வெள்ளத்தனையது மலர்நீட்டம்....
இலக்கியம் என்கிற சொல்லுக்கான வரையறையாக விழுமியப் பொருளைக் கொண்டது என்றும் அது இலட்சியத்தை நோக்கியதும்
என்பதும் மேனாட்டார் குறிப்பிடுவது.
காலங்காலமாகத் தமிழ் மொழி தோன்றிய காலத்திலிருந்து
அதில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் அந்தந்தப் படைப்பாளிகளின் அர்ப்பணிப்பு உணர்வாலும் தேர்ந்த படைப்பாளுமையாலும் உருவாக்கப்
பட்டது. மேலும் அது எல்லா மக்களுக்குமான பொது வாழ்வியலையும்
உள்ளடக்கியும் உருவாக்கப்பட்டதால் இன்றைக்கும் சாகா இலக்கியங்களாகத்
திகழ்கின்றன. அதேபோன்று படைப்பாளிகள் பெரும்பான்மையும் தங்களை
இனங்காட்டிக்கொண்டதில்லை. இது எல்லோரும் அறிந்த வரலாறு.
எனவே படைப்பாளன் எனும் நிலை மேன்மையானது. உயர்வானது. மதிக்கத்தக்கது. ஆனால் இன்றைக்கு நடக்கும் சில நிகழ்வுகள் இத்தகைய படைப்பாளிகள் மேல் சந்தேகங் கொள்ளவைக்கிறது.
1. சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடன் இதழில்
தன்க்குப் பிடித்த எழுத்தாளர்கள் ஒரு பட்டியலைத் தந்திருந்தார். அது இப்போது ஒரு அரசியலாகிகொண்டிருக்கிறது. நாஞ்சில் நாடனுக்கு முன்னர் பலரும் இதுபோன்ற பட்டியலைத் தயாரித்துத் தங்களின் படைப்பாளுமையாகத் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதுபோன்ற பட்டியலே ஒருஅரசியல்தான்.
இதுபோன்ற பட்டியலைக் கண்டு தன் பெயர் இல்லையே.. விடுபட்டிருக்கிறதே.. ஏன் தரவில்லை. என்பதுபோன்ற காய்ச்சல்கள் எழுந்து
கொண்டேயிருக்கின்றன. இது குறித்த விவாதங்களையும் இதழ்கள் வெளியிடுகின்றன. நாஞ்சில் நாடன் வெளியிட்டிருப்பது அவருடைய தனித்த
விருப்பத்தின்பேரில் தரப்பட்டது. அவர் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள படைப் பாளிகள் சிறந்தவர்கள் எனப்து குறித்த விவாதத்திற்குப் போகவேண்டாம். பட்டியல் தருவதால் என்ன பிரச்சினை? நாஞ்சில் நாடன் என்ன அத்தாரிட்டியா? பட்டியல் போடுவதை இதழ்கள் போடுவதற்குத் தங்கள் பிரபலத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோன்று சிறந்த கதைகள் என்று புத்தகம் வெளியிடுவதிலும் பெரும் அரசியலை உள்ளடக்கிக்
கொள்கிறார்கள். இப்படி பட்டியல் குப்பைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
எழுத்தாளனின் கடமை என்ன? தரமான படைப்புக்களைப் பொது சமூகப் புத்தியில் ஆக்கம் தரும் வகையில் படைத்தளிப்பதுதான். நிறைய நாவல்களை வெளியிட்டும் பல்லாயிரக்கணக்கான சிறுகதைகளை வெளியிட்டும் பல பரிசுகளைப் பெற்றும்விட்டால் உடனே பட்டியல் போட்டுவிடவேண்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இன்னும் உலகநிலையில் ஒரு தரமான அங்கீகாரத்தையடையவில்லை
எனப்தை உணரவேண்டும். குண்டுச்ட்டிக்குள் குதிரைதான். அப்புறம் குறிப்பிட்ட பகுதி எழுத்தாளர்கள் எனும்போது அங்கே ஒரு சாதி அரசியலை உருவாக்கி விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். வருத்தமாக உள்ளது.
