என்ன சொல்லி நினைப்பது
அல்லது அழுவது.............
அழுகையில் தெரிவது ஆனந்தமா
அளவிடற்கரிய அல்லலா?
நினைத்துக்கொண்டேயிருக்கிறோம்
பேசிகொண்டேயிருக்கிறோம்
வருத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம் அழுதுகொண்டேயிருக்கிறோம் ஆனந்தப்பட்டுத்
தொலைக்கிறோம்...
இந்த தேசத்திற்கு கிடைத்த வரம் நீ
அமுதசுரபி...கிளைத்தெழுந்த அமிழ்தம்...நீ
எல்லா மனங்களிலும் தலைமையாக
தகுதியாய் இருந்தாய்.. தலைவனாய்
இருந்தபோதும்
தாயாயும் தகப்பனாயும் இருந்தாய்..
இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்..
உன் பெயர் உச்சரித்தும் உன்பெயர்
திருடியும்,,
உன் புகழ் சுமந்தும் .. உன்னைக்
கொண்டாடிக் கொடியேற்றிக்
களிப்புற்றிருக்கிறது இன்றைய அரசியல்...
எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்கள்
உனது நிழலில் இளைப்பாறிக்கொண்டார்கள்
யாரும் உன்வழியில் இல்லை பின்பற்ற...
நீ வாழ்ந்து செழித்து வழங்கிய கருணைதேசத்தில்
நாங்களும வாழ்கிறோம்
என்பதுதான் ஆறுதல்..
நீ உயிர்ப்புடன் இருப்பதால்தான் நாங்கள் பிணங்களை அடையாளப்படுத்தமுடிகிறது...
எங்கள் வாழ்வின் ஏற்றும் சுடரில்
என்றும் இரு...
ஏனென்றால்
இறைவன சோதிப்பதும் வரங்கொடுப்பதும்
வாழ்விப்பதும் என்பதெல்லாம் நாங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும்தான் படித்ததுண்டு,
இவற்றையெல்லாம் நேரில் செய்த நீதான்
மக்களின் இறைவன்
கல்விக்கு கண் கொடுத்த தலைவரை, நல்ல மனிதரை வணங்குவோம்...
ReplyDeleteநல்ல மனிதர்....
ReplyDeleteஇப்படியும் இருக்க முடியும் என்று நிரூபித்தவர்..
ReplyDeleteஇப்படியெல்லாம் இருக்கிறார்களே என்று புலம்ப வைத்து விட்டு போய்விட்டார்..
நீ உயிர்ப்புடன் இருப்பதால்தான் நாங்கள் பிணங்களை அடையாளப்படுத்தமுடிகிறது...//
ReplyDeleteகர்ம வீரரின் பிறந்த நாள் சிறப்புக்கவிதை
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஒரு அதிசய மனிதரைப் பற்றிய அற்புதமான பகிர்வு. நன்றி ஹரணி சார். சமீபத்தில்தான் அவரைப்பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தேன். இன்னும் வியப்பிலிருந்து விடுபடவில்லை.
ReplyDeleteஒரு தகப்பனை தாயாய் .........தாங்கியவர் .......அப்படி ஒரு வரை நிச்சயம் நாம் பார்ப்பது அரிது அவருக்கு நிகர் அவரே ...........உங்களின் அன்பின் ஆழம் புரிந்தது இந்த வரிகளில்
ReplyDeleteதரணியில் மிகச் சிறப்பாக வாழ்ந்து மறைந்த ஒருவரை பற்றி ஹரணியின் வலைப்பக்கத்தில் வந்த கவிதை மிக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
ReplyDeleteகர்ம வீரர் காமராசர் இல்லையேல் நாமெல்லாம் பள்ளிப் பக்கம் சென்றிருப்போமா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. பள்ளிகள் இருந்தால்தானே செல்வதற்கு.காமராசரின் நினைவினைப் போற்றுவோம்.
ReplyDeleteஇவர் பிழைக்கத் தெரியாதவர்.
ReplyDeleteபிழை இளைக்கத் தெரியாதவர்.
கண்கள் பனிக்கின்றன.
மனிதம் பணிகின்றது அவர் முன்.
வாழ்க காலம் முழுவதும்..
என்றென்றும்...............
பட்டினியின் வலி தெரிந்தவர், படிப்பின் தேவை அறிந்தவர்... இப்படிப் பட்ட தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஒரு ஆறுதல்..
ReplyDeleteகாமராஜர் பற்றிய எட்வினின் பதிவும், உங்கள் பதிவும் அவரை நினைக்கவும், அவர் இல்லையே இப்போது,என ஏங்கவும் வைத்து விட்டது. இந்த அருமையான பதிவுக்காக ஆயிரம் நன்றிகள் ஹரணி..