Saturday, June 26, 2010
ஹைகூ...கூ...கூ....
வலை வீசுதலில்
சிக்குகின்றன மீன்கள்
நதிகளல்ல...
நீயும் பேசவில்லை
நானும் பேசவில்லை
எல்லோரும் பேசுகிறார்கள்.
நீரின்றி அமையாது
உலகு
நத்தைக்கு யார் சொன்னது?
குழந்தை கையசைக்க
பயந்த காற்று
முகத்தில் தஞ்சமாகும்..
எறும்புகள் மொய்க்கலாம்
குப்பைக்குப் போகலாம்
சிறுமிக்கு இல்லை பருக்கை..
டயர் பஞ்சர்
விடுதலையான காற்று
காட்டிக்கொடுத்தது முள்ளை...
தொட்டிக்குள் நீந்துகின்றன
மீன்கள்
மனசுக்குள்ளிருக்கு கடல்...
சாலையில் காலி பீர்பாட்டில்
உள்ளிருந்து வரும் காற்று
கண்ணீர்த்துளிகளைப் பாடுகிறது..
கிணற்றுச் சரிவில்
குருவிக்கூடு..
மனசிலிருக்கு வாழ்க்கை..
காய்ந்த டீகோப்பை
மொய்க்கும் ஈக்கள்
நினைவில் நண்பர்கள்....
யாரின் மரணம்?
கூரியரில் கண்ணீர்
ஓடும் மேகங்கள்...
விடைபெறுகிறது சருகு
வழியனுப்புகிறது மரம்
அழுகிறது காற்று...
விபத்தில் பிணம்
கடந்துபோகின்றன
நாளைய பிணங்கள்...
டிரான்ஸ்பார்மரில் பட்டாம்பூச்சி
11000 வோல்ட்
அழகு ஆபத்துதான்...
தரிசன க்யூ
எறும்புகள் ரயில்
மேசையில் திருப்பதி லட்டு...
யார் செய்த பிழை?
தவளை விழுங்கி
அடிபட்ட பாம்பு...
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
அப்பாவிடம் திருடிய பீடி...
இன்று ஸ்டாக் இல்லை
அரிசியா?
அவளின் வாழ்க்கையா?
லேபிள்கள்:
ஹைகூ...கூ...கூ...
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்தும் முத்துக்கள் ஹரணி.
ReplyDeleteகிணற்றுச் சரிவில்
ReplyDeleteகுருவிக்கூடு..
மனசிலிருக்கு வாழ்க்கை..
இது ரொம்ப நல்லாருக்கேன்னு நெனச்சுட்டு வந்தா
இன்று ஸ்டாக் இல்லை
அரிசியா?
அவளின் வாழ்க்கையா?
இது கொன்னே போட்டது !
அனைத்தும் அருமை ஹரிணி சார்
நன்றி மதுமிதா.
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கு அன்பான நன்றி பத்மா.
ReplyDeleteகவிதைகளும் படங்களும் மனதை அள்ளுகின்றன..
ReplyDeleteரிஷபன்..
ReplyDeleteபழையபடி அஞ்சலட்டையில் பேசுவதுபோல் இருக்கிறது ரிஷபன். தங்கள் கருத்திற்கு அன்பான நன்றிகள்.
விடைபெறுகிறது சருகு
ReplyDeleteவழியனுப்புகிறது மரம்
அழுகிறது காற்று... சூப்பர் சார்
நன்றி பெருமாள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//காய்ந்த டீகோப்பை
ReplyDeleteமொய்க்கும் ஈக்கள்
நினைவில் நண்பர்கள்//
கடைசி வரிகளில் புதிர் அவிழும் படிமம் உள்ள, ஒரு சித்தரிப்பின் மூலம் வெவ்வேறு எண்ணங்களை ஏற்படுத்துகிற இந்த ஹைக்கூ அதற்கான இலக்கண நேர்த்தியோடு உள்ளது.அருமை.
நன்றி சைக்கிள்.
ReplyDeletepadithan rasithan einium thodarvan.....
ReplyDeleteRasaiya pathipagam
A.Lakshmanan
நன்றி இலட்சுமணன். நன்றி தம்பி வசந்த். தொடர்ந்து பாருங்கள். என்னுடைய இன்னொரு வலைப்பூ www.theensittu.blogspot.com
ReplyDeleteஅத்தனையும் அருமை!
ReplyDelete”எறும்புகள் மொய்க்கலாம்
ReplyDeleteகுப்பைக்குப் போகலாம்
சிறுமிக்கு இல்லை பருக்கை”
”தொட்டிக்குள் நீந்துகின்றன
மீன்கள்
மனசுக்குள் கடல்”
இவாளவு நுனுக்கமாக இந்த வடிவத்தைப் பயன்படுத்த முடியுமா ஹரணி
விபத்தில் பிணம்
ReplyDeleteகடந்துபோகின்றன
நாளைய பிணங்கள்...
arumayaga ullathu...