பட்டியலாக இருந்தாலும் சரி எதுவானாலும் சரி இந்தப் படைப்பாளிகளின் இதுவரை வெளிவந்துள்ள படைப்புக்கள் தரத்தில் கொஞ்சமும் குறைந்ததில்லை. மதிப்பானவை. ஆனாலும் அவை உலக இலக்கிய அரங்கைக் நோக்கிப் பயணிக்கவேண்டிய துர்ரம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது என்பதையும் கசப்பாக ஏற்றுக்கொள்ள
வேண்டும். பட்டியல் அரசியலை விட்டு படைப்பை இன்னும் மேம்படுத்துங்கள் எழுத்தாள சகோதர ஆளுமைகளே.
2. பெண் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கருத்திற்கு சாரு நிவேதிதா அம்பை. குட்டி ரேவதி சல்மா சுகிர்தராணி எனப்
பங்கேற்கும் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இன்னும் வரலாம்.
எதற்கு இந்த அருவருப்பான நிக்ழ்வுகள். ஆண் எழுத்தாளர்கள் என்ன இலக்கிய உலகை குத்தகைகு எடுத்திருக்கிறார்களா? பெண் எழுத்தாளர்கள் எழுத்தை
எதற்கு விமர்சிக்கவேண்டும்? உண்மையான விமர்சனமாக இல்லாமல் அது தனிப்பட்ட நிலையில் பெண்களைத் தாக்கும் சூழல் சரியானதல்ல. ஒரு
நாவல் எழுதிவிட்டு சல்மா உலக நாடுகளுக்குப் போகிறார் என்று சாரு நிவேதிதா எதற்குப் பேசவேண்டும்? போனால் என்ன? ஒரேயொரு நாவலுக்கும் உலக நாடுகளுக்குச் செல்வதற்கும் என்ன தொடர்பு? அல்லது ஏராளமான கணமான தடித்த பக்கங்களில் நாவல்கள் எழுதி குவிப்பவர் என்றால் வெளிநாடுகள் போகலாமா? எதற்கு தனிப்பட்ட நிலையில் பெண்
எழுத்தாளர்களை விமர்சிக்கிறீர்கள்? அதற்கு என்ன உரிமை உங்களுக்கு யாரால் வழங்கப்பட்டிருக்கிறது?
ஒத்த கருத்துள்ள ஐந்து எழுததாளர்கள் கூடி ஒரு கூட்டம்
நடந்தாலே அங்கேயும் ஒரு அரசியலை நடத்துகிறார்கள் ஒற்றுமையாக
இருப்பதுபோல இயங்கும் ஐந்துபேரும். இது ஒரு சான்றுதான்.
இதெல்லாம் படைப்பின் சாதனையா?
படைப்பாளுமையா?
என்னத்தை இந்த உலகில் நீங்கள் சாதிக்க எழுத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?
அப்படியென்ன மகோன்னதமான உலகியல் படைப்பைத்
தந்திருக்கிறீர்கள்?
உங்கள் எழுத்துக்களைத் தேடித் தேடி ஓடி ஓடி ஆசைதீரப்
படித்துவிட்டு இப்போது உங்கள் நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களின்
எழுத்துக்களின் மேலே சந்தேகம் வருகிறது.
எமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி.
எமக்குத் தொழில் எழுத்து என்று சொல்லும் தகுதி உங்களில்
யாருக்காவது இருக்கிறதா?
எழுதுவதெல்லாம் எழுத்தாகாது.
எழுத்து ஒரு தவம். கடுமையான தவம்.
விளைந்த சகித்துக்கொள்ளுகிற உயர்ந்த மனப் பக்குவத்தின்
விளைச்சல்தானே எழுத்து?
தெரியாமல கேட்கிறேன்?
என்றைக்கு இந்த அக்கப்போரை விடப்போகிறீர்கள்?