Tuesday, January 4, 2011
எண்ணங்கள்
நான்காக மடிக்கப்பட்டு
சாலையின் ஓரமாய் கிடந்தது
அந்த வெள்ளைத்தாள்...
காற்று அதனை எழுப்பிக்
கொண்டிருந்தது..
எடுத்துப் பார்க்கையில்
எதுவும் எழுதப்படாமல்
இருந்தது..
நினைவில் பொங்கின
எண்ணங்கள்...
உனது அன்பை எழுதுவேன்
என்றாள்...
உனது பரிவை எழுதுவேன்...
என்றது குழந்தை...
உனது அவமானத்தை எழுதுவேன்
என்றது உறவு...
உனது பலவீனத்தை எழுதுவேன்
என்றன சுற்றம்...
உனது போராட்டத்தை எழுதுவேன்
என்றது காலம்...
உனது சகிப்புத்தன்மையை எழுதுவேன்
என்றது சந்தர்ப்பம்...
உனது பற்றுதலை எழுதுவேன்
என்றது நட்பு...
உனது வாழ்வியலை எழுதுவேன்
என்றது கவிதை...
எண்ணங்கள் இறைந்தோடின
காற்றுவெளியெங்கும்...
கடவுள் வந்தார்
நீயென்ன எழுதுவாய் என்றார்
மௌனத்தை எழுதுவேன் என்றபடி
தாளை அவரிடம் நீட்டிவிட்டு
இதிலென்ன நீங்கள் எழுதுவீர்கள்
என்றேன்...
கடவுள் சொன்னார்
நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்
அவரவர்க்கான எண்ணத்தை
என்றபடி மறைய,
இப்போது தாள் என்னிடமே....
Subscribe to:
Post Comments (Atom)
எண்ணங்களுக்கு சரியான நியாயம் செய்திருக்கிறீர்கள் இறுதி வரிகளில்..அருமை
ReplyDeleteகடவுள் சொன்னா சரியாத்தானிருக்கும்.
ReplyDeleteஎங்களுக்கு அதில் அருமையான கவிதை கிடைத்து விட்டது.
ReplyDeletehmmm, ovvoru manishanukkum ovvoru thought!
ReplyDeleteஎழுதப்படாத தாள் இத்தனை பேசி விட்டது.
ReplyDeleteDear Sri. HARANI, Can you please enlighten me where the word verification occurs Ijust am totally ignorant. My email id is gmbat1649@yahoo.in. Looking forward to see your help in removing any irritant. thanks.
ReplyDeleteஎழுதப் படாத தாள் எழுதப்படாததாகவே இருக்கட்டும் அவரவருக்கான எழுதப் படவேண்டியவைகள் எழுதப் படுவதற்கு.அருமை ஹரணி.
ReplyDeleteநீங்கள் எழுதுவதாக சொன்னதும் கடவுள் எழுதியதாக சொன்னதும் ஒன்றாகத் தான் தெரிகிறது எனக்கு அந்த வெற்றுத் தாளில்.
ReplyDeleteஅருமை. வெற்றுத்தாள் தான். ஆனால் விரிகிறது பாருங்கள் பெரிதாய். இது தான் கவிதை.
Beautiful! romba azhagaana thought sir...
ReplyDeleteu know.. enakku intha kavitha padikkum pothu, kannadasan oda oru kavitha en appa eppovum quote pannuvaar.. athu ninaivil varuthu...
......
Anubavaththaal thaan amaivathu vaalvenil
Anndavane nee yaen enak kaettaen
Anndavan enthan arughinil vanthu
anubavamae thaan naan ena sonnaan..
.....
itha pola varum...
very nice sir! :)
கையில் கிடைத்ததொரு வெற்றுத்தாளைப் பார்த்ததும் உங்களுக்கு ஏற்பட்ட “எண்ணங்கள்” எழுத்து வடிவம் பெற்று எங்களையும் சிந்திக்க வைத்தது. மகிழ்ச்சி.
