Saturday, November 5, 2011

அவர்களும் நமது பிரதிகளும்



இப்போது அதிகம்
அலைகிறார்கள்...

நெருக்கடியாக சாலையின்
நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில்
காற்றுவெளியில்
கவலையற்று நிற்கிறார்கள்...

ஒருவன் இளைஞன்
ஒருத்தி இளம்பெண்
ஒருவர் முதியவர்

அவரவர் அவரவர்
கவலைகளோடு
போய்க்கொண்டிருக்கையில்

இவர்கள் சிரித்தபடியும்
அல்லது அழுதபடியும்
அல்லது ஏதோ முணுமுணுத்தபடியும்
நிற்பதைப் பார்க்கையில்
உள்ளுக்குள் உடைகிறது
ஒரு பயம்...

அவர்கள் சிரிப்பு நம்முடையதுபோல
அவர்கள் அழுகை நாம் அழுவதுபோல
அவர்கள் முனகல் நாம் முனகுவதைபபோல...

வாழ்க்கையினைப்
பிரதியெடுத்த பிரதியை
மனதில சுமந்திருப்பதுபோல...