அண்ணாமலை அரசரின் அளப்பரிய கருணைத்திறத்தாலும் பெருங்கருணையாலும் விளைந்தது அணண்மலைப் பல்கலைக்கழகம்.
அதில் படிப்பது என்பது பெரும்பேறு. அதில் பணிபுரிவது என்பது பெரும் பெரும்பேறு. கொடுப்பினை. அது எனக்கு வாய்த்திருக்கிறது.
தொலைதுர்ரக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிவதால் ஒவ்வொரு சனி. ஞாயிறும் தொடர்பு வகுப்புக்களுக்காக வெளியூர் செல்வது எனப்துதான் பணி. அப்படித்தான் இம்முறை நாமக்கல் பயணம்.
நாமக்கல் என்றதும் வழக்கமாக ஆஞ்சநேயர்தான் என் நினைவுக்கு எப்போதும் வரும். நண்பர் கவிஞர் சேலம். அ.கார்த்திகேயனிடம் பேசியது நினைவுக்கு வந்தது. காரணம் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளர். கார்த்தியிடம்தான் பெருமாள் முருகனை எப்படியும் சந்திக்கவேண்டும் என்கிற தீராத விருப்பத்தில் இருக்கிறேன் என்று சொல்லிவந்தேன். அது இயலாமல் தள்ளிப்போக சென்ற ஆண்டு என்னுடைய புத்தகங்கள் சிலவற்றைக் கார்த்தியிடம் தந்து பெருமாள் முருகனிடம் வழங்கிவிடுங்கள் என்று சொன்னேன். கார்த்தி உதவினார். ஆக நான் சந்திப்பதற்கு முன்னதாக என்னுடைய புத்தகங்கள் பெருமாள் முருகனை சென்றடைந்தன.
இம்முறை 23,04,2012 சனிக்கிழமை காலையிலேயே முடிவு எடுத்துவிட்டேன் எப்படியும் பெருமாள்முருகனை சந்திப்பது. அவர் ஊரில் இருக்கவேண்டுமே என்கிற கவலையும் வந்தது. கூடவே அவருடன் கல்லுர்ரியில் பணியாற்றும் என்னுடைய நண்பர் குமார் என்னிடம் ஐயா... நான் அழைத்துப்போகிறேன். அவர் என்னுடைய ஆசிரியர் என்று சொன்னார். சரிஅவருடைய அலைபேசி எண்ணைத் தாருங்கள் முதலில் வருகிறேன் என்று சொல்லிவிடுகிறேன் என்றேன். தந்தார். தந்துவிட்டு கூடயே அவர் ஊரில் இருக்கவேண்டும் என்றும் சொன்னார். பெருமாள் முருகனின் மகள் மருத்துவம் பயில்வதால் மதுரைக்குச் சென்றிருக்கவும் வாய்ப்புண்டு என்றார். எனக்குள் சட்டென்று சோகம் கப்பிக்கொண்டது. இன்றும் முடியாதோ,,, என்று. இருப்பினும் தொலைபேசியிலாவது அவருடைய குரலைக் கேட்டுவிடலாம் என்று பேசினேன். உடனே எடுத்தவுடன் அறிமுகம் சொன்னேன்.
சார்... வணக்கம் என்னைத் தெரிகிறதா உறரணி- நாமக்கல் வந்திருக்கேன். உங்களைப் பார்க்கலாமா? என்று. உடனே அவர் உங்களைத் தெரியாமலா? வாஙக் ஐயா.. என்றார்.
அதற்குள் அண்ணாமலைப் பல்கலையில் பணிபுரியும் நாமக்கல்லைச்சேர்ந்த நண்பர் திரு நாகராஜன்.. ஐயா.. அவர் என்னோட வழிகாட்டி.. நான் அழைச்சிட்டுபோறேஙக்ய்யா என்றார்.. எனக்குள் உடனே தோன்றியது இதுதான்.. நல்லவர்களைச் சந்திக்கவேண்டும் என்று மனது நினைக்கிறபோது அதற்கான வழிகள் பல பக்கமிருந்தும் திறக்கும் என்பதுதான். பெரும்பான்மை வழிகாட்டி என்றால் கசப்பான அனுபவம்தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கும். ஆனால் பெருமாள் முருகனின் மாணவர்கள் எல்லோருமே என்னுடைய ஆசிரியர் நான் அழைச்சிட்டுப் போறேன் என்று சொனனபோதே அந்த பண்பாளரை உணர்ந்துகொள்ளமுடிந்தது.
