்கிறது.
                 அபாரமான வாசிப்பிற்குரியவன். நன்றாக நினைவிலிருத்துபவன்.
                 இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது எங்கள் நட்பு நதி. வற்றாமல் வாடாமல் வளங்குன்றாமல்.
                  என் நண்பன் என்னுடைய நத்தையோட்டுத்தண்ணீருக்கு எழுதிய கடிதம் (விமர்சனம்....) இதோ.
                 
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அன்பு ஹரணி,
வாழ்த்துக்கள்.
எழுதி,எழுதி உனக்கென ஒரு நடையை
உருவாக்கிக் கொண்டுள்ளாய்.
புனைவு எழுதுவதைவிட அபுனைவு எழுத
கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவை.
அது உன்னிடம் நிறைய உள்ளது.
மிகத் தாமதமாகத்தான் உன்னுடைய
 நத்தையோட்டுத் தண்ணீர்
வாசித்தேன்.
தண்ணீருடன் நிறைய முத்துக்களும்.
புத்தியிலிருந்து கொஞ்சமும்,
மனசிலிருந்து கொஞ்சமும்
எழுதியுள்ளாய்.
எனக்குப் பிடித்தது மனசிலிருந்து
எழுதியத்தைத்தான்.
வடவாற்றங்கரையில்..
சில அர்ப்பணிப்புக்கள்..
நம்பிக்கையான அனுபவ வைத்தியம்
இன்ன பிற.
வடவாறு கோடையிலும்
நம் மனசுள் சுழித்து ஓடிக்கொண்டிருக்கும்.
உனக்குக் கொஞசம் கூடுதலாய்.
இது கரந்தை நமக்குக் கொடுத்தக் கொடை.
QUALITYயும், QUANTITYயும் இணையாது எனும்
பொது புத்தியை உடைத்தவன் நீ.
நிறையவும்,நிறைவாகவும் எழுதுகிறாய்.
உன்னை ஒருமையில் விளித்தது உரிமையில்.

மீண்டும் என் வாழ்த்துக்கள்.

P.சந்தானகிருஷ்ணன்.


 


                 
            


8 comments:

  1. நல்ல விமர்சனம் ஐயா...

    Quality உயர்ந்தால் தானாக Quantity உயரும் என்பது ISO-வில் ஒரு விதி...

    P.சந்தானகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. //QUALITYயும், QUANTITYயும் இணையாது எனும் பொது புத்தியை உடைத்தவன் நீ.நிறையவும், நிறைவாகவும் எழுதுகிறாய்.//

    திரு. P. சந்தானகிருஷ்ணன் அவர்களின் பாராட்டுக்கள் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது எங்கள் நட்பு நதி. வற்றாமல் வாடாமல் வளங்குன்றாமல்.

    வாழ்த்துக்கள்...!!

    ReplyDelete
  4. நத்தையோட்டுத் தண்ணீரில் முத்தைக் கண்டறிந்த நல்லதொரு விமர்சனம். எழுத்தாளர் பி.சந்தானகிருஷ்ணன் அவர்களைப் பற்றி அறிந்துகொண்டேன். நன்றி.

    இனிய வாழ்த்துக்கள் ஹரணி சார்.

    ReplyDelete
  5. வசிஸ்டர் வாயால்
    பிரம்ம ரிஷி எனப் பெயர்பெற்றுவிட்டதுபோல்
    சிறந்த பதிவர் ஹரணி அவர்களிடம் இருந்து
    மிகச் சிறந்த பாராட்டைப்பெற்ற
    சந்தான கிருஷ்ணன் அவர்களுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மகிழ்வான வாழ்த்துக்கள்... நண்பர்கள் இருவருக்கும்!

    ReplyDelete
  7. அன்புடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete