Thursday, March 6, 2014


வணக்கம்


                     இவ்வாண்டு இப்போதுதான் வர முடிந்தது.

                     கணிப்பொறியை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாத சூழல்.

                     இன்னும் பணிகள் விடவில்லை.

                     இருப்பினும் வந்திருககிறேன்.

                     எப்போதும் போலவே உங்களின் அன்பு வேண்டி


                    0000000000000000000000000000000


                    இந்த வாரம் விகடனில் வந்த கவிதையிலிருந்து தொடங்குகிறேன்.



                    சொற்பறவையின் முதலொலி 


                    எங்கேனும்
                    முகமறியாமல் கேட்கும்
                    பறவையின் மெல்லொலியில்
                    நம் மிருவருக்கிடையிலான
                    காதலின்
                    முதல் சொல்லை
                     புதுப்பித துக்கொள் கிறேன்
                     கடைசிப பேருந்தின் ஒலி கரைந்துவிட்ட
                    இருளின் அமைதியில் காத்திருக்கிறேன்
                    உன் கைபபேசியின் கூடுடைத்து வரும்
                    சொற்பறவையின் முதலொலியைக்
                    கேட்க.

                     ( நன்றி : ஆனந்த விகடன்  12.3.2014)


------------------------------------------------------------------------------------------------


                       என்

                       நத்தையோட்டுத் தண்ணீர்

                       நூலுக்கு
                       சேலம் அருணாசலம்
                       அறக்கட்டளைச் சார்பில்
                       சிறந்த நூலுக்கான
                       முதல் பரிசு
                       கிடைத்துள்ளது .


                        00000000000


                     

17 comments:

  1. அன்புடையீர்.. வணக்கம்.
    தங்களின் கைவண்ணம் காணும் போது
    மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  2. தேர்வு நேரத்தின் தீவிரத் தாக்குதலைச் சமாளித்துக்கொண்டு கவிதை எழுதுவதும் அதை வலைப்பூவில் வெளியிடுவதும் எளிதல்ல என்பதை அறிவேன். இருந்தாலும் நாள்தோறும் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். விடாதீர்கள். எழுதுங்கள். (2) இன்றைய கவிதை அருமை.

    ReplyDelete
  3. அலைபேசியில் வருவது சொற்பறவையானால் முகம் நோக்கிச் சொல்லும் காதலின் முதற்சொல் என்னவாயிருக்கும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.பரிசு கிடைத்திராவிட்டால்தான் ஆச்சரியமாய் இருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. கவிதைகள் அருமை ஐயா... அவ்வப்போதாவது தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  6. சொற்பறவையின் முதலொலி... ஆஹா! கவிதை அருமை!

    ReplyDelete
  7. அருமையான கவிதை ஐயா. பரிசிற்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. அன்புள்ள செல்வராஜ் ஐயா அவர்களுக்கு

    வணக்கம். தஞ்சை வந்தீர்களா? தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      சென்ற மாதம் என் மகளின் திருமணத்தினை முன்னிட்டு சிறு விடுப்பில் தஞ்சை வந்து விட்டு உடனடியாக திரும்பினேன்..
      தங்களையெல்லாம் சந்திக்க முடியாத சூழ்நிலை. மன்னிக்கவும்.
      தங்களின் அன்பிற்கு என்றென்றும் நன்றி..

      Delete
  9. அன்புள்ள செல்லப்பா ஐயா அவர்களுக்-கு

    வணக்கம். உங்களைப் போன்றோரின் அனபிற்காகவே தினமும் எழுதலாம். விரைவில் என்னை ஒழுங்குபடுத்திக்கொள்கிறேன். என்னுடைய தீவிரமான வேலைப்பளுவிற்கும் இடையிலும். நாள்தோறும் பதிவிடச் செய்வேன்.

    நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  10. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

    வணக்கம்.எப்படியிருக்கிறீர்கள்? அம்மா மற்றும் தங்களின் மகனுக்கு என்னுடைய அன்பைச் சொல்லுங்கள். உங்களுடைய வலைப்பக்கத்திற்கு இன்று அவசியம் வருகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  11. அன்புள்ள தளிர் சுரேஷ்

    வணக்கம். உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.

    தொடர்ந்து பேசுவோம்.

    நன்றிகள்.

    ReplyDelete
  12. அன்புள்ள தனபாலன்

    வணக்கம். இப்படி அழைப்பதைவிட வலைப்பதிவுலகின் முடிசூடா மன்னன் என்றே அழைப்பது பொருந்தும். இத்தனைக்கும் உங்களின் அன்பு உலகளாவியது,

    நன்றிகள்.

    ReplyDelete
  13. அன்புள்ள ஜனா.


    வணக்கம்.

    தங்களின் அன்பிற்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  14. அன்புள்ள தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வணக்கம்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  15. அருமையான கவிதை. தொடர்ந்த வேலைகளுக்கும் நடுவே இந்த பதிவினை வெளியிட்டது மகிழ்ச்சி தந்தது.....

    தொடர்ந்து சந்திப்போம்.....

    ReplyDelete
  16. நத்தையோட்டுத் தண்ணீர்

    நூலுக்கு
    சேலம் அருணாசலம்
    அறக்கட்டளைச் சார்பில்
    சிறந்த நூலுக்கான
    முதல் பரிசு
    கிடைத்துள்ளது .// வாழ்த்துகள்!

    ReplyDelete