குழந்தைகள் எப்போதும் எந்தக் காலக்கட்டத்திலும் நம்மை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிகளுககும் உள்ளாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் செயலும் பிரமிப்பும் மன அதிர்வையும் தருகின்றன நமக்கு. நான் சில குழந்தைகளிடம் கேட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
மூன் மம்மி இருக்குல்லே..அதுக்கு ஏராளமான ஸ்டார்ஸ் பேபிஸ்..அதனால அது எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்கும். ஆனா சூரியன் பாவம். அதுக்கு பேபிங்களே இல்லை. அதனால அது மூன் மம்மியைப் பார்த்ததும் கோபமாயிடிச்சி..அது மலைமேல இருந்துச்சா..அங்கிருந்து கிளம்பிடுச்சி. அதுக்கு ஒரே கோபம். வெளியே வந்து வேகமா மூன் மம்மியையும் ஸ்டார்ஸ் பேபிங்களயும் முழுங்கிடிச்சி. அதனாலதான் பகல்லே மூன் மம்மியும் ஸ்டார்ஸ் பேபிங்களும் காணமாப் போயிடிச்சி. அவ்வளவுதான் கதை.
000000000000
தம்பி கடவுள் இருக்காரா?
சாமி இருக்கா இல்லையான்னு தெரியாது.
கடவுள பார்த்திருக்கியா?
கடவுள பாத்திருக்கேன்.
எங்கே?
அதான் தெருத்தெருவா தேர்ல வர்றாரே...
00000000000000
ஒரு குழந்தையிடம் தாய் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி வடை சுட்ட கதை. கதையில் கடைசியில் நரி காக்கா போட்ட வடையைக் க்வ்விட்டு போயிடிச்சிசொன்னதும். குழந்தை கேட்டது தப்பா கதைய சொல்றியே மம்மி.. என்றது.
என்னப்பா தப்பு?
நரி வைல்ட் அனிமல் ஆச்சே? அது எப்படி வடையை சாப்பிடும். கறிதானே
சாப்பிடும்? கதைய மாத்தி சொல்லு.
0000000
ஒரு கவிதை...
குழந்தைகள்
வாழ்க்கைப் படகின் துடுப்பு...
நம்பிக்கையின் வேர்
எந்தப் பக்கத்தின் இருளையும்
வெளிச்சத்தால் நிரப்புவர்கள்..
கடவுளின் பல அவதாரங்களையும்
காட்சிப்படுததக்கூடியவர்கள்
கடவுளின் சிரிப்பையும்
கடவுளின் அழுகையையும்
கடவுளின் தவிப்பையும்
கடவுளின் ஏக்கத்தையும்
கடவுளின் பிடிவாதத்தையும்
காட்டுபவர்கள்...
ஒன்றேயொன்றுதான்
குழந்தைகளிடம் நெருங்க
குழ்ந்தைகளாகவேணடும் நாம்..
ஆனாலும் குழந்தைகளாக
முயல்வது ரொம்பக் கடினம்
அதே சமயம் அது ரொம்ப
எளிதும்கூட...
தம்பி சாமி கும்பிடுப்பா...
சாமிய கும்பிட்டா என்னா அம்மாச்சி?
சாமி கேட்டதெல்லாம் குடுக்கும்,,
அப்புறம் ஏன் கடையில பெல்ட் சாக்ஸ் எல்லாம் கேட்டா காசு கேக்கறாங்க அமமாச்சி?
00000000000
ஒவ்வொரு முறையும
ஒவ்வொரு பொருள்தரும்
கவிதை
குழந்தைகள் மட்டுமே...
மனித இனத்தின்
முதல் மொழி
குழந்தைகள் மட்டுமே....
எல்லா வாழ்வின்
எப்படிப்பட்ட சிக்கல்களையும்
தீர்ப்பவர்கள்
குழந்தைகள் மட்டுமே...
ஆகவே
குழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...
//குழந்தையாகப் பிறந்து
ReplyDeleteகுழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...//
எத்தனை உண்மையான வார்த்தைகள்.. ஆனால் முடிவதுதான் இல்லை... :)
ஆனாலும் குழந்தைகளாக
ReplyDeleteமுயல்வது ரொம்பக் கடினம்
அதே சமயம் அது ரொம்ப
எளிதும்கூட..
.
குழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...
மனம் கவர்ந்த அருமையான பதிவு
குழந்தைகள் சொல்லுகிற கதைகள்தான்
உண்மையாகவும் யதார்த்தமாகவும்
ரசிக்குபடியாகவும் இருக்கின்றன
தொடர வழ்த்துக்கள்
குழந்தைகள் ஆச்சரியமானவர்கள். அவர்களைப் புரிந்துகொள்ள நாம் அவர்களின் மன நிலைக்குச் செல்லவேண்டும். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு முறையும
ReplyDeleteஒவ்வொரு பொருள்தரும்
கவிதை
குழந்தைகள் மட்டுமே..ஒருமுறை சாலையோரத்தில் ஒரு சுமார் இரண்டு வயதுள்ள குழந்தையைக் கண்டேன். செருப்பு தைக்க முயன்று கொண்டிருந்தது. அடுத்து இருந்தது அதன் தந்தை ;செருப்பு தைக்கும் தொழிலாளி. நெஞ்சில் உதிரம் கொட்டாத நிலையில் இரவு தூக்கமே வரவில்லை. ஏன் இந்த ஏற்ற தாழ்வான நிலை. ?என்ன சிந்தித்தாலும் விடை கிடைப் பதில்லை.
