அன்புள்ள
ஹரணி வணக்கமுடன்.
கதை எழுதிய காலத்தில் பெரும் பத்திரிக்கைகளான கல்கி. ஆனந்தவிகடன். குமுதம் இவற்றில் கதைவருவது பெருமைக்குரிய விஷயம்.
அதனை நோக்கித்தான் இலக்கும் நிச்சயிக்கப்பட்டிருக்கும்.
அப்படி பாடுபட்டதில் என்னுடைய முதல் கதை கல்கியில் வருவதற்குப் பத்தாண்டுகள் ஆயின. அப்புறம் பல கதைகள் கல்கியில் வெளிவந்திருகின்றன.
என்றாலும் கல்கி நடத்தும் சிறுகதைப்போட்டியில் பரிசு
வெல்வது என்பது ஓர் உறுதியான இலக்காகவே எண்ணி இயஙகினோம் நானும் என் நண்பர்களும்.
அதற்குப் பலனாய் சென்ற ஆண்டு அனுப்பிய கதை பிரசுரத்திற்குத் தேர்வானது. இது வெற்றியின் அறிகுறியாகப் பட்டது எனக்கு.
முயற்சியில் தளர்ந்துவிடக்கூடாது என்பதில்
தெளிவும் கடும் உழைப்புமாக இருந்தேன்.
இவ்வாண்டு கனிந்துவிட்டது.
இவ்வாண்டு அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில்
என்னுடைய கதை இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.
இதற்குப் பிடித்திருக்கிற காலங்கள் 27 ஆண்டுகள் என்றாலும்
மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றிக் கனியைப் பறித்துவிட்டோம் என்பதில்.
இவ்வாண்டு கல்கிக்கு 73 ஆவது ஆண்டு.
2016 ஆம் ஆண்டில் கல்கி பவள விழா கொண்டாடும். ‘
பவளவிழாவில் எப்படியும் முதல் பரிசு பெறவேண்டும் என்கிற உத்வேகத்துடன் என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பரிசுபெற்ற கதை அடுத்தவாரம் வெளியாகும்.
கதையின் தலைப்பு / மூங்கில் சுமந்தவர்கள்.
உங்களுடன் மகிழ்ச்சியைப் பகிரும் தருணத்தில் கல்கிக்கும் நடுவர் குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அன்னை இந்திரா காந்தி உருவாக்கிய பொன்மொழிகளுன் ஒன்று கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை என்று. என்னுடைய 40 ஆண்டுகால படைப்பு அனுபவத்தில் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன்.
தொடர்ந்தும்.
00000000000