Thursday, May 28, 2015

உங்களுக்குண்டா?

உங்களுக்குண்டா?


                           1  சிலரை  நமக்குப் பிடிக்காது.  வேண்டாம்  என்று விலக்குவோம். ஆனால் முக்கியமான நேரத்தில் யாரை விலக்கினோமோ அவர்களிடத்துதான் உதவி கேட்டு நிற்கவேண்டிய சங்கடம் வரும்..

                                            உங்களுக்குண்டா?


                          2.   நமக்கு உற்ற உறவுகளில் யாரேனும் இறக்கும்போது திட்டமிட்டதுபோல அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல், வரமுடியாமல் போகிறது.

                                           உங்களுக்குண்டா?


                          3.    மனசு கேட்காமல் போய் அன்பு காட்டுவோம். உதவியும் செய்வோம்.  நம்முடைய பேச்சு அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கும்.  அலட்சியம் செய்வார்கள்.   அடுத்தமுறை என்ன ஆனாலும் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் மனசு கேட்காமல் மறுபடியும் அவமானத்திற்கு ஆளாவோம்.  அந்த துயரம் சொல்லமுடியாது.

                                              உங்களுக்குண்டா?


                            4.   பல முறை ஒன்றிற்காகப் போராடுவோம். கிடைக்காது. சரி இனி வேண்டாம் என்று விடும்போது அது எளிதாக மற்றவருக்குக் கிடைத்துவிடும். ஏன் இப்ப கேட்டிருந்தா கொடுத்திருப்போமே என்பார்கள். மனசு நொந்துபோகும்.

                                              உங்களுக்குண்டா?

                           10 comments:

 1. வணக்கம்
  ஐயா
  தாங்கள் கேட்ட வினாவுக்கான விடை

  ஒவ்வொரு மனிதனிதர்களின் வாழ்வில் நடைபெற வாய்ப்பு உள்ளது.நிச்சயம்...

  அழகாக வினாக்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வினா-1
  சீ என்றால் சீ தான் அந்த பக்கம் கூட திருப்பி பார்க்க மாட்டேன் அப்படி வந்தது இல்லை
  வினா-2
  நிச்சயம் ஐயா.. எனது அம்மம்மா மற்றும் சித்தியின் மகள் இறந்த போது என்னால் பார்க்க முடிய வில்லை.ஏன்றால் இலங்கையில் 2009 இறுதிகட்ட சண்டை வந்தது..வன்னியில் செல்தாக்குதல் அதில் அவர்கள் இறந்தார்கள் நாங்கள் பார்க்க வில்லை. ஒரு கவலைதான்.

  வினா-3
  இந்த அம்சம் நிறைய இருக்கு ஐயா.என்னிடம்

  வினா-4
  அப்படி இல்லை என்னிடம் யார்என்றாலும் நல்லா இருந்தால் சரி

  ReplyDelete
 3. அந்த நான்கு அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்று உறுதியளிக்கிறேன். மீண்டும் மீண்டும் ஏற்பட்டும் தொலைக்கிறது. என்ன செய்ய, நம் சுபாவத்தை அவ்வளவு எளிதாகவா மாற்றிக்கொண்டுவிட முடியும் ? - இராய. செல்லப்பா

  ReplyDelete
 4. அந்த நான்கு அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்று உறுதியளிக்கிறேன். மீண்டும் மீண்டும் ஏற்பட்டும் தொலைக்கிறது. என்ன செய்ய, நம் சுபாவத்தை அவ்வளவு எளிதாகவா மாற்றிக்கொண்டுவிட முடியும் ? - இராய. செல்லப்பா

  ReplyDelete
 5. உண்டு உண்டு ..

  ReplyDelete
 6. நல்ல மனசுக்குத் தான் இந்த இடர்ப்பாடெல்லாம்.

  மனம் தான் நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. அதன் அழகான கோலங்கள் தாம் இவை. நாமும் மனசுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை வேறே எதற்கும் கொடுப்பதில்லை. நாம் அதுவாகவே இருப்பதால் அதற்காகவே வாழ்கிறோம். சொல்லப்போனால் அந்த நல்ல மனசு தான் நம்மை வாழவைக்கிறது.. ஆரோக்கியமாக அதை வைத்திருப்போம். அதன் மேன்மை பொருட்டு, மற்ற சில்லரை விஷயங்களெல்லாம் பொறுட்டல்ல.

  ReplyDelete
 7. எல்லாருக்கும் இப்படி நேர்ந்திருக்கின்றது..
  ஆனாலும் உணர்வு பூர்வமாக வாழ்பவர்களுக்கு இதெல்லாம் காலமெல்லாம் உறுத்திக் கொண்டிருக்கக்கூடியவை!..

  மதியாதார் தலை வாசல் மிதிப்பதேயில்லை!..

  மற்றதெல்லாவற்றையும் சந்தித்திருக்கின்றேன்!..

  ReplyDelete
 8. 1. உண்டு...

  2. உண்டு...

  3. இல்லை...

  4. உண்டு...

  ReplyDelete
 9. அன்புடையீர்,

  வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/11.html

  ReplyDelete

Follow by Email