ஒரு கன்றுக்குட்டியின் வாழ்க்கை...
பிறந்தவுடன் தாயை இழந்துவிட்டது அந்த கன்றுக்குட்டி.
எனவே அது மிகுந்த துயரத்துடன் கடவுளை வேண்டி நின்றது.
கடவுள் உடனே பிரசன்னமானார்.
என்ன வேண்டும் கன்றே? என்றார்.
ஏன் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள் என்றது.
நான் கொல்லவில்லை. அது உன்னோட தாயின் விதி.
சரி நான் எப்படி வாழ்வது? என்றது கன்றுக்குட்டி.
உடனே ஒரு புல்வெளியை உருவாக்கித் தந்தார். இது உன் வாழ்நாள் வரைக்கும் பசியைத் தீர்த்துவிடும் என்றார்.
தாகத்திற்கு என்றது கன்று.
உடனே ஒரு சிறிய சிற்றோடையை அழகாக ஓடச்செய்தார். பளிங்கு முகம் காட்டி அந்த சிற்றோடை ஓடியது. ஒருமுறை கன்று அதில் இறங்கி தன் முகம் பார்த்து திருப்தி கொண்டது.
வேறு ஏதேனும் ஆபத்து எனக்கு நேராதா? என்றது.
உடனே கடவுள் அந்த புல்வெளியைச் சுற்றி பலத்த வேலியை ஒன்று உருவாக்கினார்.
அந்த வேலிக்குள் மனம்போல சுற்றிசுற்றி மகிழ்ந்தது.
நான் போகலாமா என்றார் கடவுள்.
இடி, மழை வந்தால், வெயில் அடித்தால் என்ன செய்வது என்றது கன்று.
உடனே அது ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகையை உருவாக்கினார். மூங்கிலால் அழகான கொட்டகை உருவானது.
உள்ளே ஒடிப்போய் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு வெளியே வந்தது கன்று.
இப்படி யோசித்து யோசித்து கன்று எல்லர்ம் கேட்கக் கடவுள் பொறுமையாகத் தந்துகொண்டேயிருந்தார்.
இரவாகிவிட்டது கடவுள் சென்று வரட்டுமா என்றார்.
சரி.. நான் கூப்பிடும்போது வரவேண்டும் என்றது கன்று.
அது முடியாது ஒருமுறைதான். இந்த முறைதான் எனவே இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டுவிடு என்றார் கடவுள்.
நெடுநேரம் யோசித்துவிட்டு கன்று சொன்னது... எனக்கு அம்மா இல்லை.. தனியா இருக்க பயமா இருக்கும்ல... எனக்கு விளையாட ஒரு பிரெண்ட்ட தா... என்றார்..
கடவுள் இன்னொரு கன்றைத் தந்தார்..
அந்தக் கன்று கடவுளிடம் இந்த கன்று கேட்டதையெல்லாம் கேட்கத்தொடங்கியது.
00000