Saturday, September 15, 2012

கடுகு தாளித்தல்






                   ஒரு             மணம்

                    ஒரு             சிரிப்பு

                    ஒரு           அழுகை

                     ஒரு           தவிப்பு

                     ஒரு           துடிப்பு

                     ஒரு            அழகு

                     ஒரு            அற்புதம்

                     ஒரு             சுகம்

                     ஒரு              பிரிவு

                      ஒரு            ஆரம்பம்

                      ஒரு              முடிவு


                                        இவையெலலாம்    உதறி
                                        விரைகின்றன          பொழுதுகள்
                                        விரைகின்றனர்       மனிதர்கள்
                                        ஒவ்வொரு     நாளும்....

                                         கடுகாய்,,,,,, நானும்,,, எனது  வாழ்வும்,,,,
                   

14 comments:

  1. ம்ம்ம் அழகான கவிதை தான்!

    ReplyDelete
  2. கடுகு சிறுத்தாலும்
    காரம் குறைவதில்லை...

    ReplyDelete
  3. சுருக்கமாக 'நறுக்' வரிகள்... அருமை...

    ReplyDelete
  4. மிகச்சிறிய கடுகுக்குள், மிகப்பெரிய தங்கள் கருத்துக்களைக் கண்டேன்.

    ”கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை” என்பது போல! ;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  5. அருமை....

    முதல் படம் மிகவும் பிடித்தது...

    ReplyDelete

  6. சிறுத்தாலும் காரம் போகாத கடுகுதானே... ஐயா, நலமா. ? தன்னிரக்கம் வேண்டாமே. !

    ReplyDelete
  7. அன்புள்ள நட்புள்ளங்களுக்கு...

    உறரணியின் பணிவான வணக்கங்கள். வலைப்பக்கம் வந்து உட்காரமுடியாத அளவிற்கு பணிகள் கணத்துக் கிடக்கின்றன. ஒருபக்கம் அலுவலகப் பணிகள் பிறிதொரு பக்கம் இலக்கியவிழா சொற்பொழிவுகள் என நேரம் நெருக்கித் தள்ளுகிறது. உங்கள் எல்லோரின் முகம் பார்க்கவும் பேசவுமாகவே இச்சிறு கடுகை தாளித்தேன். உங்களின் கருத்துரைகள் கண்ட புத்துணர்வில் ஓடிக் கொண்டிருக்கிறேன். பணிகளை விரைவில் முடித்து மீண்டும் வருவேன். நிரம்பிய செய்திகளுடன். ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு எப்போதும் நான் த்ன்னிரக்கம் கொள்வதில்லை. பத்தோடு பதினொன்றாக நானும் விரைந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் செய்தி. நன்றிகள்.

    ReplyDelete
  8. அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  9. கடுகுக்குள் வாழ்க்கையை அடக்கவிடும் சூட்சுமம் உங்கள் கவிதை வழியே காணக்கிடைக்கிறது. அற்புதம். பாராட்டுகள் ஹரணி சார். கடமைகள் செவ்வனே நிறைவேறியபின் மீண்டும் மலரவிருக்கும் வலைப்பூப் பொழுதுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. கடுகென்ன கடுகு . கண்ணுக்குத் தெரியாத அணுவென்றாலும் அதிரவைக்காதா நும் தமிழ்?.
    வருக வளம் மிக்க தமிழோடு.

    ReplyDelete
  11. தாளிப்பு ஜோர்.. (ஹ்ம்ம்.. இங்கே மட்டும் என்ன வாழுதாம்.. பவர் கட்.. ஆபிஸ்னு ..)

    ReplyDelete
  12. அருமையாய் இருக்கிறது. பணிச் சுமை அழுத்துகையிலும் கடுகாய் வெடிக்கும் உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது அய்யா....

    ReplyDelete
  13. ஒரு கவிதை...!அருமை...!எனது வலைக்கு வருகை தாருங்கள்..
    www.mayavarathanmgr.blogspot.in

    ReplyDelete
  14. அருமை! என்னுடைய வலைப்பக்கத்தில் "மீட்டிட வருவானோ?" கவிதை. நேரம் கிடைக்கையில் படித்து கருத்துரை இட விழைகிறேன்! பகிர்விற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete