மூன்றெழுத்து மேன்மை.........
கு..வெ...பா...
வணக்கம். என்னுடைய வலைப்பதிவை முதன்முதலாகக் கணிப்பொறியில் ஆரம்பித்தபோது பல பதிவுகளை பல தலைப்புக்களில் பதிவிட ஆரம்பித்தேன். அதில் ஒன்றுதான் முன்னவர்கள் முக்கியமானவர்கள் என்னும் பகுதி. அதில் எனக்கு முன்னோடிகளாக வழிகாட்டிகளாக இருந்தவர்களை என்னை நிரம்பப் பாதித்தவர்களைப் பற்றி வெகு கவனமான பதிவாக அது அமைந்திருந்தது. அப்படி அமைத்துக்கொண்டேன். எனவே அதில் முதலில் என்னுடைய எழுத்துலகப் பிதா தஞ்சை ப்ரகாஷ் பற்றி எழுதினேன்.
இப்போது மீண்டும் அப்பகுதியில் இவ்வாண்டு எழுத நினைத்து இப்போதுதான் அது சாத்தியப்பட்டிருக்கிறது.
இந்தப் பதிவில் கு,வெ,பா, என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற என்னுடைய பேராசிரியர் முனைவர் கு,வெ,பாலசுப்பிரமணியன் அவர்களைப் பற்றிய பதிவாகும். இது எனக்கு வாய்த்த கொடுப்பினை, பெருமை வாய்ந்த பதிவாக இதனைக் கருதிப் பதிவிடுகிறேன்.
நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த போது அதாவது 1983 ஆம் ஆண்டு அங்கு பேராசிரியராக இருந்தவர். இலக்கியத்துறையின் முக்கியமான ஆளுமையாக இருந்தார். என்னுடன் பணியாற்றிய நண்பர் திரு க. சீனிவாசன்தான் முதன்முதலில் பேராசிரியர் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு இச்சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படியொரு மனிதர் இருக்கமுடியுமா இக்காலச்சூழலில் என்று எண்ணி வியக்கும் அளவுக்கு பண்பானவர் பேராசிரியர் அவர்கள்.
ஏராளமான வாசிப்பு...அத்தனையும் ஆழமான வாசிப்பு... அரிமா போன்ற பல அரிய சான்றோர்களுடன் பழகிய அனுபவம்...நுட்பமான சிந்தனைப் போக்கு,, அதனை வெளிப்படுத்தும் எழுத்தியல் பிரமிக்கத்தக்க அதிசயங்களைக் கொண்டது. இதில் அதிசயம் என்னவென்றால் அடிப்படையில் அறிவியல் பின்புலம் கொண்டவர், பின்னர் தமிழ் கற்றவர். தமிழிலும் ஆங்கிலத்தில் நிகரான புலமை மிக்கவர். எப்போதும் எழுதிக்கொண்டேயிருப்பவர். இடையில் குறுக்கிட்டாலும் கடுகளவும் முகம் மாறாது வாங்க...உக்காருங்க.. என்று புன்னகை விரித்தபடி பேசும் மனோ இயல்பு கொண்டவர்.. இவரிடம் கற்றுக்கொள்ள ஏராளம். கற்றுக்கொள்ளத்தான் தனித்திறன் வேண்டும். எளிமை...அன்பு... அடுத்தவர்க்கு உதவுதல்..நாம் அறியாமல் நம்மை உள்வாங்கி நம்மின் திறனுக்கேற்ப நம்மை எங்கேனும் அடையாளப்படுத்திவிட்டு அதுபற்றி அலட்டிக்கொள்ளாமை. இப்படி பல பண்புகள்.. வியக்கவைக்கும் மாமனிதர் கு.வெ.பா. என்னும் இந்த மூன்று எழுத்து மேன்மையாளர்.
இலக்கியத்துறையில் பேராசிரியராக இருந்தபோதிலும் சரி...பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியர்ற்றிய சூழலிலும் சரி..தொடர்ந்து அரசு சார்ந்த... மத்திய அரசு சார்ந்த... பல்கலைக்கழக மானியக்குழு சார்ந்த...பல்வேறு கல்லுர்ரிகள்... பல்கலைக்கழகங்களில் பல பொறுப்புக்கள் இவரைத் தேடி வந்து ஏற்றுக்கொண்டு பணிசெய்தபோது தன்னுடைய பண்பிலிருந்து மாறாதவர்.
இத்தனைக்கும் இடையில் இடைவிடாத எழுத்துப்பணி.
கல்விநிலை சார்ந்து அறுபது புத்தகங்கள்.
