வணக்கம்
இவ்வாண்டு இப்போதுதான் வர முடிந்தது.
கணிப்பொறியை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாத சூழல்.
இன்னும் பணிகள் விடவில்லை.
இருப்பினும் வந்திருககிறேன்.
எப்போதும் போலவே உங்களின் அன்பு வேண்டி
0000000000000000000000000000000
இந்த வாரம் விகடனில் வந்த கவிதையிலிருந்து தொடங்குகிறேன்.
சொற்பறவையின் முதலொலி
எங்கேனும்
முகமறியாமல் கேட்கும்
பறவையின் மெல்லொலியில்
நம் மிருவருக்கிடையிலான
காதலின்
முதல் சொல்லை
புதுப்பித துக்கொள் கிறேன்
கடைசிப பேருந்தின் ஒலி கரைந்துவிட்ட
இருளின் அமைதியில் காத்திருக்கிறேன்
உன் கைபபேசியின் கூடுடைத்து வரும்
சொற்பறவையின் முதலொலியைக்
கேட்க.
( நன்றி : ஆனந்த விகடன் 12.3.2014)
------------------------------------------------------------------------------------------------
என்
நத்தையோட்டுத் தண்ணீர்
நூலுக்கு
சேலம் அருணாசலம்
அறக்கட்டளைச் சார்பில்
சிறந்த நூலுக்கான
முதல் பரிசு
கிடைத்துள்ளது .
00000000000