அன்புள்ள வணக்கம்..
இடைவெளிகள்தான் அன்பைத் தக்க வைக்கின்றன எனலாம்.
வேலைப்பளு படைப்பிலக்கியப் பணிகள் என்று நாள்கள் கடநதுவிட்டன.
இந்த இடைவெளியில் நிறைய மகிழ்ச்சிகள்.
1. முன்பு சொன்னபடி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்
இரண்டாம் பரிசு.
2. செல்லாத நோட்டு எனும் சிறுகதைத் தொகுப்பின் சில கதைகள்
கல்லுர்ரிப் பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.
3. தற்போது நேற்று தினமலர் வாரமலர் டிவிஆர் நினைவுச் சிறுகதைப்
போட்டியில் என் கதைக்கு முதல் பரிசு ..... ( சிறுகதைத் தலைப்பு அவளும் அம்மாதான்...) கிடைத்துள்ளது.
4. பேருந்து நாவல் வெளிவந்துவிட்டது.
தொழில் நுட்பம் தெரியாததால் பரிசுக் கதைகள் இரண்டையும் வெளியிடுவதில் தாமதம் நேர்கிறது. விரைவில் இன்னும் இரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்து எதுவாயினும் தெரிவிக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.