Saturday, July 26, 2014

கல்கியும் என் கனவும்...




                      அன்புள்ள

                                     ஹரணி வணக்கமுடன்.

                                     கதை எழுதிய காலத்தில் பெரும் பத்திரிக்கைகளான கல்கி. ஆனந்தவிகடன். குமுதம் இவற்றில் கதைவருவது பெருமைக்குரிய விஷயம்.
அதனை நோக்கித்தான் இலக்கும் நிச்சயிக்கப்பட்டிருக்கும்.

                                     அப்படி பாடுபட்டதில் என்னுடைய முதல் கதை கல்கியில் வருவதற்குப் பத்தாண்டுகள் ஆயின.  அப்புறம் பல கதைகள் கல்கியில் வெளிவந்திருகின்றன.

                                 என்றாலும் கல்கி நடத்தும் சிறுகதைப்போட்டியில் பரிசு
வெல்வது என்பது ஓர் உறுதியான இலக்காகவே எண்ணி இயஙகினோம் நானும் என் நண்பர்களும்.

                                 அதற்குப் பலனாய் சென்ற ஆண்டு அனுப்பிய கதை பிரசுரத்திற்குத் தேர்வானது. இது வெற்றியின் அறிகுறியாகப் பட்டது எனக்கு.

                                   முயற்சியில் தளர்ந்துவிடக்கூடாது என்பதில்
தெளிவும் கடும் உழைப்புமாக இருந்தேன்.

                                  இவ்வாண்டு கனிந்துவிட்டது.

                                  இவ்வாண்டு அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில்
என்னுடைய கதை இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.

                                 இதற்குப் பிடித்திருக்கிற காலங்கள் 27 ஆண்டுகள் என்றாலும்
மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றிக் கனியைப் பறித்துவிட்டோம் என்பதில்.

                                 இவ்வாண்டு கல்கிக்கு 73 ஆவது ஆண்டு.

                                 2016 ஆம் ஆண்டில் கல்கி பவள விழா கொண்டாடும். ‘
பவளவிழாவில் எப்படியும் முதல் பரிசு பெறவேண்டும் என்கிற உத்வேகத்துடன் என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

                              பரிசுபெற்ற கதை அடுத்தவாரம் வெளியாகும்.

                              கதையின் தலைப்பு  /   மூங்கில் சுமந்தவர்கள்.


                              உங்களுடன் மகிழ்ச்சியைப் பகிரும் தருணத்தில் கல்கிக்கும் நடுவர் குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

                               அன்னை இந்திரா காந்தி உருவாக்கிய பொன்மொழிகளுன் ஒன்று கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை என்று. என்னுடைய 40 ஆண்டுகால படைப்பு அனுபவத்தில் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன்.
தொடர்ந்தும்.

                                      00000000000

15 comments:

  1. வணக்கம்
    ஐயா
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் கதைக்காக காத்திருக்கேன் .... விரைவில் போடுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் வெற்றி எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
    வெற்றிகள் தொடர நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. சென்ற வருடம் அனுப்பினேன் . பரிசு கிடைக்கலை :( இந்த வருடம் நேரம் போதவில்லை; அடுத்த முறைதான் முயற்சிக்கணும். மிக பெரிய விஷயம் தான் அய்யா! பெருமையாக இருக்கிறது !! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  4. பரிசுபெற்ற கதைக்கு வாழ்த்துகள்.

    கதையின் தலைப்பு / மூங்கில் சுமந்தவர்கள்./////////
    மகிழ்ச்சி சுமக்கவைக்கிறது தலைப்பு....! பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் .முதலில் என் மதிப்புகலந்த வாழ்த்துக்கள். எழுதுவதில் எனக்கும் ஈடுபாடு இருந்தது( இளமையில் )குமுதம் பத்திரிக்கை நடத்திய பெண்களுக்கான “நெஞ்சில் ஓர் ஆலயம் “ விமரிசனப் போட்டியில் அப்போதைய என் காதலி ( இன்றைய மனைவி ) பெயரில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அதற்குப் பரிசும் கிடைத்தது. ஆனால் அவர்கள் எடிடிங் என்னும் பெயரில் சில பகுதிகளை வெட்டி இருந்தது எனக்குப் பொறுக்கவில்லை. அதன் பிறகுபத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பவில்லை. மீண்டும்1966-67 களில் கலைமகள் பத்திரிக்கை நடத்திய நாராயணசாமி ஐயர் நினைவுப் போட்டிக்கு ஒரு நாவல் எழுதி அனுப்பினேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் அது தபால் துறையால் பட்டுவாடா ஆகாமலேயே எனக்கு ack due வந்திருந்தது. பிறகு எழுதுவதை என் திருப்திக்காக மட்டுமே எழுதி வந்தேன். வலைப் பூ ஆரம்பித்தபின் தொடர்ந்து எழுதி வருகிறேன். என் சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய தஞ்சாவூர்க் கவிராயர் என் எழுத்து பத்திரிக்கை உலகில் பிரசுரமாவதை விட நன்றாக இருக்கிறது என்னும் பொருளில் எழுதி இருந்தார். இருந்தாலும் பத்திரிக்கையில் பிரசுரமானால்தான் பிரபலமாகமுடியும் என்றும் தெரிகிறது. மீண்டும் உங்கள் கனவு நிறைவேற வேண்டி வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி... மனம் கனிந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள் சார்!!

    ReplyDelete
  7. தங்கள் வெற்றிக்கு...
    எனது மகிழ்ச்சி!

    பத்திரிகையில் வெளியானதும் இங்கு வலைப்பூவில் போட்டால்...
    நாங்களும் படித்து... இரசித்து,
    சொல்வோம் கருத்து!

    ReplyDelete
  8. 27 ஆண்டுகால முயற்சி வெற்றி பெற்றது மிக்க மகிழ்வினை அளிக்கின்றது ஐயா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வணிகப் பத்திரிகைகளில் எழுதினால் தனி மகிழ்ச்சி ஏற்படுவது உண்மையே. விரைவில் உங்கள் ஆசை நிறைவேறட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் அய்யா. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
    “2016 ஆம் ஆண்டில் கல்கி பவள விழா கொண்டாடும். ‘
    பவளவிழாவில் எப்படியும் முதல் பரிசு பெறவேண்டும் என்கிற உத்வேகத்துடன் என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்“
    “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்“ - அட்வான்ஸ் வாழ்த்துகள் அய்யா.
    (நானும் ஒருமுறை ஆறுதல் பரிசும், இ்ன்னொருமுறை இரண்டாம் பரிசும் கல்கியில் பெற்றவன் என்னும் உரிமையோடு) வாழ்த்துகிறேன். வளர்க....வளர்க்க!

    ReplyDelete
  11. கதை வாசித்தேன். வெகு உருக்கம். பாராட்டுக்கள் ... வரும் ஆண்டின் முதல் பரிசை வெல்ல!

    ReplyDelete
  12. மிக்க மகிழ்வு.

    ReplyDelete