Saturday, August 21, 2021

                                               திராட்சைக்கொத்து…

(மனம் போன போக்கில்)…

கொஞ்சம் கட்டுரை-க்கலாம்..

அன்புள்ளங்களுக்கு

வணக்கம்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மனத்துள் சுழன்றவண்ணம் இருக்கின்றன பல. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்புதியக் களம். வாரம் ஒரு முறை பகிரப்போகும் இப்பகுதிக்குத் திராட்சைக்கொத்து என்று பெயரிட்டிருக்கிறேன்.
திராட்சைக்கு இரு குணங்கள் உண்டு. புளிப்பும் இனிப்பும். புளிப்பை அப்படியே சாப்பிடுவோரும் உண்டு. ஆனால் புளிப்புத் திராட்சை எப்போதும் திரவ நிலையில் ஜுஸ் ஆக அருந்தச் சுவையாக இருக்கும். உங்களின் எந்தச் சுவையையும் இப் பகுதிக்கான வளர்பிறையாக எடுத்துக் கொள்கிறேன்.

முதல் கொத்தை எதிர்வரும் திங்கள் அன்று தருகிறேன். அடுத்தடுத்த வாரங்களில் அடுத்தடுத்தக் கிழமைகளில் தரலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. (இந்த வாரம் திங்கள் என்றால் அடுத்த வாரம் செவ் வாய்.. அப்புறம் புதன்.. இப்படியாக)

திங்களன்று சந்திப்போம். என்றும் உங்கள் அன்பிற்காகப் பேரன்புடன் ஹரணி.
வணக்கம்.