மாலை வகுப்புகள் முடிந்தவுடன் 6 மணிக்கு மேல் லாட்ஜ்க்கு சென்று அறைபோட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு ஏழுமணிக்கு பெருமாள் முருகன் வீட்டுக்கு நானும் நாகராஜனும் சென்றோம். அப்போது அவர் தனது மகளுக்கு வாகனம் கற்றுத் தருவதற்காக வெளியில் சென்றிருப்பதாக அவரின் துணைவியார் சொன்னார்கள். அவரும் ஒரு தமிழ்ப் பேராசிரியைதான். பெருமாள் முருகன் வரும்வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். முதலில் தண்ணீர் தந்தார்கள். பின் கொஞ்சமாக டீ வைக்கிறேன் என்று சொல்லி அருமையான தேநீர் தந்தார்கள். பேசிக்கொண்டிருந்தோம்.
அவர் வீட்டு உறாலில் அழகான ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது. அது மனதைக் கவர்ந்துவிட்டது. ரொம்ப நாட்களாக அதுபோன்ற கட்டிலை மனத்தில் கற்பனை செய்து வைத்திருந்தேன். அழகாக பூ வேலைப்பாட்டுடன் அது பின்னப்பட்டிருந்தது. கேட்டேன். இது எங்கே கிடைக்கும் என்று? உடனே நண்பர் நாகராஜன் அதுபற்றி உடனே கேட்டு நர்ன் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். மனசுககு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பெருமாள் முருகனின் துணைவியார் சொனன்ர்ர்கள். உங்களுக்குத்தான் தெரியுமே ஐயா,, இதுலதான் படுத்து உறங்குவதும் எழுதுவதும் பிடிக்கும். ஒருமுறை எழுத்தாளர் நஞ்சுண்டன் கூட சொன்னார் பெருமாள் முருகன் உங்கள் எழுத்தைபோலவே நீங்களும் இருக்கிறீர்கள் என்று,,நாகராஜன் அதை ஆர்வமாகக் கேட்டார்.
அப்போது வாசலில் வண்டி சப்தம் கேட்க அம்மா சொன்னார்கள் ஐயா.. வண்டிபோலக் கேட்கிறது என்று, உடனே நண்பர் நாகராஜன் இது ஐயா வண்டிதாம்மா,, உள்ளே வந்துட்டாங்க.. என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஆசிரியரின் வண்டியின் ஒலியை நுட்பமாக வைத்திருக்கிறான் ஒரு மாணவன் என்றாலே அந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள அன்பின் உறவைப் புரிந்துகொள்ள முடிந்தது. பெருமாள் முருகனின் மேல் இன்னும் அன்பு இறுகியது. பெயரைச் சொல்லியழைக்க அம்மா வாங்க என்றதும் கதவைத் திறந்துகொண்டு பெருமாள் முருகன் உள்ளே வந்தார்.. என்னைக் கண்டதும் வாங்க ஐயா.. வணக்கம். நல்லா இருக்கீங்களா? என்று உடனே மனைவி பக்கம் திரும்பி ஐயாவுக்கு டீ கொடுத்தாச்சா என்றார்.. ஆச்சு என்றார்கள் அம்மா. கொஞ்சநேரம் உறாலில் உட்கார்ந்து பேசினோம். நான் மறுபடியும் கயிற்றுக் கட்டில குறித்து எனது ஆசையை சொன்னேன். உடனே நாகராஜனிடம் விளக்கமாக அதுகுறித்துப் பேசினார்.
சற்று நேரம் பேசியிருந்துவிட்டு மாடிக்குப் போனேர்ம்.
மாடியில் நிறையப் பேசினோம்.