ReplyDelete================================================
// தென்னம்பிள்ளை பற்றிய கவிதை எதார்த்தமாக இருந்தது. தென்னம்பிள்ளைக்கு இரங்கும் மனது பாராட்டுக்குரியது. தொடர்ந்து வருவேன்.//
அன்புள்ள திரு. ஹரணி அவர்களுக்கு,
தங்கள் முதல் வருகைக்கும், உற்சாகப் படுத்தும் விதமான கருத்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
// தொடர்ந்து வருவேன். // என்று தாங்கள் கூறியுள்ளதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.
மீண்டும் வந்தேன்
ReplyDeleteஏதும் எழுதப்பட்டிருக்கிறதா
என்று பார்க்க
அந்த வெற்றுத்தாளில் .
நன்றி திருநாவுக்கரசு.
ReplyDeleteமதுமிதா நீ சொன்னாலும் சரியாத்தான் இருக்கும் எனக்கு. நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி வாசன்.
ReplyDeleteunmaithan naga. vaanga. karutthu sollunga. nanri.
ReplyDeleteஎழுதப்படாத தாள் எத்தனை வேண்டுமானாலும் பேசும். எப்படி வேண்டுமானாலும் பேசும். கோடி மனமிருந்தால் கோடி செய்திகள் பேசும். நன்றி ரிஷபன்.
ReplyDeleteஐயா..
ReplyDeleteஅதுவொரு பிரச்சினையே இல்லை. இப்போது எடுத்துவிட்டீர்களே நன்றி ஐயா.
அவரவர்க்கானதை எழுதட்டும் என்று விட்டாலும் அவன் விடுவதில்லை. அவன் நினைப்பதைதானே நாம் நம்முடைய தாளாக இருந்தாலும் எழுத முடிகிறது. அவன்றி ஒரு எழுத்தும் அச்சாகா. நன்றி சுந்தர்ஜி.
ReplyDeleteசிவகுமரன்..
ReplyDeleteதங்களின் அன்பிற்கு நன்றிகள். இருமுறை வருகை தந்து இனிக்க வைத்தீர்கள் தோழா. நன்றி. நன்றி.நன்றி.
romba nanri matangi mawley. unarvu poorvamaana karutthukkal. nanrikal pala.
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றிகள் வைகோ ஐயா.
ReplyDeleteவித்யாசமான கவிதை! இப்படித் தான் நம் தலையில் எழுதி உள்ளார்களோ?
ReplyDelete/கடவுள் சொன்னார்
ReplyDeleteநான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்
அவரவர்க்கான எண்ணத்தை
என்றபடி மறைய,
இப்போது தாள் என்னிடமே.... /
எண்ணிப் பார்க்கவேண்டிய வரிகள்
//உனது பற்றுதலை எழுதுவேன்
ReplyDeleteஎன்றது நட்பு...//
என் இடுகைக்கு வந்தமைக்கு நன்றி பேராசிரியரே.
உங்கள் வரிகள் பொங்கல் நேரத்தில் இந்த வரிகள் என் ஆருயிர் நண்பன் "ஆனந்தனை" நினைவு படுத்துகின்றது. பொங்கலுக்காக வாழ்த்து சொல்ல அவன் ஒருவனை தான் அழைக்க இந்தியாவுக்கு தொலைப்பேசியில் முயன்றேன். முடியவில்லை. உங்கள் வரிகள் எனக்கு அவனுடன் பொங்கல் திருவிழாவை எழுபதின் கடைசியிலும் / எம்பதுகளில் கொண்டாடியதையும் நினைவு படுத்துகின்றது. எங்களை விட அவர்கள் வீட்டில் விமர்சியாக நடக்கும்.
நன்றி சாய் தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும்.
ReplyDeleteவெற்றுத்தாளை மனமெனக்கொண்டு படித்தேன்
ReplyDeleteசரியாகத்தான் இருந்தது.நல்ல கவிதையைப் படித்த நிறைவு.
வாழ்த்துக்கள்.
நன்றி ரமணி சார். தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும்.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமலட்சுமி.
ReplyDelete