தமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்தலைப்பில் ஏற்கெனவே வேறு யாராவது ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா..நாம் தெரிவு செயதிருக்கும் தலைப்பைத் திறம்படச் செய்வதற்கான வாய்ப்புக்கள்,, செய்யப்போகும் ஆய்வுகுறித்த நமது நிலைப்பாடு (அதாவது கருதுகோள் என்பார்கள் ஆய்வுலகில். இதைப் பற்றிச் சுருக்கமாக சொல்வது என்றால் கருதுகோள் என்பது தெரியாத ஊரில் கையில் உள்ள முகவரியைக் கொண்டு தேடுவது) இவற்றைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் ஏதோ ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து அதுபற்றிய எந்த பார்வை நுர்லையும் வாசிக்காமல் நிறைவு செய்து முனைவர் பட்டம் பெறுவது என்பது இயல்பாகியிருக்கிறது (இதில் வழிகாட்டிக்கும் தெரியாமல் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்கும் தெரியாமல் ஒரு தலைப்பில் நிகழும் கூத்தெல்லாம் இருக்கிறது) நோக்கம் எப்படியாவது ஒரு முனைவர் பட்டம் பெறுவது, இவர்களுக்கு முனைவர் பட்டம் வழஙகும் வாய்மொழித்தேர்வில் கலந்துகொண்டு பார்வையாளராக உட்கார்ந்தால் போதும் மூன்றாண்டுகள் பாடுபட்டு செய்யும் முனைவர் பட்ட ஆய்வுகுறித்து ஐந்துநிமிடம்கூட சொல்லத்தெரியாமல் அப்படியே பத்து பக்கங்கள் நோட்ஸ்போல் எடுத்துக்கொண்டு அபப்டியே மேடையில் வாசித்துவிட்டு ஏதேனும் பார்வையாளர்கள் கேள்விகேட்டால் அதற்கும் பதில் சொல்லத்தெரியாமல் ஆய்வேட்டைப் பார்த்து சொல்வது,, அல்லது தடுமாறுவது உடனே வழிகாட்டி ஆய்வேட்டில் குறிப்பிட்ட பக்கத்தைச் சொல்லி அந்தப் பக்கத்தில் விடை இருக்கிறது பார்த்து சொல் என்பதுபோல சொல்வது,,, இப்படி முனைவர்பட்டம்,,,,
இத்தனைக்கும் இப்படித் தரமற்ற ஆய்வுகள் நடப்பது 40 விழுக்காடுதான் ஆனால் அதேசமயம் 60 விழுக்காடுகள் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படும் ஆய்வுகள் உள்ளன, அவைதான் தமிழ்மொழியின் சிறப்பையும் பண்பையும் மதிப்பையும் இன்றளவும் கட்டிக் காத்துவருகின்றன, அதற்கு ஒரு சான்றாகத்தான் இந்தப் பதிவு,
திருச்சி துர்யவளனார் தன்னாட்சிக்கல்லுர்ரியில் ஒரு ஆய்வேடு, அதன் தலைப்பு வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமைச் சிந்தனைகள் என்பதாகும்,
ஆய்வாளர் பெயர் கே, சரவணன்.
வழிகாட்டியின் பெயர். பேரா.எப். செல்வக்குமார்.
புறநிலைத்தேர்வாளர் முனைவர் க. அன்பழகன்
இந்த ஆய்விற்காக ஆய்வாளர் சரவணன் வைரமுத்துவின் ஒட்டுமொத்தப் படைப்புக்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார், ஆய்விற்காகக் கடினமாக உழைத்துள்ளார். ஆய்வின் பின்னிணைப்பில் வைரமுத்துவின் வாழ்க்கைக்குறிப்பு, இதில் பல புதிய தகவல்கள், அப்புறம் ஆய்வின் பாதை விலகாமல் ஆய்வுகுறித்து தரமான கேள்விகளைத் தயார் செய்துகொண்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து நேர்காணல் நிகழ்த்தியிருக்கிறார். அதில் பல கேள்விகள் வெப்பமான பகுதிகளைக் கொண்டவை என்றாலும் அதற்கு சிறிதும் முரண்படாமல் கோபப்படாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள்,
இவ்வாய்வுத் தொடர்பாக கிட்டத்தட்ட 100 நுர்ல்களைப் படித்திருக்கிறார் ஆய்வாளர் சரவணன். இவை மனித உரிமை சார்ந்த நுர்ல்கள்.
அதுதவிர ஆங்கில நுர்ல்கள்..கலைக்களஞசியங்கள்..ஆய்வேடுகள்.. எனத் தெளிவாக தனது ஆய்வின் முனைப்பைக் கூர்மைப்படுத்த அத்தனை நுர்ல்களையும் வாசித்து தனது ஆய்வில் வைரமுத்துவின் 27 நுர்ல்களையும் வாசித்து (கவிதைகள்... சிறுகதைகள்.. நாவல்கள்..) அவற்றின் பொருண்மையோடு இவற்றையெல்லாம் ஒப்பிட்டுத் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்திருக்கிறார்.
