தீபாவளி... தீப ஒளி... தீயவை ஒளி..(ழி),,,
எல்லோரையும் எப்படியேனும் சில கணங்களேனும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது தீபாவளி திருநாள்.
எல்லோரும் புத்தாடை உடுத்துகிறார்கள்.
கொஞ்ச நேரம் கவலைகளை மூட்டை கட்டி வைக்கிறார்கள். யாரிடமும் கோபம் காட்டாமல் இருக்கிறார்கள். கோபம் வந்தாலும் மறைத்துக்கொள்கிறார்கள். உறவுகளின் வீடுகளுக்குப் பலகாரங்களை எடுத்துப்போய் கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.
ஒரு தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் எல்லார் வீட்டுப் பலகாரங்களும் சுவைக்கக் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் மறக்கிறார்கள். மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
நன்றி சொல்லவேண்டும் தீபாவளி திருநாளுக்கு..
தீபாவளி திருநாளில்....
காவல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிற காவல் துறை அதிகாரிகளுக்கு...
பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிற நடத்துநர் ஓட்டுநர்களுக்கு...
யாருக்கேனும் உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருக்கிற 108 ஐ இயக்கும் பணியாளர்களுக்கு..
நாளைக் கொண்டாடலாம் என்று எண்ணும்போது மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோயில் துன்பப்படுவோர்க்கு..
தீபாவளி அன்றும் பணத்தால் சண்டையிட்டுக்கொண்டு தவிக்கும் ஏழை.. வழியற்றோருக்கு...
இப்படி இன்னொரு பக்கமும் இருக்கிறது.. அவர்களின் துன்பங்கள் தொலையவேண்டும் என்று ஒரு விளக்கும்... மத்தாப்பும்.. ஏற்றுவோம் ஒளியாக..
வாசலில் வந்து கையேந்துவோருக்கு உங்களால் முடிந்ததைத் தாருங்கள்..
பலகாரமோ... பட்டாசோ... சில்லறை காசுகளோ.. சிறு உடைகளோ... புன்னகையோ எதுவோ அதைத் தாருங்கள்..
படைப்பாளச் சகோதரர்கள்..
நல்ல கவிதை எழுதுங்கள்.. நல்ல சிறுகதை எழுதுங்கள்.. நல்ல கட்டுரை எழுதுங்கள்.. நல்ல செய்திகளை உலகறியத் தாருங்கள்..
எண்ணத்தில் வண்ணமும்
ஏற்றத்தில் உயர்வும்
மாற்றத்தில் புதுமையும்
புதுமையில் பயனும்
பயனில் பொதுமையும்
பொதுமையில் தியாகமும்
தியாகத்தில் செம்மையும்
செம்மையில் பெருமையும்
பெருமையில் பேறும்
பேற்றில் வாழ்வும்
வாழ்வில் வளமும்
வளத்தில் தூய்மையும்
தூய்மையில் ஒளியும்
ஒளிரட்டும உலகெங்கும்...
வலைப்பதிவு சகோதர சகோதரிகளுக்குத் தீபாவளி வாழ்த்துக்கள்..