ஒவ்வொரு
ஆண்டின் ஒவ்வொரு நாளும்
நமக்கு
முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள்.
மந்திரக்கோலைத்
தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும்
அல்லது
விளக்கைத்
தேய்த்தவுடன் பூதம் வந்து கேட்டதை எல்லாம்
நிறைவேற்றித்தருவது
ஒருபோதும் வேண்டாம்
அவை
வாழ்வின் சுவையல்ல…சுவைக்காது..
அது
வாழ்க்கையுமல்ல
கடந்துபோன
ஆண்டுகளில்
நிகழ்ந்ததுபோன்றே
நிகழ்ந்தாலும்
கவலையில்லை
எதனையும்
எதிர்கொள்ளும் திறனும்
எல்லாவற்றிலும்
வென்றெடுக்கும்
நம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கடின
உழைப்பும்
ஒழுக்கமும்
நேர்மையும் உண்மையும்
இவ்வாண்டிலும்
குறையாது
நமக்கு
நிறைந்திருக்கட்டும்
இதனைப்
போராடிப் பெறுவோம்
பூவின்
உன்னதமான ரகசியமான தேனை
எடுப்பதற்கு
ஒரு தேனீ ஒருநாளைக்குத் தொடர்ச்சியாக ஆறு மைல்கள் பறக்குமென்று
அறிவியல்
சொல்கிறது..
நம்
கண்முன்னே பிருமாண்டம் காட்டும் மிகப்பெரிய தேன்கூட்டையும் அதில் சேகரிக்கப்பட்ட
தேன்துளிகளையும்
எண்ணிப்பாருங்கள்..
எத்தனை
தேனீக்கள்.. எத்தனை மைல்கள்.. சிறகடிப்பென்று..
நம்
வாழ்க்கையும் உறவுகளும் தேன்கூடுதான்
உழைப்போம்
உயர்வோம்
அதற்கெனப்
போராடும் வாழ்வே அமையட்டும்
ஒவ்வொரு
புத்தாண்டிலும்
அதுதான்
வாழ்வதன் அடையாளம்.
புத்தாண்டு
வாழ்த்துகள்.