அவர் ஆய்வின் போக்கிற்காக இயல்களைப் பகுத்திருக்கும் முறை பின்வருமாறு.
1. உலக வரலாற்றில் மனித உரிமைச் சிந்தனைகள்
(இந்த இயலில் மனித உரிமை என்கிற சொல்லுக்கான பொருள்
தொடங்கி உலகளவில் காலந்தோறும் மனித உரிமை குறித்த
பல்வேறு கருத்தாக்கங்களை வரலாற்றடிப்படையில் மாறாமல்
தொகுத்திருக்கிறார். மேலும் மனித உரிமை குறித்த எந்த ஐயப்
பாட்டிறகுமான தெளிவாக இவ்வியலை அமைத்திருக்கிறார்.
2, இவ்வியலில் தமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்
இவற்றில் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் தமிழ
இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். காப்பியங்கள். பக்தி
இலக்கியங்கள் சித்தர்கள். தற்காலக் கவிதைகள் என அமைத்து
இவற்றில் பல்வேறு களங்களில் மனித உரிமைப் பற்றிய சிந்தனை
களைப் பட்டியலிட்டிருக்கிறார்,
3, வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமை சிந்தனைகள்
வைரமுத்து படைப்புக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்
பட்ட இயல்,
3, வைரமுத்து படைப்புக்களில் சமுக மதிப்புகள்
சமுகப் பதிப்புக்கள் குறித்த வைரமுத்துப் படைப்புக்கள்.
4, வைரமுத்து படைப்புக்களில் பெண்ணிச்சிந்தனைகள் - உரிமைகள்.
பெண்ணியம் குறிதத கருத்தாக்கங்கள்.
இப்படி மிகத்தெளிவாக ஆய்வாளர் சரவண்ன் அவர்கள் இவ்வாய்வேட்டை அளித்திருக்கிறார். இவற்றின் சிறப்புக்களாகச் சிலவற்றைக் குறிப்பிடவேண்டும்.
1, வைரமுத்துவின் ஒரு நுர்லைக் கொண்டே ஒரு முனைவர் பட்டத்தை
அடைந்துவிடும் சூழலில் அவரின் 27 படைப்புக்கள் (ஒட்டுமொத்தம்)
முழுமையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது, அதாவது 27 முனைவர்
பட்டங்களை ஒரே முனைவர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்டது,
ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் தரமாக செய்யவேண்டும் என்ற
முனைப்புதான்,
2, வைரமுததுவுடன் நிகழ்த்திய நேர்காணல். வைரமுத்து பதில்கள்.
3, அதற்காக ஆய்வாளர் வைரமுத்துவின் 27 நுர்ல்களை வாசித்தது
மட்டுமின்றி மனிதஉரிமை தொடர்பாக 100 நுர்ல்களை வாசித்ததும்
அதனைப் பற்றி சரியாக ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டது.
4, மேலும் ஆய்வேட்டை ஆய்வாளரே கணிப்பொறித்தட்டச்சிட்டது,
5, வாய்மொழித்தேர்விற்காக பவர் பாய்ண்ட் விளக்கத்தையும்
ஆய்வாளரே மேற்கொண்டது,
6, கையில் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் தான் மேறகொண்ட ஆய்வு
குறித்து 40 நிமிடங்களுக்கும் மேலாக ஆய்வாளர் சரவணன்
விளக்கம் சொன்னது, ஆய்வு தொடர்பாக கேட்கப்பெற்ற கேள்வி
களுக்கும் தரமான சரியான பதிலைச் சொன்னது,
இப்படி பல சிறப்புக்களைக் கொண்டது இவ்வாய்வு. பாராட்டிற்கு உரியவர் ஆய்வாளர் சரவணன்.
கடைசியாக ஒரேயொரு கேள்வி,,,,
இப்படித்தானே உலகில் எல்லா முனைவர் பட்ட (பிஎச்டி) ஆய்வுகளும் நிகழ்த்தப்படவேண்டும், இதுதானே ஆய்வின் முறை, இப்படித் தானே நிகழ்த்துகிறார்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது,
என்று கேட்கலாம்,
ஒரேயொரு பதில்,
ஆய்வாளர் சரவணன் அவர்கள் இரு கண்களும் தெரியாத பார்வையற்றவர்,
இத்தனையையும் இன்னொரு படிக்கக்கேட்டு மனதில் பதிய வைத்து நிகழ்த்தியவை,
என்றைக்கும் தமிழ்மொழி அழியாது. சரவணன் போன்ற உண்மையான தரமான தமிழ் ஆய்வாளர்கள் இருக்கும்வரை தரமற்ற ஆய்வுகள் மேலெழும்பியும் நிற்காது ,
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
சங்கே முழங்கு.......
எப்போதும் வெல்லும் தமிழ்,,,,,