அன்பு சகோதர, சகோதரிகளுக்கு.
உறரணி வணக்கமுடன்,
தனது அற்புதச் சொற்களைக் கோர்த்த கவிதைகளால் நெஞ்சம் கவர்ந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர்.
கவிஞர் நல்ல மனிதர். சக மனிதர்களிடம் நேயம் காட்டுபவர் தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்.
கவிஞரின் உடல் தற்போது நலமாக இல்லை. இதயக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயப்படும்படியாக இல்லை. சிறிதாக அடைப்பு அதுவும் ஆரம்ப நிலையில் உள்ளது. இருப்பினும் அதற்கு அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நாளை காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்க உள்ளது. இது கிட்டத்தட்ட முடிவதற்கு 5 மணிநேரங்கள் ஆகும்.
நமது அருமை சகோதரன் கவிஞர் சுந்தர்ஜி அவர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இவ்விவரங்களைத் தெரிவித்து நாம் அனைவரும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் கவிராயர் இருக்கப் பிரார்த்திக்கவேண்டுமாய் கூறியுள்ளார்.
சுந்தர்ஜியுடன் நாமும் சேர்ந்து தஞ்சாவூர்க் கவிராயர்
நலமுடன் இருக்க எல்லர்ம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம்.
எனது வேண்டுகோள்...
என்னை உமது எழுத்துக்களால்
இதயத்தின் சிறைக்கு சிக்க வைத்த
கவிராயரே...
உமது இதயம் பலமானது பண்பானது
எல்லோரையும் நேசிக்கும் இறைமையானது...
வயதின் தளர்வும் வாழ்வின் விதிகளுமாக
நோய்களும் சிகிச்சையும் இயல்பானது...
உமது கவிதைகள் அந்த மருத்துவமனையின்
அத்தனை சுவர்களுடனும் பேசத்தொடங்கியிருக்கும்..
உமது கவிதையின் சொற்கள் அந்த மருத்துவர்களின்
விரல்களில் மனிதத்தை இழையோடச் செய்து
கொண்டிருக்கும்...
கவிதைக்கு ஏது நோயும் சிகிச்சையும்
நீரே கவிதைதான்
உங்கள் மௌனக் கவிதைகளை
இயற்றிக்கொண்டிருங்கள்..
சிகிச்சை முடிந்ததும் வாசிப்பேன்... நாம்
விவாதிப்போம்..
00000000000000000000
அன்பின் ஹரணி சார்,
ReplyDeleteதங்களின் வரிகளை படித்தேன்.... உண்மையே... நோயும் சிகிச்சையும் உடலுக்கு தான்.. கவிதைகளுக்கு இல்லை.... ஆனாலும் அந்த கவிதைகளை தரும் அற்புத கவிஞர் தஞ்சாவூர் கவிராயர் அவர்களின் உடல்நலம் சீராகவும் அறுவை சிகிச்சை நல்லபடி நடந்து கண்டிப்பாக திரும்ப சௌஜன்யமாக வந்து மீண்டும் கவிதைகள் படைப்பார் என்ற நம்பிக்கையுடன் கண்டிப்பாக இறைவனிடம் வேண்டுவோம்...
அற்புதங்கள் நடப்பது இடைவிடாத பிரார்த்தனையால் மட்டுமே...
கவிஞர் கவிராயர் அருகிருந்து அவரை நல்லபடி பார்த்துக்கொள்ளும் சுந்தர்ஜீ அவர்களுக்கு அன்பு நன்றிகள்....
இறைவன் கவிஞருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்து மீண்டும் கவிதைகளை தொடர இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள்...
ஹரணி சார் நாம் நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்..
இறைவன் நல்ல நலத்தை தருவார்.... கவலைப்படாதீங்கப்பா..
தஞ்சாவூர்க் கவிராயர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டிற்கு திரும்ப எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteவிரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்!
ReplyDeleteபிரார்த்திப்போம். நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்.
ReplyDeleteஎனது பிரார்த்தனைகளும்.....
ReplyDeleteதஞ்சாவூர்க் கவிராயர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டிற்கு திரும்புவார்.நல்லதே நடக்கும். தங்ளது பிரார்த்தனைகளுடன் எனது பிரார்த்தனையும்...
ReplyDeleteவிரைவில் குணமடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteநம்முடைய பிரார்த்தனைகள் நிச்சயம் வீண் போகாது விரைவில் அவரை நலமுடன் நாம் பார்க்கலாம்
ReplyDeleteநல்லவர்களுக்கான பிரார்த்தனை
ReplyDeleteநிச்சயம் கைகூடும்
கவிராயர் பூரண் குணமடைந்து இல்லம் திரும்ப
அன்னை மதுரை மீனாட்சி நிச்சயம் அருள்வாள்
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு..
ReplyDeleteஉங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலித்தது. நலமுடன் அறுவை சிகிச்சை முடிந்தது. நலமுடன் இருக்கிறார். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் பணிந்த நன்றிகளும். என்னுடைய மனம் தாழ்ந்து இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆமாம் ஹரணி.. இன்று தனியறைக்கு வந்துவிட்டார்.
ReplyDeleteகடவுளுக்கு நன்றி.
வணக்கம் ஐயா இன்றுதான் தங்கள் தளத்திற்கு முதன்முறையாக
ReplyDeleteவந்துள்ளேன் .இந்தத் தகவல் மனதிற்கு வருத்தம் அளித்தது .ஒரு
நல்லவர் உயிர் வாழ பல நெஞ்சங்கள் கூடிப் பிரார்த்திக்கும் போது
நிட்சயம் இந்த பிரார்த்தனை வீண்போகாது .நானும் அந்தக் கவிஞரின்
உடல் மேலும் பூரண நலன்பெற பிரார்த்திக்கின்றேன் .மிக்க நன்றி
ஐயா பகிர்வுக்கு .
பிரார்த்தனைக்கு பலம் அதிகம். அதிலும் பிறருக்காக , தன்னலமின்றி பிரார்த்தித்தால் கண்டிப்பாய் பலனுண்டு.
ReplyDeleteகவிராயர் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்