Friday, April 3, 2015

மகன் எழுதிய கவிதை

அன்புள்ள

                   வணக்கம்.

                   என் மகன் எழுதிய கவிதை இது.

                   உங்களின் வாழ்த்திற்கும் பார்வைக்கும்.

                 
                                இலட்சிய இட மடைந்தேன்; புது
                                நண்பர்கள் படை புகுந்தேன்; எழில்
                                மும்பையில் மனம் மகிழ்ந்தேன்; தனிக்
                                காட்டினில் தின மலைந்தேன்; புகழ்
                                உலகினில் நான் மிதந்தேன்; இரவினில்
                                இனம்புரியாயொரு தனிமையை நானுணர்ந்தேன்; என்
                                 நிலைதனை எடுத்துரைக்கத் தமிழினை நாடிவந்தேன்....

14 comments:

  1. வணக்கம்
    ஐயா..

    என்ன வரிகள்... ஒவ்வொரு வரிகளும் நன்றாக உள்ளது மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா. இதை பகிர்ந்த தங்களுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அது தானே!..

    நந்தவனத்துப் பூ அல்லவா!..
    நறுமணத்திற்குக் கேட்கவா வேண்டும்!..

    சீர்மிகு செந்தமிழ்த்தேன் - நான்
    அருந்தி மன மகிழ்ந்தேன்!..

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவிபாட வேண்டிய நேரம் - இது!..

    தமிழ் கொண்டு வாழ்க!..

    ReplyDelete
  3. அருமை.

    உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சபாஷ்! கவிச் சிங்கமொன்று புறப்பட்டதே! உங்கள் மகன் மும்பையிலா இருக்கிறார்?( நானும் தற்சமயம் மும்பையில் தான்) வாழ்த்துக்களை இளம் கவிஞருக்கு சொல்லுங்கள்!
    எங்கே வானவில்மனிதன் பக்கமே ஆளைக் காணோம்??

    ReplyDelete
  5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. ?மகனுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லவும் என் பேரனும் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறான்

    ReplyDelete
  6. அன்புள்ள ரூபன்
    வணககம். தங்களின் வாழ்த்து எனக்கு உவப்பாக உள்ளது. நன்றிகள் பல.

    ReplyDelete
  7. அன்புள்ள துரை செல்வராஜ் ஐயா
    வணக்கம். தங்களின் தேன்தமிழ் சொற்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. அன்புள்ள வெங்கட் நாராஜ் அவர்களுக்கு,

    வணக்கம். உங்களை நினைக்கும்போதெல்லாம் உங்களின் வலைப்பக்கம் விளையாடும் இனிமையான பாட்டுக்களே நினைவுக்கு வரும். நன்றிகள் பல.

    ReplyDelete
  9. அன்புள்ள மோகன்ஜி அவர்களுக்கு,

    வணக்க்ம். தொடர்ந்த பணிகள் . நிறைய செய்திகளைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். ஆனாலும் அவற்றை வெளியிட நேரம் இல்லை. ஏப்ரல் இறுதிவரை வகுப்பகள். அப்புறம் மே, சூன் இரண்டு மாதங்கள் விடுமுறைதான். எல்லா வலைப்பக்கமும் வருவேன். வானவில் பக்கம் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தங்களின் வாழ்த்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,

    வணக்கம். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள்.
    வலைப்பக்கம் வரமுடியாமல் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பல்வேறு பொறுப்புகள். பணிகள். நகரமுடியவில்லை. மே, சூன் இருமாதங்கள் விடுமுறை அப்போது தொட்ர்ந்து வலைப்பக்கம் வருவேன். நன்றிகள் பல.

    ReplyDelete
  11. அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,

    வணக்கம். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள்.
    வலைப்பக்கம் வரமுடியாமல் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பல்வேறு பொறுப்புகள். பணிகள். நகரமுடியவில்லை. மே, சூன் இருமாதங்கள் விடுமுறை அப்போது தொட்ர்ந்து வலைப்பக்கம் வருவேன். நன்றிகள் பல.

    ReplyDelete
  12. மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள் சொல்லிடுங்க...

    ReplyDelete
  13. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள்
    உண்மைதான்
    தங்கள் மகனல்லவா
    தங்கள் அன்பு மகனுக்கு
    நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளன வரிகள்... பாராட்டுக்கள்.

    ReplyDelete