Wednesday, May 14, 2014

மனம் திறந்து,,,



அன்புள்ள.


                    ஹரணி வணக்கமுடன்.

                   படைப்புலகில் இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு எந்த ஒன்றையும் தள்ளிப் போட்டதில்லை. எதைத் தொடங்கினாலும் அதனைக் குறித்த காலத்தில் முடித்தே பழக்கம். இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக இது சாத்தியமற்றிருக்கிறது. ஒரு போராட்டம் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

                         இதை எழுதுவதற்குக் காரணம் நிறைய பதிவிடவேண்டும் தரமாகப் பதிவிடவேண்டும் புதுமையாகப் பதிவிடவேண்டும் என்று முடிவு செய்து அதற்கெனக் குறிப்புக்களை எழுதி வைத்தும் தொடர்ந்து வெளியிட
முடியாமல் போகிறது.

                         கடந்த ஒரு மாதமாக கணிப்பொறியின் பழுது,

                         அதற்கு நேரம் ஒதுக்கமுடியாமை.

                        மேலும் தற்போது மே. சூன் ஆகிய இருமாதங்கள் கோடை விடுமுறை என்றாலும் அதற்குள் நிரம்பி வழியும் பணிகளின் இறுக்கம்.

                         ஐந்து புத்தங்களை எழுதித்தர கட்டாயம், அலுவலகச் சூழல்.

                         சில முக்கியமான கல்விசார் கூட்டங்கள்.

                         இந்த இரு மாதங்களில்தான் எல்லா இதழ்களுக்கும் கட்டுரை. கவிதை. சிறுகதைகளை நிரப்பும் தேவையும் உள்ளது.

                          இருப்பினும் இதையும் மீறி வலைப்பக்கத்தில் எழுதவேண்டும என்பது நெருப்பாக இருக்கிறது.

                           இதன் மூலம் நான் வேண்டுவது, எப்படியும் விட்டுவிட்டாவது பதிவுகளை இடுவது என்பது உறுதியானது. எனவே என் வலைப்பக்கம் வந்து கருத்துரை வழங்கும் சகோதர சகோதரிகள் எப்போதும் போல இதனைப் பொறுத்து வந்து பார்வையிடவேண்டும் என்பதுதான், படைப்பின் மகிழ்வையும் அதற்கிணையாக உங்களின் கருத்துரையும் என்னை மேலும் தொடர்ந்து இயங்க வைக்கும்.

                               நன்றிகள் பல.

                              அன்புடன் ஹரணி.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                  இம்மாத இரு மகிழ்ச்சியான செய்திகள்.


                   1. என் நத்தையோட்டுத் தண்ணீர் கட்டுரைத் தொகுப்பிற்கு முதல்பரிசு
                       சேலம் அருணாச்சலம் அறக்கட்டளை வழங்குகிறது. பரிசு
                       ரூ. 10000 - விழா இம்மாதம் மூன்றாம் வாரத்தில்.

                   2, என்னுடைய சிறுகதை புத்தகம்  செல்லாத நோட்டு - கரூர் சிகரம்
                       இதழின் சார்பில் முதல்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 11.5.2014
                       அன்று சான்றிதழ். கேடயம். பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்பட்டது,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



                                        ஒரு சிறுகவிதை


                                        காலத்தின் கட்டாயத்தில்
                                        தானுதிர்க்கும் சருகுகளிடம்
                                        வழியனுப்பலின் அழுகையை
                                        மரம் மௌனமாய் சொல்ல
                                        அதை சங்கீதமாக்குகிறது
                                        காற்று
                                        அடுத்தவரின் துயரில்
                                        ஆறுதலைச் சங்கீதமாக்கும்
                                        காற்று அருவமற்றிருக்கிறது
                                        என்பதை உலகிற்குச் சொல்ல
                                        சருகுகள் அதை
                                        ஆமோதிக்கின்றன
                                   
                                         00000000000000

                                         சந்திக்கலாம்.                ஹரணி.                                      
                                     









                    

25 comments:

  1. // 1. என் நத்தையோட்டுத் தண்ணீர் கட்டுரைத் தொகுப்பிற்கு முதல்பரிசு
    சேலம் அருணாச்சலம் அறக்கட்டளை வழங்குகிறது. பரிசு
    ரூ. 10000 - விழா இம்மாதம் மூன்றாம் வாரத்தில்.

    2, என்னுடைய சிறுகதை புத்தகம் செல்லாத நோட்டு - கரூர் சிகரம்
    இதழின் சார்பில் முதல்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 11.5.2014
    அன்று சான்றிதழ். கேடயம். பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்பட்டது,//

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தலைப்பின் மூன்றாம் எழுத்துக்கு நெற்றியில் ஒரு பொட்டு வைக்கலாமோ !

    ReplyDelete
  3. சருகுகளே ஆமோதிக்கின்ற கவிதை அருமை, ஐயா. ரஸித்தேன்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அய்யா...

    ReplyDelete
  5. நீங்கள் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்... நீங்கள் மட்டுமல்ல நாங்களும் பரிசுகளை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதனை வெளிச் சொல்வதில்லை.. நீங்க சொன்ன பிறகு நாங்களும் மூடி மறைக்கவில்லை. அப்படி என்ன நாங்கள் பரிசு பெற்றோம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது.நிச்சயம் நீங்கள் பெற்ற பரிசுகளை விட மிக சிறப்பான பரிசுதான்.. நிச்சயம் நீங்கள் அந்த பரிசை பெறவே முடியாது....அது என்ன பரிசு என்று அறிய ஆவலா?

