Sunday, August 5, 2012

மகிழ்ச்சிகளும் பகிர்வுகளும்



                     அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு...

                     உறரணி வணக்கமுடன்.

                    தொடர்பணிகள் வலைப்பக்கம் வரமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 அன்றைக்கு விடுதலையாவேன் இந்த இறுக்கமாக பணிசூழ்ல்களிலிருந்து.

                    இம்மாதம் சில மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


                    1. என்னுடைய மகனுக்கு கல்கத்தாவில் எம்டெக் மேல்படிப்பிற்கு
                        என்ஐடியில் இடம் கிடைத்துவிட்டது. அவன் இன்னும் இரண்டு
                        ஆண்டுகளுக்கு கல்கத்தாவாசி. அவனிடம் வங்க மொழியைக்
                        கற்றுக்கொள்ளக் கேட்டிருக்கிறேன்.

                    2. இவ்வாரம் ஆனந்தவிகடன்  இணைப்பு என் விகடனில் (புதுச்சேரி)
                        என்னுடைய வலைப்பக்கம் குறித்து இரண்டுபக்கங்கள்  பிரசுரம்
                        ஆகியுள்ளது. உங்கள் அத்தனைபேரின் அன்போடு ஆனந்த
                        விகடனுக்கு என்னுடைய அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
                         கொள்கிறேன்.

                    3. தஞ்சை கலைஞர் அறக்கட்டளை சிறுகதைப்போட்டியில்
                       என்னுடைய சிறுகதைக்கு முதல் பரிசு (ரூபாய் 25000) கிடைத்து
                       உள்ளது.

                    4. தாமரை. புன்னகை. கணையாழி. தீராநதி. சிறகு போன்ற
                       இதழ்களில் கவிதையும் சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது.

                           இவையும் உங்களின் அன்பும் என்னை மேலும் இலக்கிய உலகில்
தொடர்ந்து பயணிக்க உத்வேகமாக உள்ளது. இன்றைக்குக் கிடைத்த அரைமணி நேரத்தில் இதனைப் பகிர்ந்துகொண்டு பேருந்து பிடிக்க ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

               
              ஏதேனும் ஒன்றின் மீதான
             வெறுப்பு
             தீவிரப்படும்போதுதான்
             பிறிதொன்றின்
             மீதான் விருப்பம்
             வலுப்படுகிறது...
             உடலறியாத உடலின்
             நிழல்போல
             விருப்பும்
             வெறுப்பும்
             காட்டுதலில் இல்லை
             காட்டாதிருத்தலில்தான்
             அதனதற்குரிய மரியாதையைத்
             தக்க வைக்கின்றன
             வர்ழ்வின் எல்லாக்
             கூறுகளிலும்...

             (நன்றி.... கணையாழி.... ஆகஸ்ட் 2012)


             யாரும் பார்க்கவில்லை
             என்பதற்காக
              எதையும் செய்துவிட
             இயலாத தருணங்கள்தான்
             எல்லாவற்றாலும்
             தரிசிக்கப்படுகிறது...

            (நன்றி........ தீராநதி...ஆகஸ்ட் 2012)




                    

17 comments:

  1. இதையம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    subbu rathinam

    ReplyDelete
  3. மகிழ்ச்சி தந்த செய்திகள்....

    இனிய நல்வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  4. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இந்த‌ ஆக‌ஸ்ட் மாத‌ம் 'ஆஹா' மாத‌மாயிருக்கிற‌தே த‌ங்க‌ளுக்கு! ம‌கிழ்வான‌ வாழ்த்துக்க‌ள்!


    க‌விதைக‌ள் இர‌ண்டும் க‌ல‌க்க‌ல்!


    காட்டாதிருத்த‌லில் தான்//


    எதையும் செய்துவிட‌//


    இவை உயிர்நாடியாகி க‌விதைக்க‌ருவை வெளிச்ச‌ப் ப‌டுத்துகிற‌து.

