Friday, March 28, 2014

தி.க.சி. மூன்றெழுத்து இமையம்
               திகசி....

               இந்தப் பெயரை அறியாதவர் இலக்கிய உலகில் பிறக்காதவர்.

               எழுத்துலகின் இமையம்.

               உயர்ந்த எழுத்து மட்டுமல்ல உயர்ந்த மனமும் கொண்ட படைப்பாளி.

               நீண்ட ஆயுள் கொண்ட எழுத்து.

               நிறைய படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஓரிரு எழுத்துக்கள்
எழுதி பிரசுரமான படைப்பாளியையும் மதிக்கும் மனம் நானறிந்தவரை
இருவருக்கு மட்டுமே உண்டு.

                    முதல் ஆளுமை   வல்லிக்கண்ணன்
                    இரண்டாவது ஆளுமை திகசி

                 முன்னவர் முன்பும் பின்னவர் பின்புமாக நம்மிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டனர்.

                 கண்களில் சோகம் எரிமலையர்ய் வெடித்து நிற்கிறது.

                 இதுவரை நான் முகம் பார்த்ததில்லை நேரில் ஆனால் பலமுறை
இதழகளில் பார்த்ததுண்டு.

                   என் படைப்புக்களை அனுப்பினேன்.

                   இரண்டு அஞ்சல் அட்டைகளில் எனக்குக் கடிதம் எழுதிய தகப்பன்
அவர். இப்படியெல்லாம் இளைய படைப்பாளிகளைக் கட்டிக்கொள்ளும்
கடவுள்தன்மை. தகப்பன் திகசியைப் போல வல்லிக்கண்ணன் போல இனி
வருமா?

                  எப்படி வாய்த்தார்கள் இவர்கள் இத்தகைய எழுத்துலகிற்கு.

                  பட்டினத்தார் செர்ன்னது போல எப்படி எரிதழல் மூட்டமுடியும்?

                  அழுதுகொண்டிருக்கிறேன் அந்த மாமனிதனுக்காக மனித நேயம்
கொண்ட தகப்பனுக்காக.

                      அவரின் மிகமிகமிக உச்சமான படைப்பு. அற்புதப் படைப்பு.
இன்றைக்கும் அதிர வைக்கிற படைப்பு. ஒன்றே ஒன்றுதான்

                                                அது.
                                                அது.                                        வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி....


                                       இதயக்கமலத்தால் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

10 comments:

 1. ஆமாம் அய்யா, இந்தத் துரோணருக்குத் தமிழ்நாடு தாண்டியும் எத்தனை எத்தனை ஏகலைவர்கள் ! திகசி எனும் திகட்டாத உற்சாகி! சரியான நேரத்தில் சரியான அஞ்சலி நன்றி கலந்த பாராட்டுகளய்யா

  ReplyDelete
 2. தங்களுடைய பதிவினைக் கண்டு மனம் நெகிழ்கின்றது.

  ReplyDelete
 3. //நிறைய படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஓரிரு எழுத்துக்கள்
  எழுதி பிரசுரமான படைப்பாளியையும் மதிக்கும் மனம் நானறிந்தவரை இருவருக்கு மட்டுமே உண்டு.

  ஒன்று வல்லிக்கண்ணன்
  இரண்டு திகசி. //

  ஒருவர் வல்லிக்கண்ணன்
  இன்னொருவர் திகசி

  -- என்று இருந்திருக்க வேண்டும். மனசு கேட்கவில்லை. உடனே மாற்றி விடுங்கள்.

  அவரின் எளிமை, எதையும் ரசித்து ஒரு அஞ்சலட்டையில் அனுப்பியவரை மதித்து தன் கருத்தை எழுதி போஸ்ட் பண்ணும் ஆர்வம், உரிமையுடன் கூடிய தோழமை இதெல்லாம் திகசி என்கிற விமரிசன சாம்ராட்டிற்கே உரிய உயர்வான பண்புகள்.

  அந்நாளைய கலை இலக்கிய பெருமன்ற தோழமை நினைவுகள் மனசில் முட்டி மோதுகின்றன.

  நெஞ்சம் கனக்கிறது. கண்கள் பனிக்கின்றன. அமரர் திகசிக்கு
  மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள்.

  ReplyDelete
 4. ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 5. சிறியோரை இகழ்தல் இல்லாத பெரியார், தி க சி .சாகும்வரை படித்துக்கொண்டிருந்த மேதை. இவர் போல மனித நேயமுள்ள இலக்கிய விமர்சகர் இனி வருவாரா ? அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக .

  ReplyDelete
 6. என் இனிய ஹரணி அய்யா அவர்களுக்கு, மறைந்த மாமேதை திரு.தி.க்.சி. பற்றிய தங்களின் பதிவு மனதை உருக்குவதாகவும் அவருடைய தாய்மை உள்ளத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

  ReplyDelete
 7. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

  ReplyDelete
 8. அன்புள்ள நல் உள்ளங்களுக்கு

  இனிய வணக்கங்கள்.

  என்னுடன் அஞ்சலி செலுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ஜீவி அவர்களுக்கு

  ஒன்று. இரண்டு என்று குறிப்பிட்டது வரிசைக்காக. ஏனென்றால் திகசியின் குரு வல்லிக்கண்ணன் அவர்கள். இருப்பினும் உங்களின் உணர்வை மதித்து மாற்றிவிட்டேன். நன்றிகள்.

  ReplyDelete

Follow by Email