இந்த வாரம் விகடனில் வந்த கவிதை...
பூர்வீக
வீடு
சிதைந்துகொண்டிருந்த்து...
விரைவில்
மாற்றிவிடுங்கள்
என்று
சொல்லிவிட்டுப்
போனார்
பெரியப்பா...
இடித்துவிட்டு
மனைபிரித்து
பாகம்
பிரித்துக்கொள்ளலாம்
என்பது
சித்தப்பாவின் கருத்து..
முன்னோர்கள்
வாழ்ந்த வீடு
என்றாலும்
இப்போது வாழ
முடியாது...
த்த்துவம் சொன்னார்
மாமா..
மனையாகப்
போட்டால்
முன்மனை
நமக்குதான்
பேசிக்கொண்டார்கள்
மருமகள்கள்
எப்படியிருந்தோம்
தெரியுமா
என்றே
அழுதழுது நின்றார் அம்மா..
போவோர்
வருவோர் ஆளுக்கொரு
கருத்து சொன்னார்..
நாலைந்து
ஓணான்கள்
புணர்ந்து
நின்றன
பூனையொன்று
நாலைந்து
குட்டிகளை
ஈந்திருந்த்து
விரிந்த
சுவரிடுக்குகளில்
கொஞ்சம்
பூச்சிகளும்
சில
அணில்களும் அவ்வப்போது
பட்டாம்பூச்சிகளும்
வந்துபோயின
வீட்டின்
மேலே ஒரு
செடி
முளைத்திருந்த்து..
ஆனாலும்
பூர்வீக
வீடு
சிதைந்துகொண்டிருந்த்து..
வாழ்ந்த
சிலவற்றின்
நினைவுகளோடும்
வாழும்
சிலவற்றின்
கனவுகளோடும்.....
நன்றி ஆன்ந்த விகடன்.