    ReplyDelete
  6. மிக மிக மகிழ்வான செய்திகள். மனம் நிறைந்த பாராட்டுகள் ஹரணி சார். எத்தனை இலகுவாய் வாழ்க்கையின் சூட்சுமத்தைக் கவிதைகளுக்குள் புகுத்திவிடுகிறீர்கள்.. ஆச்சர்யத்தோடு நன்றி கூறுகிறேன்.

    ReplyDelete
  7. நிறைவான குடத்தைக் காண நேர்கையில் ஏற்படும் மனநிறைவு இப்போதும்!

    இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்துக்குள் புதைந்திருக்கும் ஹரணியின் சுதந்திரத்துக்காக வெகு ஆவலுடன்!

    தீராநதியின் கவிதை க்ரீடத்தில் பதித்த வைரம்.அற்புதம் ஹரணி!

    //நேர்மையின் பளுவைச்
    சுமப்பது
    யாருமற்ற தனிமையின்
    ஏணியன்றி
    போதனையின்
    பக்கங்கள் அல்ல//

    என்ற என் கவிதையை எழுதியபோது ஏற்பட்ட அதே கிளர்வை இப்போதும் இந்த வரிகளில் உணர்கிறேன் ஹரணி!

    ReplyDelete
  8. தங்களின் மகனுக்கு வாழ்த்துக்கள்...

    என் விகடனில் தங்களின் வலைப்பக்கம் பிரசுரம் ஆனதற்கும், சிறுகதைப்போட்டியில் வென்றதற்கும். பல இதழ்களில் கவிதையும் சிறுகதையும் பிரசுரம் ஆனதற்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா...

    நன்றி…

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  9. உங்கள் எழுத்தின் தரத்திற்கு கிடைத்த விருதுகள் இவை நன்றி நண்பரே ............மகிழ்ச்சியை பகிர்ந்ததில் இரட்டிப்பாகிறது .......

    உங்களின் கவிதைகள்

    எளிமையில்
    சிகரம் தொடும்
    கலங்கரை விளக்கை போல .........

    பிரகாசிக்கிறது
    வார்த்தைகள்
    நிதர்சன வாழ்கையை
    படம் பிடிகிறது ......

    அற்புதம் ரசித்தேன்

    ReplyDelete
  10. ரொம்ப மகிழ்ச்சி சார். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. கணினி என்னைப் படுத்திய பாட்டில் உங்கள் மகிழ்ச்சியில் உடனே பங்கேற்க முடியவில்லை. BETTER LATE THAN NEVER. HEARTY CONGRATULATIONS SIR.

    ReplyDelete
  12. அனைத்திற்குமான வாழ்த்துகள் மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் பகிர்ந்துகொண்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் என்னுடைய பணிவான நன்றிகள் நெகிழ்வுடன்.

    ReplyDelete
  14. ரொம்ப மகிழ்வாயிருக்கிறது அய்யா... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  15. அனைத்திற்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. எளிதில் கிட்டாத‌தை எட்டி இருக்கும் உங்க‌ள் புத‌ல்வ‌னுக்கு எங்க‌ள் வாழ்த்துக்க‌ள்.
    நேர‌ம், கால‌த்திற்குக்கூட‌ க‌ட்டு/க‌வ‌லைப்ப‌டாத‌ வாழ்வுதான் உண்மையான‌ சுத‌ந்திர‌ம்.
    என் விக‌ட‌னில் வ‌லைபூ அறிமுக‌ம். "கலை"சிற‌ந்த‌ ப‌த்திரிக்கைக‌ளில் புதிய‌ க‌விதைகளின் அர‌ங்கேற்ற‌ம்.அற்புத‌ம். எல்லாம் கூடிவ‌ரும் வேளை, மேலும் பெருக‌ட்டும் வ‌ளமும் ந‌ல‌மும்.

    ReplyDelete
  17. அருமை அருமை. அதிலும் தீராநதி கவிதை. படிக்க இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை . இன்னும் விடுபடவில்லை அதன் பாதிப்பிலிருந்து.
    சத்தம் இல்லாமல் எவ்வளவு சாதித்து உள்ளீர்கள். - அவையத்து முந்தியிருக்கச் செய்வதிலிருந்து.
    வணங்குகிறேன்

    ReplyDelete