தன்னுடைய மாணவர்கள் குறித்துப் பெருமையாகப் பேசினார். அவருடைய மாணவர்கள் பலர் எனனுடைய நண்பர்கள். அவர்களும் அவர் குறித்து பெருமையாகப் பேசியது நினைவுக்கு வந்தது. ஒருவர் இல்லாத சூழலிலேயே ஒருவர் கருத்துத்தெரிவித்தவிதம் நிறைவாக இருந்தது. குரு சிஷ்யப் பரம்பரை மறுபடியும் துளிர்விட்டிருப்பதாகவே மனதுக்குத் தோணியது.
மின்சாரம் வரட்டும் என்று காத்திருந்தோம். ஆனால் பேச்சு தொடர்ந்து இருந்தது.
இந்த இடைவேளையில் பெருமாள் முருகனை நான் கண்டு அனுபவித்ததை சொல்லிவிடவேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் பல எழுத்தாளர்களுடன் பல மணிநேரங்கள் செலவிட்டிருக்கிறேன். பல இலக்கியக்கூட்டங்களுக்காக வந்தவர்கள். ஆனால் அவர்கள் எல்லாம் ஒரு சொல்லமுடியாத அல்லது விளக்கமுடியாத இறுக்கத்தை அணிந்தபடியே பேசியதும் உறவாடியதும் நினைவில் ஆடின. பெருமாள் முருகன் சாதாரணமாக இருந்தார். சகோதர வழி உறவைச் சந்திக்கச் சென்றதுபோல இருந்தது. ஒருவேளை இருவரும் தமிழ்ப் பேராசிரியர்கள் என்பதால் இந்த அன்னியோன்யம் கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரையில் இருவருமே ஒரே அணுகுமுறையில் இருக்கிறோம் என்பதைத்தான் எங்களின் பேச்சு உணர்த்தியது. எளிமையான பேச்சு. ஆனால் நெருக்கமாக ஒட்டுதலான பேச்சாக அது இருந்தது. கலந்து எல்லாம் பேசினோம். பேச்சில் பாசாங்கு இல்லை. அலட்டல் இல்லை. ஒரு கர்வம் இல்லை. ஏளனம் இல்லை. யாரையும் காயப்படுத்தும் சொற்கள் துளியும் கிடைக்கவில்லை. எல்லாம் பேசினார். முதல் சந்திப்பையே வெகுநாள் பழகிய சந்திப்பின் பேச்சாக மாற்றிய பெருமாள் முருகனை வியப்பு மாறாமல் அதைக் காட்டிக்கொள்ளாமல் ரசித்துக்கொண்டிருந்தேன்.
மின்சாரம் வந்ததும் அவருடைய கூடு இலக்கிய முறறம் நடக்கும் மாடிப்பகுதிக்குப் போனேர்ம். அருமையாக இருந்தது. எத்தனையோ இலக்கியவாதிகள்.. படைப்பாளிகள்.. படைப்பு ஆர்வலர்கள் ஆகியோர் வந்து இருந்து பறந்த கூடல்லவா? இதுவரை 48 கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது என்று எண்ணியதும் வியப்பாக இருந்தது. எந்தவித அறிமுகமும் ஒப்பனையும் இல்லாமல் எந்தச் செலவுமில்லாமல் 48 கூட்டங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு புத்தமாக வரவேண்டிய பொக்கிஷத் தருணங்கள் அவை. 50 வது கூட்டத்திப் பெரிய அளவில் நடத்தவேண்டும் முடிவு எடுத்திருப்பதாகவும் அது சில காரணங்களுக்காக தள்ளிப்போனதையும் சொன்னார். இலக்கியக் கூட்டம் என்றாலே அது ஒரு குழு நிலைப்பட்டதாகவும்... படைப்பாளிகள் சிலர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் மேடையாகவும்.. தன்முனைப்பு அதிகம் உள்ளதாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாகவும்இருக்கும் நிலையில கூடு .....கூடாகவே இருந்தது. அற்புதமான பறவைகள் தங்கள் வாசங்களை விட்டுச் சென்ற தடங்கள் நிறைவாக இருந்தன பெருமாள் முருகன் அவற்றை விவரிக்கையில்.
