ஔவையின் ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார். நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வெகுநாளாகவே மனதில் இருந்தது. அதன்விளைவுதான். ஆனால் இன்றைய சூழ்ல் மனதிற்கு சஙக்டமாக உள்ளது. மனித நேயம், பரிவு, நட்பு எல்லாம் வீண். மனிதனை மனிதன் உட்கொள்ளும் வன்முறை பெருகியுள்ளது. இன்றைய சூழலின் விளைவையே
இந்த ஆத்திசூடியில் பகிர்ந்துகொள்கிறேன்.
விரும்பாததது.......
/////////////
அரசியல் அறம் ஒழி
ஆன்மீகப் புலைத்தனம் கல்
இயன்றவரை துரோகம் இழை
ஈட்டுதலுக்காக குற்றம் பயில்
உண்மை எப்போதும் மறு
ஊழலைத் துணிந்து பேண்
எண்ண்த்தில் விடம் நிரப்பு
ஏற்றம்பெற எதுவும் செய்
ஐம்புலனையும் அடக்காது செல்
ஒவ்வொரு நாளும் வன்முறை புரி
ஓராயிரம் முறை நடித்து வாழ்
ஔவை சொல் விலகு.
விரும்புவது.......
/////////////////
அன்புசால் உலகு செய்
ஆற்றலைப் பெருக்கி நில்
இயன்ற வரை உதவு
ஈடடுவதில் தருமம் நிறுத்து
உண்மை எப்போதம் பேசு
ஊரின் நியாயம் கேள்
என்றும இறைவன் துணைகொள்
ஏறறம் பெற உழைப்பு தேடு
ஐம்புலன் செம்மைப் பேண்
ஒவ்வொரு நொடியும் நல்சிந்தை நினை
ஓடிஓடி உறவுகள் வளர்
ஔவை பாரதி வணஙகி வாழ்
எல்லோரும் அவரவர் சிந்தைக்கேற்ப ஆத்திசூடி எழுதுஙக்ள். நல் உலகு மலரட்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteமன்னிக்க வேண்டும். காதல் என் கோணத்தில் என்ற என் பதிவில் ஒரு பகுதியாக காதல் ஆத்திசூடி ஏற்கனவே எழுதி இருந்தேன். இதோ அது
ReplyDelete//அன்ன நடையழகி,
ஆடி வந்தென்முன் நின்று,
இன்பம் சேர்த்திடவே,
ஈட்டியாம் கருவிழியால்,
உள்ளம் கவர்ந்திடவே,
ஊன்றி என்னை நோக்கி நின்றாள்.
என்னையே மறந்து விட்டேன்,
ஏந்திழையின் எழிலிலே
ஐயம் தீர்ந்திடவே,
ஒரு வார்த்தை அத்தான் என்று,
ஓதினால் போதுமடி,
ஒளவை கண்ட பெண்ணே//.
IN LIGHTER VEIN
நீங்கள் முயற்சித்த இரு ஆத்திசூடிகளும் அருமை.
ReplyDeleteஅதிலும் முத்தாய்ப்பாய் ஒளவை பாரதி வணங்கி வாழ் என்று முடித்தது மிக நயம்.
உங்கள் புதிய ஆத்திச்சூடி நன்றாக இருக்கிறது. விரும்புவது ஆத்திச்சூடி நான் விரும்பினேன்...
ReplyDeleteவிரும்புவது ஆத்திச்சூடி அருமை.
ReplyDeletenadaimurai vaazvai etharthaamakap pathivu ceythullathu.
ReplyDeleteநன்றி ஜிஎம்பி ஐயா.
ReplyDeleteஅன்பான நனறிகள் ரிஷபன்.
ReplyDeleteநானும் விரும்புவது ஆத்திசூடிதான் விரும்புகிறேன் வெஙகட். ஆனால் இன்றைய உலகில் முந்தையதுதான் நடக்கிறது அதன் வருத்த வெளிப்பாடுதான் இது. நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் ஜனா. உங்களைத் தொடர்ந்து பத்திரிக்கைகளில் படைப்புக்களின் வழி பார்பபதுண்டு. சமீபத்தில் இல்லை. ஏன்? தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் செல்வகுமரன். உங்களின் பதியம் தழைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிரும்பாத ஆத்திச்சூடியைவிட விரும்பும் ஆத்திச்சூடி நல்லா இருக்கு.ஆனா நீங்க விரும்பாத ஆத்திச்சூடி யோசித்திருப்பது நல்லா இருக்கு. அதுதானே இன்று நடை முறையில் நடக்கிரது.
