Saturday, April 5, 2014

யார் - ஒன்று




                            முதலில் அவன் ராணுவத்தில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தான். படிப்பறிவு இல்லாதவன். உடல் வலிமையின் அடிப்படையில் அவனுக்கு அந்தப் பணி கிடைத்திருந்தது.

                           பணியை சிறப்பாக முடித்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்று தன்னுடைய சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான்.

                          அவனுடைய கிராமம் பண்பாடு மிகுந்த கிராமம். மக்கள் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு வாழ்ந்திருந்த கிராமம்.

                          அந்தக் கிராமத்தைச் சுற்றி காடு இருந்தது,

                         அந்தக் காட்டில் சில விலங்குகள் இருந்தன.

                         அவற்றால் சில தொந்திரவுகளும் இருந்தன.

                         எனவே காட்டு விலங்குகளிடமிருந்து மக்களையும் வீட்டு விலங்குகளையும் காக்கின்ற பொறுப்பில் அவன் இருந்தான். எந்தப் பிரச்சினை என்றாலும் ஓடிப்போய் உதவுவான்.

                         அவன் கையில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் சுற்றித் திரிவான்.  அவனுக்கு விலங்குகள் குறித்த எந்தப் பயமும் இல்லை.

                           மனத்துணிவும் உடல் வலிமையையும் அவன் குறையாது பார்த்துக்கொண்டான்.

                           அடிக்கடி ஊர்க்கூட்டம் நடக்கும். எல்லோரும் கலந்துகொள்வார்கள். அவனும் கலந்துகொள்வான்.

                            அப்படியொரு சமயம் நடந்த கூட்டத்தில் முக்கியமான பிரச்சினை குறித்து தீவிரமாக எல்லோரும் கலந்து பேசிக்கொண்டிருக்க இவன் எழுந்து தன்னுடைய கருத்தைச் சொன்னான்.

                            அப்போது இவனைத் தடுத்து

                            யேய்.. என்ன இது நீ கருத்து சொல்றே? நீ படிக்காதவன். உனக்குக் கருத்துச் சொல்ல எந்த உரிமையும் இல்லை. தவிரவும் உன்னுடைய கருத்தையும் யாரும் ஏற்பதாக இல்லை, நீ உடல்வலிமை மிக்கவன். எனவே அந்தளவில் மட்டும் உன் பணிகளை இந்தக் கிராமத்திற்குச் செய்தால் போதும் என்று உட்கார வைத்துவிட்டார்கள்.

                          மனது வருத்தமாகிப்போனது இவனுக்கு.

                          படிக்காமல் போய்விட்டோமோ என்கிற வருத்தம் மேலோங்கியது. எனவே முடிவுசெய்து அந்தக் கிராமத்தில் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஓர் ஆசிரியரிடத்துப்போய்  அவரை வணங்கி.

                         ஐயா.. என்னை எல்லாரும் படிக்காதவன்னு சொல்றாங்க. உன் கருத்தைக் கேட்கமுடியாதுங்கறாங்க. எனவே நீங்க எனக்கு படிப்புச் சொல்லிக் கொடுங்க.. நான் படிக்கிறேன் என்றான்.

                        ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

                         எருமை மாட்டுப் பயலே... படிக்கப் போறியா? இது சின்னப் பசங்க படிக்கிற இடம்.. உன்னைமாதிரி தடிமாடடு ஆளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது. இந்த வயசுல உனக்குப் படிப்பும் வராது.. போ..மாடு மேய்.. மக்களைக் காப்பாத்து.. வந்துட்டான் படிக்க.. என்றபடிசிரிக்க எல்லோரும் சிரித்தடங்கினார்கள்.

                              மனம் வருத்தப்பட திரும்பி வந்தான்.

                              சில நாட்கள் கழிந்தபின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர் பணியை முடித்துவிட்டு காட்டுவழியே தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அவனைக் கவனித்தார்.

                                தெரிந்தவன்தான் என்று எண்ணியபடி நட்ந்தர்ர்.

                                சட்டென்று அவரின் எதிரே வழிமறித்து நின்றான். அவன் கையில் கத்தி இருந்தது.

                                 நடுங்கிவிட்டார் ஆசிரியர்.

                                 பாடம் சொல்லிக் கொடுக்கமுடியாது என்றதும் நம்மைக் கொல்ல வந்திருக்கிறான் போலும் என்றெண்ணிய  ஆசிரியரின் உடல் நடுங்கியது பயத்தால்.

                                  என்னைக் கொன்னுடாதப்பா என்றார் பயத்தில்.

                                   அவன் சொன்னான்.

                                  எனக்குப் பாட்ம் சொல்லிக் கொடுக்கமுடியாதுன்னு சொல்லீட்டிங்க... எனக்கும் படிக்க ஆசைஇருந்தும் படிக்கமுடியல,, யாரும் என்னோட கருத்தை மதிக்கறதா இல்ல.. இனி நான பேசி என்ன பலன்? அதனாலதான் ஆசிரியர் உங்க முன்னாடி இந்தக் கத்தியால என்னோட நர்க்கை அறுத்துக்கப் போறேன் என்றான்.

                                   ஆசிரியர் அதிர்ந்துபோனார்.. இரக்கம் வந்தது. அவனின்
படிப்பு ஆர்வம் புரிந்தது, சரி.. வேண்டாம் இந்த விபரீதச் செயல். உனக்குப் பாடம சொல்லிக் கொடுக்கறேன் என்றார்.

                                    மகிழ்ச்சியானான்.

                                    அதற்குப் பின் அவன் அந்த ஆசிரியரிடத்து ஒன்பது ஆண்டுகள் தீவிரமாகக் கல்வி கற்றான்.

                                    சிறந்த அறிவாளியும் ஆனான்.

                                    அவன்தான்

                                     நன்னுர்ல் எனும் இலகக்ண நுர்லுக்கும் திருக்குறளுக்கும் மிகச் சிறந்த  உரை எழுதிய

                                         இராமானுசக் கவிராயர் அவர்கள்.

                                       அடுத்த யாரில் சந்திக்கலாம்.

                                                                                                                தொடரும்.