Thursday, August 16, 2012

சுதந்திரமும் விடுதலையும்




                      சுதந்திர தினத்தன்று ஏதேனும் பதிவிடவேண்டும் என்று எண்ணியபோது அதற்கான நேரம் அமையவில்லை. இருப்பினும் ஏதேனும் சொல்லவேண்டும் என்கிற உந்துதல் இந்தப் பதிவாகும்.


                    விவேகானந்தர் சொன்னார்.....

                    எவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ
                   அவனே சுதந்திரமான மனிதன்.

                   எப்போதும் இது எனக்குப் பிடித்தமான வரிகள்.

                   அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்காமல்...காயப்படுத்தாமல்...   அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்து நடந்துகொள்கிற யாருக்கும் சுதந்திரம் என்பது வரமாகும். அவரவர்க்கான கருத்து சுதந்திரம் என்பதோடு இது உடலளவிலும் மனதளவிலும் இன்னல்களை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்பதும் சுதந்திரத்தின்பாற்படும்.

                            கணவன் மனைவியை மதித்தல்.
                            மனைவி கணவனை மதித்தல்.
                            அப்பா மகன் உறவுகளைப் பேணுதல்
                            அண்ணன் தங்கை பகிர்ந்துகொள்ளல்
                            நட்புகளிடம் உணமையாக இருத்தல்..

இது எல்லாமுமே சுதந்திரத்தின் வெவ்வேறு அடையாளங்களே... இன்னும் நிறைய இருக்கின்றன இருப்பினும் கொஞ்சமாகவே பகிரல்.

                          இது நமது தேசம்.

                          31 மாநிலங்கள்..16 மொழிகள்...6 மதங்கள்...6400 சாதிகள்... 29 விழாக்கள்.. எல்லாம் உள்ளடக்கி ஒரே தேசமாய் இயங்கும் தேசம் நமது பாரத தேசம்.

                          எல்லாவற்றையும் நேசிப்போம்.

                          மானுடப் பிறப்பெடுத்தோம்
                          மானுடப் பண்பெடுப்போம்
                          மானுட செயல்கொண்டு
                          மானுடராய் மரிப்போம்
                          மகத்தான தேசத் தொண்டாற்றி...

                          வந்தே மாதரம்...


00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    இவைகளும்  சுதந்திரமும் விடுதலையும் பெறவேண்டும்..



                               




















12 comments:

  1. நல்ல கருத்துக்கள்... (படங்களின் மூலமும்)

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. சுதந்திர தின சிறப்புப் பதிவு அருமை
    கட்டுப்படவும் கட்டுப்படுத்திக் கொள்ள அறிந்தவனுமே
    சுதந்திரத்தின் திறன் அறிய முடியும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ
    அவனே சுதந்திரமான மனிதன்.

    சிறப்பான வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. வார்த்தைகளும்
    வண்ணமிக்க படங்களும்
    உணர்த்துகிறது
    உள்ளத்தின் உணர்வுகளை
    உணர்ந்தோம் நாங்கள்

    ReplyDelete
  5. கட்டுப்பாடில்லாமல் இருப்பது சுதந்திரம் அல்ல என்று தெளிவாக்கி இருக்கிறீர்கள். YOUR LIBERTY IS ONLY UP TO THE TIP OF OTHER PERSON'S NOSE எனும் பொருளில் ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியாக நினைவுக்கு வரவில்லை.அடிக்கடி பதிவில் காண அவா.

    ReplyDelete
  6. படங்களே செய்திகளாய் அருமை.

    ReplyDelete
  7. சொல்லாம‌ல் சொல்லிய‌ சுத‌ந்திர‌ங்க‌ளும் கிட்ட‌ட்டும்! ந‌ம் வாழ்நாளுக்குள்... (பேராசையோ...!)

    ReplyDelete
  8. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  9. அங்கதம் ததும்பும் கருத்தாக்கம்... யோசித்தால் தாங்கள் சொல்வது உண்மைதான்...

    ReplyDelete
  10. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான நல்ல கருத்துக்கள்.படங்கள் அருமை.
    மனம் நெகிழ்ந்தது.
    பார்க்க நன்றாகவுள்ளது.
    என்னுடைய தளத்தில்
    ஏணிப்படி

    தன்னம்பிக்கை

    நம்பிக்கை

    தொடருங்கள்.

    ReplyDelete
  11. கருத்து(ம்) ப‌ட‌ங்க‌ள் சூப்ப‌ர்.
    காக்கா பிடிக்காம‌,
    சொம்பு தூக்காம‌,
    ச‌ம்ச்சா த‌ட்டாம‌,.
    மாலிஷ் த‌ட‌வாம‌,
    சோப்பு போடாம‌
    வாழும‌ வாழ்வே
    சுத‌ந்திர‌ம்.

    ReplyDelete