அப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு நோட்டு கிடைத்தது. அதில் சில கவிதைகளைப் பார்க்கமுடிந்தது. அப்பா அழகாகப் படம் வரைவார்கள். எழுத்து அழகாக இருக்கும். கலையுணர்ச்சியோடு எதையும் செய்வார்கள். நான் எம்.ஏ படித்தபோது வீட்டில ஒரு பெயர்ப்பலகை வைத்தேன். அதன்பின் தொடர்ந்து நான் படித்த படிப்புக்களையெல்லாம் நான் முடித்தவுடம் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி எழுதி என் பெயருக்குப் பின்னால் ஒட்டியது நினைக்கையில் மனம் கசிகிறது.
இப்போது அந்த குறிப்பேடு என் சகோதரியிடம் உள்ளது. அதனைப் பெறமுடியாத சூழலும் உள்ளது. அதில் இருக்கும் கவிதைகள் எல்லாம் வேடிகக்கையானவை மருத்துவ சிகிச்சை பற்றிய வேடிக்கைக் கவிதைகள். வாய்ப்பு அமையும்போது எல்லாக் கவிதைகளையும் பதிகிறேன். இப்போது சான்றுக்கு மட்டும் நினைவில் இருப்பதைக் குறிப்பிடுகிறேன்.
தலைவலிக்கு மருந்து (கவிதை)
தலைவலி கண்டதென்று
தவிக்கின்ற மனிதர்காள்
தயவுடன் மருந்தைக் கேளீர்
மலைதனில் பெருத்தத்தக்கக்
கல்லைத் துர்க்கி வந்து
தலைவலி உள்ள பேர்
தலையைத் தாங்கி
ஓங்கியே போட்டால்
தலைவலி தீர்ந்து
சொல்லாமலே துர்ங்குவார்..
மருந்து கிரயம் 4 அணா (1952 இல் எழுதியது)
இன்னுமொரு கவிதை...
சகல ரோக நிவாரணி
தஞச்ர்வூர் தலையாட்டி
மன்னார்குடி மண்வெட்டி
கும்பகோணம் கோமுட்டி
உலக்கைக் கொழுந்து
சித்தானை வேரு
குடிபோன வீட்டில்
அடிபோன சட்டியை எடுத்து
வாயோடு சேர்த்து
ஆயிரம் பொத்தலிட்டு,,,,
பதக்கு தண்ணீரை எடுத்து
உழக்குத் தண்ணீராக்கி
சுண்ட வைத்து
உள்ளங்கையில் வைத்து
புறங்கையை நுர்றுமுறை நக்க
எந்த வியாதியும் பட்டென்று
போகும்..
யாரிடமும் சொல்லாதே,,,
கிரயம் இரண்டனா,,,
முழுக்கவிதை மறந்துவிட்டது. ஆனால் எல்லாம் வேடிககையாக இருக்கும், முழுக்க முழுக்க நகைச்சுவையாகப் படிப்பதற்கு.
குறிப்பேடு கிடைத்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன். அப்பா இறந்த பிறகுதான் ஒவ்வொரு நாளும் அப்பாவின் நினைவு படுததிக்கொண்டிருக்கிறது. அவரைப் பற்றிய நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இதுபோன்ற விஷய ஞானத்துடனும்
ReplyDeleteபடித்து முடித்ததும் நம்மையும் அறியாது
வெடிச் சிரிப்புடன் சிரிக்கக் கூடிய
நகைச்சுவை உணர்வுடன் கூடிய
கவிதைகள் இப்போது நினைத்துப் பார்க்க இயலவில்லை
புதுமைப்பித்தனின் கவிதையைப் படைத்ததுபோல
ஒரு பிரமிப்பு
குறிப்பாக இறுதியில் சொல்லிப் போன விலைவிவரம் என்னை
ரொம்பக்கவர்ந்தது
மனக் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அப்பாவின் நகைச்சுவையுணர்வு பெரிதும் பாராட்டத்தக்கது. அதைக் கவிதை நடையில் எழுதிப் பகிர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. கட்டாயம் அவை பாதுகாக்கப்படவேண்டும். எப்பாடு பட்டாயினும் அவற்றை மீளப் பெற வேண்டுகிறேன். தொடர்ந்து பதிவிடவும். அப்பாவின் நினைவுகள் என்றும் நீங்காதிருக்கட்டும்.
