Saturday, November 5, 2011

அவர்களும் நமது பிரதிகளும்



இப்போது அதிகம்
அலைகிறார்கள்...

நெருக்கடியாக சாலையின்
நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில்
காற்றுவெளியில்
கவலையற்று நிற்கிறார்கள்...

ஒருவன் இளைஞன்
ஒருத்தி இளம்பெண்
ஒருவர் முதியவர்

அவரவர் அவரவர்
கவலைகளோடு
போய்க்கொண்டிருக்கையில்

இவர்கள் சிரித்தபடியும்
அல்லது அழுதபடியும்
அல்லது ஏதோ முணுமுணுத்தபடியும்
நிற்பதைப் பார்க்கையில்
உள்ளுக்குள் உடைகிறது
ஒரு பயம்...

அவர்கள் சிரிப்பு நம்முடையதுபோல
அவர்கள் அழுகை நாம் அழுவதுபோல
அவர்கள் முனகல் நாம் முனகுவதைபபோல...

வாழ்க்கையினைப்
பிரதியெடுத்த பிரதியை
மனதில சுமந்திருப்பதுபோல...

5 comments:

  1. உள்ளுக்குள் உடைகிறது
    ஒரு பயம்...

    உண்மைதான் ஹரணி. நம் நிலையை நினைத்து ஆறுதல் அடைவதா அல்லது அவர்களைப் பார்த்து கலங்குவதா..
    அவரவர் சண்டை சச்சரவுகளைப் பார்க்கையில் தெளிவற்ற வாழ்க்கை குறித்து யோசனைகள் தான் மிச்சம்.

    ReplyDelete
  2. தெருக்களில் , கோயில்களில் இப்படி பலரைப் பார்க்கையில் , துணுக்குறும் மனம் , தன்னையும் அந்த நிலையில் வைத்து கற்பனை செய்து பார்க்கும் -- நாம் விரும்பாவிட்டாலும்.

    சொல்ல முடியாத ஒரு உணர்வை பிரதிபலித்தது கவிதை.

    ReplyDelete
  3. பத்திரிக்கைகளில் கலக்கும் தஞ்சை ஹரிணியை பிளாக்கில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி

    ReplyDelete
  4. இப்படி எண்ணம் வருகிறதென்றாலேயே அவர்களின் நிலை குறித்த ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு EMPATHY இருக்கிறது என்பதுதானே நிஜம். மனித நேயமிருந்தால்தான் அப்படி எண்ண முடியும். இது அடுத்த கட்டத்துக்கு உங்களைக் கொண்டுபோக வழிகாட்டும். சிந்திக்க வைப்பதன் மூலம் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் வாய்ப்பும் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  5. தரையிலோ தாழ்ந்தோ இருப்பவன்
    தன்னைப் போன்றவனே என்கிற எண்ணம்தானே
    மனித நேயம் என்பது
    நிதம் காணும் காட்சிதான் ஆயினும்
    எத்தனை பேரின் மனம்தொட்டுப் போகிறது இது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete