கடவுளின் பிரதிநிதி...ஏழை மக்களின் வரம்...
நீ கடமைக்குப் பாடுபட்டவனல்ல
கண்ணியமாய் பாடுபட்டவன்..
நீ படிக்கவில்லை ஆனால்
எல்லோரையும் படிக்கவைக்கவேண்டும்
எனப் படிக்க வைத்தாய்...
செவிக்குணவிட்டபோதும் நீ
வயிற்றுக்கும் வளமாய் இட்டவன்..
எத்தனை உயரத்தில் இருந்தாய்
எப்போதும் ஏழையாய்தான் இருந்தாய்..
சிந்தனையில் ஏழை மக்களின்
வறுமை தீர்க்க வைரமாய் சிந்தித்தாய்..
உனக்கு முன்னரும் இல்லை
உனக்கு பின்னரும் இல்லை
கண்ணியமான அரசியலை
கற்பான அரசியலை
கடைசிவரைக்கு நடத்திவிட்டுப்
போனவன்...
உன்னாட்சியில் எல்லோரும்
வளம் பெற்றார்கள் ஆனால் நீமட்டும்
வறுமை தேசத்தின் குடிமகனாய்த்தான்
இருந்துவிட்டு போனாய்..
மக்களாட்சியில் கடவுளின் பிரதிநிதியாய்
மணம் வீசி நின்றவன் நீ..
உன் பிறந்த நாளில் ஒருமுறை நாங்களும்
இறந்து பிறந்து அனுபவிக்கிறோம்
இந்த ஒரு நாளையேனும்
மானுட வாசத்தோடு..
காமராசனே...கருணை வேந்தனே...
கவிபாடி இந்தப் புவியில் உனையடக்க
முடியுமா?
00000000000000000000000000000000000000000000000000000000
நீதி வழங்கும் நீதியரசருக்கே
வேட்டி கட்ட உரிமையில்லை
என்றால்
என்ன நடக்கிறது இந்த தேசத்தில்
ஆங்கிலேய அடிமைகளை
என்ன செய்வது?
நீதிதான் தீர்ப்புரைக்கவேண்டும்
உடனே அந்த கிளப்பை
அகற்றவேண்டும்.
கிரிக்கெட் என்ன
நமது பண்பாட்டின் பாரம்பரிய
விளையாட்டா?
அதற்கென்ன வேண்டியிருக்கிறது
ஒரு கிளப்?
பெர்னாட்ஷா சரியாகத்தான்
சொன்னார் சரித்திரத்தில்...
00000000000000000000000000000000000000000000000000000000000000000