ReplyDeleteகுடிபோன வீட்டில்
ReplyDeleteஅடிபோன சட்டியை எடுத்து
வாயோடு சேர்த்து
ஆயிரம் பொத்தலிட்டு,,,,
பதக்கு தண்ணீரை எடுத்து
உழக்குத் தண்ணீராக்கி
சுண்ட வைத்து
உள்ளங்கையில் வைத்து
புறங்கையை நுர்றுமுறை நக்க//
இழந்தவையும் மறந்தவையும் சிறந்தவையாக இருக்கும்போது துக்கம் பீடிப்பது இயற்கை. ஈடு செய்ய முடியாத இறப்பின் இழப்பை இருப்பின் எச்சங்கள் கொண்டே தாங்கித் தவித்திருக்க வேண்டியிருக்கிறது. பதிவில் இழையோடும் பெருமிதம் வலி குறைக்கிறது.
முதல் கவிதை புன்னகைக்க வைத்தது. அதனால்தான் தலைவலி மண்டையை 'பிளக்கிறதோ'...!
இரண்டாம் கவிதை வெடித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. (போகாத ஊருக்கு வழி!) சில பிணிகளுக்கு நிவாரணமற்றிருக்கும் போது மருத்துவர் இத்தகு நகையுணர்வுடன் நோயாளியை சமாளிக்க வேண்டியிருக்கிறது.
பேசியும் எழுதியும் ஆற்றிக் கொள்ளலாம் பிரிவின் வேதனையை.
எம்.ஏ. வுக்குப் பிறகான தங்கள் பட்டங்களை வெள்ளைத் தாளில் 'எழுதி எழுதி' பலகைத் தொடர்ச்சியாய் ஒட்டிய நிகழ்வு கண்முன் தோன்றுகையில் அப்பாவின் மனம் பிரகாசமான மகிழ்வுடன் (ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்) காட்சியாகிறது.
ReplyDeleteதங்களின் தந்தையின் உருவம் கண்முன்னே தோன்றுகிறது.கவிதை வடிவில் தங்களின் தந்தையினை மீண்டும் ஒருமுறை தரிசிக்க வைத்திருக்கின்றீர்கள். தொடர்ந்து தரிசிக்க விரும்புகிறேன்...
ReplyDeleteபடித்த படிப்புக்களையெல்லாம் நான் முடித்தவுடம் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி எழுதி என் பெயருக்குப் பின்னால் ஒட்டியது நினைக்கையில் மனம் கசிகிறது.
ReplyDeleteஅருமையான அப்பா..
கவிதைகள் அருமை.. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஎனக்கு ஒரு நண்பன் இருந்தான். முஸ்லீம் வகுப்பினன். அவனுக்கு சித்த வைத்தியத்தில் நாட்டம் உண்டு. எப்பொழுதும் கையில் ஒரு புத்தகம் இருக்கும். ஒரு முறை அவனிடம் பேசியதில் நான் அறிந்து கொண்டது, அந்த புத்தகத்தில் உடல் உபாதைகளுக்குத் தீர்வுகள் எல்லாம் கவிதை வடிவில் இருக்கும். மருத்துவக் கவிதைகள். தந்தையின் நினைவுகள் பல நேரங்களில் மனம் கனக்க வைக்கும்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇப்பதிவில் பகிர்ந்து கொண்ட உங்களது தந்தையின் கவிதைகள் அருமை... நகைச்சுவை உணர்வு இருந்துவிட்டால் ஆனந்தமே....
ReplyDeleteதந்தையின் பிரிவு... ம்ம்ம்.... என்ன செய்வது? சில சமயங்களில் அவர்களின் நினைவுகளோடே காலம் கடத்த வேண்டியிருக்கிறது..
மொத்த கவிதைகள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
அப்பாவின் கவிதைகள் அருமை!
ReplyDeleteஅப்பாவை இழந்த வெற்றிடிடம், அப்பப்பா, கடலினும் மிகப் பெரிது.
ReplyDeleteஎத்தனை பகிராத,உதிர்க்காத, கேட்காத, போசாத வார்த்தைகள்.
படைத்தைவன், படைத்தவனிடம் போனபின், படைத்தவனிடம் போய்த்தான்,
படைத்தவனிடம் பகிர வேண்டும் நம்மின் இழப்பை.
வணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் வலைப்பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் உங்களின் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/02/6.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்பாவின் கவிதைகள் அருமை, அழகு நடையில் நகைச்சுவையும் சேர்த்து நல்ல விருந்து.
ReplyDeleteஉங்கள் பக்கத்துக்கு சிவகுமாரனின் பக்கம் வழியாக வந்தேன். அப்பாவின் கவிதையைக் காண நேர்ந்ததே ஒரு பாக்கியம். அங்கதம் தெறிக்கும் அருமையான வரிகள். மேற்கொண்டு தேடிப்பிடித்து எழுதுங்கள்.
ReplyDelete