ReplyDeleteஉண்மைதான் அம்மா. தங்கள் கருத்துரைக்கு நன்றி.
ReplyDeleteமுதல் ஆத்திசூடி வலித்தது . அடுத்தது இனித்தது.
ReplyDeleteஅழகான அருமையான ஆத்திச்சூடி
ReplyDeleteவிரும்பாதவைகள்தான் இயல்பானதாகவும்
விரும்புவது என்பது ஏதோ நடைமுறைக்காகாத
இலட்கியம் போலவும் படுகிறது
அந்த அளவு இன்றைய சூழல் மனத்தை
பாழ்படுத்திவைத்திருக்கிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
விரும்பாத ஆத்திச்சூடி யதார்த்தமாயும்..விரும்பும் ஆத்திச்சூடி வெறும் கனவாகவும்.....
ReplyDeleteஆதங்கத்துடன்,
ஆர்.ஆர்.ஆர்.
விரும்பாத ஆத்திசூடியைப் படிக்கும்போதே பகீரென்கிறது. விளையாட்டாகவும் வேண்டாமே இதுபோன்ற விபரீத சிந்தனைகள்.
ReplyDeleteவிரும்பத்தக்கவை யாவும் வணங்கத்தக்கவையாகவும் நல்வாழ்க்கைக்குகந்தவையாகவும் உள்ளன. மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.
வலிதானே எழுத வைக்கிறது சிவகுமரன். நன்றி.
ReplyDeleteரமணி சார்... உங்கள் எண்ணம்தான் என்னுடையதும். மன்ம் சமூகத்தின் அவலம் கண்டு காயப்படும்போது அதனை எதுவும் செய்யவியலாத இயலாமையிலும் இப்படி எழுத வைத்து தணித்துக்கொள்கிறது. நன்றி.
ReplyDeleteஉங்கள் ஆதங்கத்தின் நிழலில்தான் நானும் இருக்கிறேன் ஆர்.ஆர்.ஐயா. நன்றிகள்.
ReplyDeleteகீதா அவர்களுக்கு...
ReplyDeleteவிளையாட்டுக்குக்கூட வேண்டாம் என்கிற உங்கள் கருத்துரை கண்டு எனக்கும்தான் மனம் பதறுகிறது. ஆனால் நடைமுறை இப்போது பாழ்பட்டுதானே கிடக்கிறது. அதனைத்தான் எழுதினேன். இருந்தாலும் மனம் விரும்பியதையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆசைதான் முதன்மையானது. நன்றிகள்.
அருமை ஹரணி.இன்னும் கொஞ்ச சேர்ந்தால் ஆத்திச்சூடியை தொகுப்பாக்கிவிடலாம்
ReplyDeleteநடைமுறையையும், நடக்கவேண்டிய முறையையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள் சார்!
பாலா சார் மாதிரியே, முன்பு பதிவில் Friday, April 16, 2010 நான் கிறுக்கிய காதல் ஆத்திசூடி 'சக்களத்தி'
ReplyDelete"ஆத்தி...ஆத்திசூடி"
அமிழ்தம் அவள்
ஆதலால் மட்டுமா காதல்?
இயம்ப தெரியவில்லை இன்றும்.
ஈர்ப்பின் முதல் எது?
உரையறியாது உருகி
ஊரிடம் வினவினேன்
எது காரணமென
ஏங்கினேன், ஏகினேன்
ஐயம் தீர் என அனைவரிடமும்,
ஒருவரும் அதன் சூத்திரமறியாது
ஓடி மறைந்தனர். எல்லாமறிந்த
ஒளவை கூட
அஃது அறியாதுதான்
அம்மாவாகாமல், பாட்டியானாளாம்.