Wednesday, June 16, 2010

குறும்புப்பேச்சு......என் கண்ணப் பாத்து
சொல்லுங்க...

எங்களுக்குன்னு இலக்கியம்
அதிகம் இருக்கா?இதையும்
பிளாட் போட
வர்றாங்களாம்..சீரியல் பாத்துட்டு
என்னிக்கும்மா
வருவே?எங்களுக்குக் கதைகள்
சொல்ல
அந்த
முதியோர் இல்லங்களை
மூடிவிட்டு
பாட்டிகளை
அனுப்புங்கள்.


ஒரு
பிள்ளைத்தமிழ்
பாடவா?கனவு காணுங்கன்னு
கலாம் தாத்தா
சொன்னாரு..டாடியும் மம்மியும்
பிரிகேஜி
இண்டர்வியுக்குப்
போயிருக்காங்க

என்ன பாக்குறீங்க....
அலாவுதீன் விளக்கு
கிடைக்குமா?
ஹோம்வொர்க்
செய்யணும்.

வாசிக்க...சுவாசிக்க...புத்தகங்கள் வாசிக்காத யாரிடமும் பழகவேண்டாம். உயிர்வாழ சுவாசிப்பதைப் போன்றது புத்தகங்கள். காசுகொடுத்து வாங்கி வாசிக்கவேண்டும். வாசித்தல் என்பது அற்புதமானது. அது தாய்மையைபோன்ற அன்பைப் பரிமாறும். ஒரு மலர்ந்து வாசம் வீசும் போல அழகான தருணத்தைத் தரும். துன்பத்தின் வலிக்கு மருந்தாய் இருக்கும். நாம் உயிர்த்திருக்கிறோம் என்பதை அறிவிப்பவை புத்தகங்கள்தான்.


ஒருமுறையேனும் வாசித்துவிட......


1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்.
2. தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்.
3. மௌனியின் அழியாச்சுடர்.
4. ஜெயகாந்தன் சிலநேரங்களில் சில மனிதர்கள்
5. தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
6. பாலகுமாரன் இரும்புக்குதிரைகள்
7. பிரபஞ்சன் சிறுகதைகள்.
8. நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள்
9. சா.கந்தசாமியின் தொலைந்துபோனவர்கள்.
10.சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை
11. ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
12. வண்ணநிலவனின் கடல்புரத்தில்
13. ஐசக். அருமைராசனின் கீறல்கள்
14. கோணங்கியின் மதினிமார் கதைகள்
15. விட்டல்ராவின் நதிமூலம்
16. சுஜாதாவின் நைலான் கயிறு
17. கல்கியின் பொன்னியின் செல்வன்.
18. நீல பத்மநாபனின் தலைமுறைகள்
19. லா.ச.ராவின் அபிதா
20. ஹெப்சிபா ஜேசுதாசின் டாக்டர் செல்லப்பா
21. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்
22. அம்பையின் வீட்டின் மூலையில் சமையலறை
23. வாஸந்தியின் சிறுகதைகள்
24. கிருத்திகாவின் புகை நடுவில்
25. சிவகாமியின் ஆனந்தாயி
26. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
27. பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்
28. ஜெயமோகனின் ஏழாம் உலகம்
29. விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி
30. எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து
31. எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதைகள்.
32. திலகவதியின் கல்மரம்
33. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல்
34. சி.எம்.முத்துவின் நெஞ்சின் நடுவே.
35. பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதைகள்
36. தேவனின் துப்பறியும் சாம்பு
37. தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார்.
38. கார்த்திகா ராஜ்குமார் சிறுகதைகள்
39. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை
40. ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை
41. சி.ஆர்.ரவீந்திரனின் ஈரம் கசிந்த நிலம்.
42. ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள்
43. மு.மேத்தாவின் சோழநிலா
44. சாண்டியல்யனின் யவனராணி
45. ஆதவனின் காகிதமலர்கள்
46. சோலைசுந்தரபெருமாளின் செந்நெல்
47. யூமா வாசுகியின் இரத்த உறவு
48. கே.டேனியலின் கானல்
49. க.நா.சுவின் பித்தப்பூ
50. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்

இந்தப் பட்டியல் கன்னாபின்னா பட்டியல். என் நினைவிலிருந்து வருவது. பட்டியல் முடியவில்லை. பழைய வாசித்த நினைவுகளை அசைபோட்டபடியே தந்திருக்கிறேன். தொடர்ந்து பட்டியல்கள் தருவேன்.


வாசிக்கவென்று இலக்கிய இதழ்கள்.

1. தஞ்சையிலிருந்து வரும் சௌந்தர சுகன்..
2. திருச்சியிலிருந்து வரும் உயிர் எழுத்து...
3. சென்னையிலிருந்து வரும் யுகமாயினி...
4. பெங்களுரிலிருந்து வரும் புதிய விசை...
5. சென்னையிலிருந்து வரும் இலக்கியப்பீடம்..
6. புதுதில்லியிலிருந்து வரும் வடக்குவாசல்...
7. திருப்பூரிலிருந்து வரும் கனவு
8. சென்னையிலிருந்து வரும் தீராநதி...
9. சென்னையிலிருந்து வரும் தஞ்சாவூர்க்கவிராயர்...
10. பாண்டிச்சேரியிலிருந்து வரும் சுந்தர்ஜி..
11. கடலுர்ரிலிருந்து வரும் சங்கு...
12. புத்தகம் பேசுது
13. மணல் வீடு
14. சென்னையிலிருந்து வரும் உயிர்மை
15. கேரளாவிலிருந்து வரும் கேரளத்தமிழ்