என்ன சொல்லி நினைப்பது
அல்லது அழுவது.............
அழுகையில் தெரிவது ஆனந்தமா
அளவிடற்கரிய அல்லலா?
நினைத்துக்கொண்டேயிருக்கிறோம்
பேசிகொண்டேயிருக்கிறோம்
வருத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம் அழுதுகொண்டேயிருக்கிறோம் ஆனந்தப்பட்டுத்
தொலைக்கிறோம்...
இந்த தேசத்திற்கு கிடைத்த வரம் நீ
அமுதசுரபி...கிளைத்தெழுந்த அமிழ்தம்...நீ
எல்லா மனங்களிலும் தலைமையாக
தகுதியாய் இருந்தாய்.. தலைவனாய்
இருந்தபோதும்
தாயாயும் தகப்பனாயும் இருந்தாய்..
இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்..
உன் பெயர் உச்சரித்தும் உன்பெயர்
திருடியும்,,
உன் புகழ் சுமந்தும் .. உன்னைக்
கொண்டாடிக் கொடியேற்றிக்
களிப்புற்றிருக்கிறது இன்றைய அரசியல்...
எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்கள்
உனது நிழலில் இளைப்பாறிக்கொண்டார்கள்
யாரும் உன்வழியில் இல்லை பின்பற்ற...
நீ வாழ்ந்து செழித்து வழங்கிய கருணைதேசத்தில்
நாங்களும வாழ்கிறோம்
என்பதுதான் ஆறுதல்..
நீ உயிர்ப்புடன் இருப்பதால்தான் நாங்கள் பிணங்களை அடையாளப்படுத்தமுடிகிறது...
எங்கள் வாழ்வின் ஏற்றும் சுடரில்
என்றும் இரு...
ஏனென்றால்
இறைவன சோதிப்பதும் வரங்கொடுப்பதும்
வாழ்விப்பதும் என்பதெல்லாம் நாங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும்தான் படித்ததுண்டு,
இவற்றையெல்லாம் நேரில் செய்த நீதான்
மக்களின் இறைவன்