திகசி....
இந்தப் பெயரை அறியாதவர் இலக்கிய உலகில் பிறக்காதவர்.
எழுத்துலகின் இமையம்.
உயர்ந்த எழுத்து மட்டுமல்ல உயர்ந்த மனமும் கொண்ட படைப்பாளி.
நீண்ட ஆயுள் கொண்ட எழுத்து.
நிறைய படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஓரிரு எழுத்துக்கள்
எழுதி பிரசுரமான படைப்பாளியையும் மதிக்கும் மனம் நானறிந்தவரை
இருவருக்கு மட்டுமே உண்டு.
முதல் ஆளுமை வல்லிக்கண்ணன்
இரண்டாவது ஆளுமை திகசி
முன்னவர் முன்பும் பின்னவர் பின்புமாக நம்மிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டனர்.
கண்களில் சோகம் எரிமலையர்ய் வெடித்து நிற்கிறது.
இதுவரை நான் முகம் பார்த்ததில்லை நேரில் ஆனால் பலமுறை
இதழகளில் பார்த்ததுண்டு.
என் படைப்புக்களை அனுப்பினேன்.
இரண்டு அஞ்சல் அட்டைகளில் எனக்குக் கடிதம் எழுதிய தகப்பன்
அவர். இப்படியெல்லாம் இளைய படைப்பாளிகளைக் கட்டிக்கொள்ளும்
கடவுள்தன்மை. தகப்பன் திகசியைப் போல வல்லிக்கண்ணன் போல இனி
வருமா?
எப்படி வாய்த்தார்கள் இவர்கள் இத்தகைய எழுத்துலகிற்கு.
பட்டினத்தார் செர்ன்னது போல எப்படி எரிதழல் மூட்டமுடியும்?
அழுதுகொண்டிருக்கிறேன் அந்த மாமனிதனுக்காக மனித நேயம்
கொண்ட தகப்பனுக்காக.
அவரின் மிகமிகமிக உச்சமான படைப்பு. அற்புதப் படைப்பு.
இன்றைக்கும் அதிர வைக்கிற படைப்பு. ஒன்றே ஒன்றுதான்
அது.
அது.
வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி....
இதயக்கமலத்தால் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.