படைப்புலகிலும் விட்டுவைக்கவில்லை.
வேலவன் எனும் புனைப்பெயரில் கவிதைத் தொகுப்புக்கள்..
பத்திற்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கள்.
ஐந்திற்கும் மேற்பட்ட காப்பியங்கள்.
இலக்கிய நாடகங்கள்.
மொழிபெயர்ப்புக்கள்.
கல்லுர்ரி. பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்ட.. பட்ட மேற்படிப்பு வகுப்புக்களுக்குப் பாடநுர்ல்கள்..
ஆங்கிலத்தில் பல்வேறு நுர்ல்கள்..
பதிப்பிட்ட நுர்ல்கள் பல.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தப் பாடத்தை அயல் நாட்டு மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதி அயல் நாட்டு மாணவர்கள் வியந்து பார்த்த நிகழ்வு அது.
சைவ சித்தாந்தம் தமிழில் புரிந்துகொள்வதற்கே தனிப்பயிற்சியும் திறனும் வேண்டும்.
இந்நிலையில் அதனை ஆங்கிலத்தில் அயல் நாட்டு மாணவர்களுக்கு எழுதுவதென்றால் பேராசிரியரின் திறனை உணர்ந்து கொள்ளுங்கள்...
பல்வேறு பரிசுகள்.
எதனையும் காட்டிக்கொள்ளாத... அலட்டிக்கொள்ளாத மேன்மையே அவரை மனத்தில் இமயமலையாகக் கொள்ள வைத்திருக்கிறது.
இவரது ஆய்வு நுர்ல்கள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.
இவரது சிறுகதைகள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.
இவரது காப்பியங்கள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.
இவரது நாடகங்கள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.
இவரது மொழிபெயர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
இவரது நாவல்கள் தனித்தப் பொருண்மை கொண்டவை. பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தனித்த அடையாளத்துடன் விமர்சிக்கப்பட்டு பாராட்டப்பெற்றவை.
இது தவிர வானொலியில் தொடர்ந்து கேட்போர் சிந்தைக்கு உரிய கருத்துவளத்தைக் கொட்டிக் குவிக்கிறார்.
தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.
பல்வகை அரங்குகளிலும்... பல்வகை அமைப்புக்களிலும் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து ஓராண்டு திருக்குறளை வாரந்தோறும் முப்பதுக்கு மேற்பட்ட உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிட்டு அதிகாரம் அதிகாரமாய் உரையாற்றிய மாண்பாளர்.
எல்லாவற்றையும் ஒரு பெரிய கடலைப் போல பணிகள் செய்துகொண்டிருக்கிறார். எதனையும் காட்டிக்கொள்வதில்லை.
தமிழ்மொழி இவரால் பல மாண்புகளைப் பெற்றிருக்கிறது.
இதற்கு இவரது நுர்ல்களம் எழுத்தும் பேச்சுமே சான்றுகள்.
ஒருமுறையேனும் இவரை வாசிக்கவேண்டும்.
ஒவ்வொரு முறை இவரை சந்திக்கும்போதும எனக்காக ஒதுக்கும் அரிய நேரத்தில் நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.
இன்னும எழுதிக்கொண்டேயிருக்கிறார்.
இன்னும் படித்துக்கொண்டேயிருக்கிறார்.
எளிமையும் அன்பும் உதவியும் காட்டிக்கொண்டேயிருக்கிறார்.
அவரிடம் நான் அடிக்கடி சொல்வது அவர் தமிழுக்கு ஆற்றும் பணியில் 10 விழுககாடேனும் நான் என் வாழ்நாளில் செய்துவிடவேண்டும்.
லேசான புன்னகையுடன் வாழ்த்தி சொல்கிறார்... செய்யலாம் அன்பழகன்... செய்யுங்க... நிறைய படியுங்க... எழுதுங்க.. என்று ஊக்கம் காட்டிக்கொண்டேயிருக்கிறார்.
இவரைப் பற்றி எழுத ஒருநர்ள் பதிவு போதாது.
இருப்பினும் என்னுடைய நன்றிக்கடனாக இந்தப் பதிவை அவரின் மேன்மைமிகு தமிழாளுமைக்கு சமர்ப்பிக்கிறேன்.
நாளை இலக்கிய வரலாற்றில்...
தமிழ் இலக்கிய வரலாற்றில்...
கு.வெ.பா.. என்னும் ஆளுமை ஈடுகட்டமுடியாத ஒரு அழுத்தமான பதிவுத்திறன்...
மறுபடியும் சந்திக்கிறேன்.