    சொல்லட்டா....அப்புறம் சொல்லிவிடுவேன்..... அது வேறு ஒன்றுமல்ல உங்களின் தரமான எழுத்துக்களும் சிந்தனைகளும்தான்...அந்த பரிசை நாங்கள்தான் உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்..

    பாராட்டுக்கள் ஹரணி

    ReplyDelete
  6. படைப்புகளும் பரிசுகளும்
    ஒன்றை ஒன்று மிஞ்ச
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மேலும் பல சிறப்புகளை அடைய வேண்டும்.
    அன்பின் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான செய்திகள் நிறையட்டும் ..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்

    ReplyDelete
  10. கவிதை நன்று. எழுத முடியும்போது எழுதுங்கள். அதேபோல் வாசிக்க முடியும்போது படித்துக்கருத்திடுங்கள். உங்களுக்கான ஒருவட்டம் என்றும் உள்ளது.

    ReplyDelete
  11. இந்த இரு மாதங்களில்தான் எல்லா இதழ்களுக்கும் கட்டுரை. கவிதை. சிறுகதைகளை நிரப்பும் தேவையும் உள்ளது.//

    சரிதான்.

    கவிதையின் கனம் பதிவின் இடைவெளியை தாங்கிப் பிடிக்கும். கவலை வேண்டாம்.

    பரிசுகளுக்கு பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  12. அன்புள்ள வைகோ ஐயா

    வணக்கம்.

    தங்களின் வாழ்த்திற்கும் அன்பிற்கும் என்றும் பணிவான நன்றிகள்.

    ReplyDelete
  13. அன்புள்ள சீனி

    வணக்கம். நன்றிகள்.

    ReplyDelete
  14. அன்புள்ள அவர்கள் உண்மைகள்

    வணக்கம். புகழ்ச்சி என்றும் தயங்கவும் பயப்படவும் வைக்கிறது, இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று. தங்களின் மனதிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. அன்புள்ள ரமணி சார்

    வணக்கம். நான் விரும்பிப் படிக்கிற பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. மனம் கணக்கும்போதெல்லாம் உங்கள் பதிவிற்கு வருவேன். வெகு எளிதாக சில செய்திகளை உங்கள் பதிவில் வாசித்து தளர்வேன். உங்கள் பதிவிற்கு வந்து விட்டதை வாசிப்பேன் விடாது.நன்றிகள்.

    ReplyDelete
  16. அன்புள்ள ஜெயக்குமார்

    வணக்கம். உங்களின் வலைப்பக்கத்தில் உங்கள் பதிவுகள் மாறுபட்ட திசைகளில் பறக்கும் குதிரைகளைப் போல மெருகூட்டுகின்றன, தொடருங்கள். நன்றிகள் பல என்றும் மாறாது.

    ReplyDelete
  17. அன்புள்ள துரை செல்வராஜ் சார்.

    வணக்கம். நாம் கரந்தையில் சந்தித்து உரையாடிய தருணங்கள் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவில். நன்றிகள் பல.

    ReplyDelete
  18. அன்பு சகோதரி ராஜேஸ்வரி

    வணக்கம். உங்கள் பதிவிற்கு வரும்போதெல்லாம் தெய்வத் தரிசனம். படங்களைப் பார்க்கும்போது மன அமைதிபெறும். அத்தனை அற்புதமான படங்களைக் காணமுடியும் உங்கள் பதிவுகளில். நன்றிகள்.

    ReplyDelete
  19. அன்புள்ள ஆர் வி சரவணன்

    வணக்கம். தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  20. அன்புள்ள நிலாமகள்

    வணக்கம். நெடுநாட்களாகிவிட்டன உங்கள் பதிவிற்கு வந்து. விரைவில் வருவேன். தற்போது உங்களின் புத்தகம் ஏதும் அச்சில் உள்ளதா? நன்றிகள் பல. தங்களின் கணவருக்கு என் அன்பைத் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  21. அன்புள்ள வைகோ ஐயா

    வணக்கம். பொட்டு வைத்துவிட்டேன். நன்றிகள்.

    ReplyDelete
  22. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

    வணக்கம். இந்த வயதில் இத்தனை இளமையோடும் புதுமையோடும் தங்களின் பதிவுகள் சிறப்புற்றிருக்கும் நிலையில் தங்களின் சொற்கள் என்னைப் பெருமைப்படுத்துகின்றன. தங்களின் அன்பிற்குப் பணிகிறேன். என்றும் இதனை மீட்டெடுப்பேன் மனதிலிருந்து விலகாது. நன்றிகள், தங்களின் பதிவிற்கு விரைவில் வருவேன். நிச்சயம் மனதுக்குப் பிடித்ததை மனசு பாதித்ததை நிச்சயம் கருத்துரைப்பேன் அதில் என்றும் விலகேன்.

    ReplyDelete
  23. மகிழ்ச்சியான செய்திகள் தான்...

    அவ்வப்போது எழுதுங்கள் ஐயா. உங்கள் பதிவுகளைப் படிப்பதில் எங்களுக்கு ஆனந்தம் எப்போதும் உண்டு....

    ReplyDelete
  24. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! மகிழ்ச்சி!

    ReplyDelete