உங்களுக்குண்டா?
1 சிலரை நமக்குப் பிடிக்காது. வேண்டாம் என்று விலக்குவோம். ஆனால் முக்கியமான நேரத்தில் யாரை விலக்கினோமோ அவர்களிடத்துதான் உதவி கேட்டு நிற்கவேண்டிய சங்கடம் வரும்..
உங்களுக்குண்டா?
2. நமக்கு உற்ற உறவுகளில் யாரேனும் இறக்கும்போது திட்டமிட்டதுபோல அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல், வரமுடியாமல் போகிறது.
உங்களுக்குண்டா?
3. மனசு கேட்காமல் போய் அன்பு காட்டுவோம். உதவியும் செய்வோம். நம்முடைய பேச்சு அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கும். அலட்சியம் செய்வார்கள். அடுத்தமுறை என்ன ஆனாலும் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் மனசு கேட்காமல் மறுபடியும் அவமானத்திற்கு ஆளாவோம். அந்த துயரம் சொல்லமுடியாது.
உங்களுக்குண்டா?
4. பல முறை ஒன்றிற்காகப் போராடுவோம். கிடைக்காது. சரி இனி வேண்டாம் என்று விடும்போது அது எளிதாக மற்றவருக்குக் கிடைத்துவிடும். ஏன் இப்ப கேட்டிருந்தா கொடுத்திருப்போமே என்பார்கள். மனசு நொந்துபோகும்.