ரயில் கட்டணம்
சமையல் வாயு
பெட்ரோல்
எல்லாம் உயர்வு
நிச்சயம்
குறையும்
இதற்கானவர்கள்
மீதான நம்பிக்கை...
0000
இடிந்து விழுந்தது
திணறிக்கொண்டிருக்கிறது
மூச்சுவிட ஒவ்வொரு
இதயமும் வேதனையில்
தாங்க முடியவில்லை
11 மாடியின்
சுமை..
000
என்னவாயிற்று?
பறந்ததும்
விழுந்ததும்
மறைந்ததும்
என்னவானார்கள்?
000
ஆணாய் துடித்தான்
பெண்ணாய் துடிக்கிறான்
அர்த்தநாரியாய்
அர்ப்பணித்தான் அந்த
லோகநாதன்
சிலிர்க்கிறோம்..
0000