குழந்தைகள் செய்கைகளை பார்த்தால் நாமும் குழந்தையாகி சேர்ந்து விளையாட தோன்றும். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொருள் தரும் கவிதை குழந்தை மட்டுமே... க்ளாஸிக்! குழந்தைகளின் மனநிலையில் நம்மால்தான் இருக்க முடிவதில்லை. அருமையான பகிர்வு. நன்றி.
ReplyDeleteகுழந்தைகளிடம் கேட்டவை என்பதைவிட..கற்றவை என்று கூட சொல்லலாம்...அழகு.
ReplyDeleteஅது எப்படி வடையை சாப்பிடும். கறிதானே
ReplyDeleteசாப்பிடும்? கதைய மாத்தி சொல்லு.
சூப்பர்
ஒரு குழந்தை நம்மை சினேகிதனாய்க் கொண்டால் அதன் ஆனந்தமே தனி.
ஆகவே
ReplyDeleteகுழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்
ரொம்ப சரியா சொன்னீங்க.
கவிதையும் , கதையும், படங்களும் ரசிக்க வைத்தன.
ReplyDeleteஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.
வணக்கம் பேராசிரியர் அவர்களே
ReplyDeletehttp://www.sekalpana.com/2011/11/blog-post.html
காணவும்.
வெங்கட் நாகராஜ் தங்கள் கருத்துரைக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி ரமணி சார்.
ReplyDeleteஉண்மைதான் ஜிஎம்பி ஐயா. செருப்பு தைக்கும் சிறுவர்கள்கூட மற்றும் பல சிறுவர்களைப் பரிதாபகரமான நிலையில் பார்த்து வருத்தமுற்றிருக்கிறேன். தங்கள் கருத்துரைகளுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி தமிழ்வாசி. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
ReplyDeleteஉண்மை இனியன். குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. நன்றி. உங்கள் வலைத்தளத்திற்கு வருவேன்.
ReplyDeleteலெட்சுமி அம்மா வணக்கம். தங்களின் கருத்துரைக்கு நன்றி. தொடர்ந்து வாசிங்க.
ReplyDeleteஉங்களின் முதல் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கணேஷ்.
ReplyDeleteரிஷபன்..வாங்க.. தளம் மூலமாகத்தான் நாம் அடிக்கடி சந்திக்கிறோம். இருந்தாலும் இதை நான் தவறவிடுவதாகயில்லை. உங்களின் கருத்துரைக்காகவே நான் எழுத வந்துவிடுகிறேன். புரண்டு படுக்கும் வாழ்க்கை எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அனுப்பிவைக்கிறேன்.
ReplyDeleteநன்றி சிவகுமரன்.
ReplyDeleteமிக அழகான, ரசிக்கவைத்த பதிவு.
ReplyDeleteபுதிய பரிமாணங்களில் குழந்தைகள் சிந்திக்கிற விஷயங்கள், நம்மை வியப்படைய வைப்பது நிஜந்தான்.
வாங்க சுந்தரா..வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.
ReplyDeleteகுழந்தைகளின் உலகம் அலாதிதான். குழந்தைகளின் கதைகளை மிகவும் ரசித்துப் படித்தேன். குழந்தைகள் பற்றிய கவிதைகளைப் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteThe beauty of innocence is realized only after losing it...
ReplyDeleteநான் ஒரு 6th class படிக்கும் போது, DD Metro Channel ல ரொம்ப அழகான programme வரும். "Bol Baby Bol" னு reality show. இந்த காலத்துல வர reality show போல இல்லாம ரொம்பவே smooth ஆ ஆர்பாட்டம் இல்லாத, DoorDharshan கே உரியதான அமைதியான pace ல இருக்கும். குழந்தைகளோட innocence அ அதுக்கு மேல அழகா காட்டினது போல நான் வேற எங்கயும் பாத்ததில்ல.
9 குழந்தைகள். 3 to 4 வயசுக்குள்ள. 3 contestants. முதல்ல குழந்தைகள பேச சொல்லி, அந்த குழந்தைகளோட introduction அவர்களே கொடுக்கணும். அப்புறம் ஒரு question . Virus னா என்ன? economy னா என்ன? elephant கு எத்தன கால்? னு எல்லா விதமான questions உம் குழந்தைகள் கிட்ட கேட்கப்படும். அவர்கள் answer சொல்லறதுக்கு முன்னாடி contestants அந்த குழந்தைகளுக்கு answer தெரியுமா இல்லையா ன்னு guess பண்ணனும்... மழலை மாறாத... எந்த விதமான "கலப்படமும்" இல்லாத - purest form of innocence அவங்க பதில்கள்ள... அந்த show வ நினைவு படுத்தியது இந்த பதிவு...
அழகு!
வணக்கம் கீதா உங்கள் வருகைக்கு. தங்களின் கருத்துரைக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புள்ள மாதங்கி மாலி...
ReplyDeleteவணக்கம். நீண்ட நாள்களுக்குப் பின் வந்து நீண்டதொரு நினைவலையை நிரப்பும் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தினமும் ரயில் பயணத்தில் இருப்பதால் எப்படியும் குழந்தைகளை ரசிக்கும் அனுபவம் வாய்க்கிறது.
அனைத்தும் எளிமையாகவும் சிந்திக்கும்படியும் உள்ளது சார்.அழகான பகிர்வுகள்.
ReplyDeleteநன்றி திருமதி பிஎஸ்.ஸ்ரீதர்.
ReplyDeleteanaithum elimaiyana nadaiyil,anaivarum purinthukollumbadi ulladhu.nandrigal pala
ReplyDelete