சேலம் அ. கார்த்திகேயன் பேசியதை... ஜெயமோகன் வந்ததை...பிரபஞசன் பகிர்ந்துகொண்டதை...இப்படி யாரெல்லாம் நாமக்கல்லுக்கு வருகிறார்களோ அந்த நிகழ்வில் அவர்களை அழைத்து பேச வைப்பது என்று எவ்விதச் சிக்கலுமில்லாமல் 48 கூட்டங்களை வெகு எளிதாக நடத்தி முடித்திருக்கும் பெருமாள் முருகன் சார்.. உங்களுக்கு எனது அன்பான பெருமைமிகு வணக்கங்கள்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டம் கூடும். ஆங்கரை பைரவி போன்று ஒருசிலர் ஒருகூட்டம் விடாதது தொடர்ந்து வருபவர்கள். கூட்டத்திற்கு வருபவர்கள் அனபின் மிகுதியால் இதுவரை 40 நர்ற்காலிக்ள் வாஙகித் தந்திருப்பதாகவும் இனி வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் பெருமாள் முருகன் குறிப்பிட்டதை எண்ணும்போது இலக்கியக்கூட்டம் என்பது நான் என்பதை ஒழித்து எல்லாவற்றையும் நேசிக்கும் ஒரு மனிதநேயமிக்கப் படைப்பாளியின் மனதால் மட்டுமே இது சாத்தியம் என்பதை பெருமாள் முருகன் உறுதி செய்திருக்கிறார்.
50 வது கூட்டத்திற்கு அவசியம் வருவேன் பெருமாள் முருகன் சார்.. அது எனக்குப் பெருமையாக நினைக்கிறேன்.
அவருடைய நாவல்கள் ஆறு வெளியாகியிருக்கின்றன. நான் அவருடைய நாவல்களில் இரண்டை மட்டுமே வாசித்திருக்கிறேன். நான் வாசிக்காமல் வாங்கி வைத்திருக்கிற நாவல்கள் 200க்கு மேற்பட்டு உள்ளன. விரைவில் வெகு வேகமாக அவற்றை வாசிக்கப்போகிறேன். பெருமாள் முருகன் ஏழாவது நாவலை எழுதிமுடிப்பதற்குள் அதை வாசித்துவிடுவேன் என்கிற தீவிரம் இருக்கிறது உள்ளுக்குள். அவரிடம் சொன்னேன் நல்ல எழுத்துக்களைப் பற்றி படிக்கிறபோது எழுதத் தோணமாட்டேங்குது. ஏனென்றால் தஞ்சாவூர்க் கவிராயர போன்றோர் உங்களைப் போன்றோர் எழுத்துக்களை வாசிக்கிற போது வாசித்தலே பெருங்கடமையாக மனம் எண்ணிவிடுகிறது.அவர் சொன்னார் ஒருவருக்குள் படைப்புத்திறமை
இருக்கும்போது அதை வீணாக்காமல் எழுதவேண்டுமென்று.
இயல்பாக இருக்கிறார். அவற்றோடு எல்லாவற்றையும் இயல்பாக செய்கிறார். எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஒரு சாதாரண மனிதனாக அன்பு கொண்ட மனிதனாக நேயமிக்க ஆசிரியனாக இருக்கிறார். பெருமாள் முருகனிடமும் நான் சில கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.
அவருடைய permalmurugan.comககு சென்று இன்னும் பலவற்றை அனுபவியுங்கள்.
இது ஒரு நல்ல அனுபவம்.
எப்போது சென்றாலும் இறையனுபவத்தில் ஆஞ்சநேயரைத் தரிசிக்காமல் வநததிலலை. இம்முறை நாமக்கல் ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடியவில்லை.,
இறையனுபவத்தின் நிறைவைப் பெருமாள் முருகனைச் சந்தித்த நிகழ்வில் பெற்றிருக்கிறேன்.
அவருடைய மாணவர் நண்பர் நாகராஜனுக்கு நன்றிகள்.
கவிஞர் சேலம் அ. கார்த்திகேயனுக்கு நன்றிகள்.
அம்மா... உங்கள் புன்னகை நிறைந்த வரவேற்பிற்கும்...உரையாடலுக்கும்.. தேநீருக்கும் நன்றிகள்...
இன்னொரு பதிவில் சந்திப்போம்.