Saturday, May 18, 2013

ஜால்ரா... குறுந்தொடர்...

குறுந்தொடர்....2



                                    ஜால்ரா....



                    ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. வெயிலின் உக்கிரம் தாங்கமுடியாதகையால் வீட்டைப் பூட்டிவிட்டு மொட்டை மாடிக்குப்போய் வானத்தையும் நட்சத்திரங்களையும் பாரத்துக்கொண்டு படுத்தருப்பது அப்புறம் தன்னையறியாமல் துர்க்கம் வரும்போது துர்ங்கிவிடுவது சுகமாக இருக்கிறது.

                    விழிப்பு வந்தவுடன் வானத்தில முகத்தில் விழித்தபடி பார்க்க நிலவு சற்று  நெஞ்சுப் பகுதிக்குக் கீழாக இறங்கியிருப்பதைப்போலத் தோணியது, ஆனால் நட்சத்திரங்கள் பளிச்சென்று வெயிலில் சில்வர் பாத்திரங்கள் பளிச்சிடுவதுபோல இருந்தன.

                      உறக்கம் கலைந்துவிட்ட பொழுதில் மெல்ல பக்கவாட்டில் பாயில் கிடந்த கைப்பேசியை எடுத்து மணி பார்த்தபோது மணி 3.30 எனக் காட்டியது. இவ்வளவு அதிகாலையில் உறக்கம் கலைந்துவிட்டது  எரிச்சலை ஏற்படுததவில்லை. அதுதவிர முந்தையதினம் வெகு சீக்கிரம் உறங்கிவிட்டதுதான் காரணம் என்று தெரிந்தது.

                     மெல்ல எழுந்து பல்துலக்கிவிட்டு முகம் கழுவி தலை சீவி லேசாக பவுடர் போட்டுக்கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு மாடிவிட்டுக் கீழிறங்கி வாசல் கதவைத் திறந்துகெர்ண்டு மறுபடியும் வாசலைப் பூட்டிவிட்டு கேட்டின் வழியாக சாவியை உள்ளே போட்டுவிட்டு கடைத்தெரு போய் ஒரு டீசாப்பிட்டுப் பேப்பர் பார்க்கலாம் என்று தோணியது.

                   தெருவிறங்கியதும் எங்கிருந்தோ பார்த்துவிட்டு ஓடிவந்து வாலாட்டி நின்றது ஜோ எனப்படும் வீட்டு நாய்..

                     என்னடா ஜோ என்றதும் மறுபடியும் ஒரு உற்சாகத் துள்ளல் துள்ளி கால்களுக்கிடையில் புகுந்து வெளியே வந்தது.

                        சரி போ.. நான் கடைத்தெருவுக்குப் போயிட்டுவரேன்,, என்றதும் மறுபடியும் ஒருமுறை முகத்தைப் பார்த்துவிட்டு சொன்னது புரிந்ததுபோல எதிர்வீட்டுத் திண்ணை நோக்கி ஓடியது,

                         நாய்கள் புரிந்துகொள்கின்றன.

                         மனிதர்களுக்குத்தான் எதையும் புரியவைப்பதில் சிரமமிருக்கிறது என்று அந்த அதிகாலையிலே நாய்த் தத்துவம் தோன்றியது.

                         கடைத்தெரு வந்தபோது மணி நாலேகால் ஆகிவிட்டிருந்தது.

                         வாஙக் சார்.. என்ன சீக்கிரம் வந்துட்டீங்க? என்றான் டீக்கடை மணி,

                         சீக்கிரமே விழிப்பு வந்துடிச்சி மணி,, அதான் வந்துட்டேன்,

                        டீ போடறேன்,, இந்தாங்க சார்,,, பேப்பர பாருங்க

                        தினத்தந்தி பேப்பர்,  அதில் நிறுவனர் சிபாவின் மைந்தர் சிவந்தி ஆதித்தன் இறந்துபோன செய்தியை வெளியிட்டிருந்தார்கள்,

                        சட்டென்று மனம் அதிர்ந்துபோனது.

                        தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் படிக்காத பாமரனுக்கும் படிக்கக் கற்றுத்தந்த ஆதித்தனாரின் புரட்சி எத்தகையது, காற்று நுழையும் இடங்களில் எல்லாம் தினத்தந்தியும் அதன் செய்திகளும் ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்வுகள் எத்தனை எத்தனை?

                       நினைக்கவே மனம் வேதனைப்பட்டது.

                       மகன் தந்தைக்காற்றும் உதவி என்பதுபோல தந்தை வழியில் அதன் மெருகுகுலையாமல் காத்தவர் சிவந்தி ஆதித்தன்.

                      மனது அவரது ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்தியது.

                      நாலைந்துபேர் வயதானவர்கள் பென்ஷன்தாரர்கள் கடைக்குக் டீ குடிக்க வந்தார்க்ள்.

                      அவர்களும் பேப்பரைப் பார்த்துவிட்டு அடடா,,, எப்பேர்ப்பட்ட மனுஷன்... நான் தினத்தந்தி படித்துத்தான் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டேன் என்றார்.. எல்லோரின் பேச்சும் சிவந்தி ஆதித்தன் பற்றியே இருந்தது.

                      தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவம் நினைவுக்கு வர,, டீ லேசாக சூடு ஆறிப்போயிருந்தது.

                      குடித்துவிட்டுத் திரும்பியபோது வேணுகோபாலன் வந்தார்..

                      வாங்கண்ணே டீ குடிங்க என்றதும்,, சொல்லுங்க தம்பி,, என்றார்.

                      டீயைக் குடித்தபடியே,, தம்பி,, நம்ப  வலம்புரி விநாயகருக்கு கும்பாபிஷேகம் பண்ணப்போறோம்.. டொனேஷன் கொடுங்க என்றார்.

                      எவ்வளவு தரணும்னே.. என்றதும்.

                      உங்க விருப்பம். கட்டாயம் கிடையாது என்றார்..

                      தரேன் அண்ணே.. என்றதும் டீக் கிளாசை வைத்துவிட்டு,, தம்பி இன்னிக்கு சாயங்காலம் உங்களுக்கு போன் அடிக்கிறேன்.. வீட்டுக்கு வாங்க,,

                     எதுக்குண்ணே?

                     ரொம்பநாளா  பாதுகாத்து வர்ற பொக்கிஷம் ஒண்ணு இருக்கு. அத உங்ககிட்டே காமிக்கணும்.. யாருக்கும தெரியாம இருபது வருஷமா பாதுகாத்து வரேன்.. என்றதும் ஆச்சர்யம் ஆகிவிட்டது.

                     இப்ப வரட்டுமாண்ணே .. ஆர்வம் பொங்கியது.

                    வேணாம் தம்பி.. பகல்ல பிரச்சினையாயிடும்.. பொழுது சாயட்டும் வாங்க.. உங்ககிட்டதான் முதல்ல காமிக்கணும்..

                      வேணுகோபால போய்விட்டார்.

                      மனதுக்குள் தவிப்புத் தொடங்கியது.

                     என்ன பொக்கிஷம்?


                                                                                                       (ஜால்ரா ஒலிக்கும்)