Tuesday, April 16, 2013

முனைவர் பட்ட ஆய்வுகள்,,,,நெகிழ்ச்சி...



                  தமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்தலைப்பில் ஏற்கெனவே வேறு யாராவது ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா..நாம் தெரிவு செயதிருக்கும் தலைப்பைத் திறம்படச் செய்வதற்கான வாய்ப்புக்கள்,, செய்யப்போகும் ஆய்வுகுறித்த நமது நிலைப்பாடு (அதாவது கருதுகோள் என்பார்கள் ஆய்வுலகில். இதைப் பற்றிச் சுருக்கமாக சொல்வது என்றால் கருதுகோள் என்பது  தெரியாத ஊரில் கையில் உள்ள முகவரியைக் கொண்டு தேடுவது) இவற்றைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் ஏதோ ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து  அதுபற்றிய எந்த பார்வை நுர்லையும் வாசிக்காமல் நிறைவு செய்து முனைவர் பட்டம்  பெறுவது என்பது இயல்பாகியிருக்கிறது (இதில் வழிகாட்டிக்கும் தெரியாமல் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்கும் தெரியாமல் ஒரு தலைப்பில் நிகழும் கூத்தெல்லாம் இருக்கிறது) நோக்கம் எப்படியாவது ஒரு முனைவர் பட்டம் பெறுவது, இவர்களுக்கு முனைவர் பட்டம் வழஙகும் வாய்மொழித்தேர்வில் கலந்துகொண்டு பார்வையாளராக உட்கார்ந்தால் போதும் மூன்றாண்டுகள் பாடுபட்டு செய்யும் முனைவர் பட்ட ஆய்வுகுறித்து ஐந்துநிமிடம்கூட சொல்லத்தெரியாமல் அப்படியே பத்து பக்கங்கள் நோட்ஸ்போல் எடுத்துக்கொண்டு அபப்டியே மேடையில் வாசித்துவிட்டு ஏதேனும் பார்வையாளர்கள் கேள்விகேட்டால் அதற்கும் பதில் சொல்லத்தெரியாமல் ஆய்வேட்டைப் பார்த்து சொல்வது,, அல்லது தடுமாறுவது உடனே வழிகாட்டி ஆய்வேட்டில் குறிப்பிட்ட பக்கத்தைச் சொல்லி அந்தப் பக்கத்தில் விடை இருக்கிறது பார்த்து சொல் என்பதுபோல சொல்வது,,, இப்படி முனைவர்பட்டம்,,,,

                   இத்தனைக்கும் இப்படித் தரமற்ற ஆய்வுகள் நடப்பது 40 விழுக்காடுதான் ஆனால் அதேசமயம் 60 விழுக்காடுகள் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படும் ஆய்வுகள் உள்ளன, அவைதான் தமிழ்மொழியின் சிறப்பையும் பண்பையும் மதிப்பையும் இன்றளவும் கட்டிக் காத்துவருகின்றன, அதற்கு ஒரு சான்றாகத்தான் இந்தப் பதிவு,

                     திருச்சி துர்யவளனார் தன்னாட்சிக்கல்லுர்ரியில் ஒரு ஆய்வேடு, அதன் தலைப்பு வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமைச் சிந்தனைகள் என்பதாகும்,

                     ஆய்வாளர் பெயர்  கே, சரவணன்.

                     வழிகாட்டியின் பெயர். பேரா.எப். செல்வக்குமார்.

                     புறநிலைத்தேர்வாளர்  முனைவர் க. அன்பழகன்


                இந்த ஆய்விற்காக ஆய்வாளர் சரவணன் வைரமுத்துவின் ஒட்டுமொத்தப் படைப்புக்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார், ஆய்விற்காகக் கடினமாக உழைத்துள்ளார். ஆய்வின் பின்னிணைப்பில் வைரமுத்துவின் வாழ்க்கைக்குறிப்பு, இதில் பல புதிய தகவல்கள்,  அப்புறம் ஆய்வின் பாதை விலகாமல் ஆய்வுகுறித்து தரமான கேள்விகளைத் தயார் செய்துகொண்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து நேர்காணல் நிகழ்த்தியிருக்கிறார். அதில் பல கேள்விகள் வெப்பமான பகுதிகளைக் கொண்டவை என்றாலும் அதற்கு சிறிதும் முரண்படாமல் கோபப்படாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள்,

               இவ்வாய்வுத் தொடர்பாக கிட்டத்தட்ட 100 நுர்ல்களைப் படித்திருக்கிறார் ஆய்வாளர் சரவணன். இவை மனித உரிமை சார்ந்த நுர்ல்கள்.
அதுதவிர ஆங்கில நுர்ல்கள்..கலைக்களஞசியங்கள்..ஆய்வேடுகள்.. எனத் தெளிவாக தனது ஆய்வின் முனைப்பைக் கூர்மைப்படுத்த அத்தனை நுர்ல்களையும் வாசித்து தனது ஆய்வில் வைரமுத்துவின் 27 நுர்ல்களையும் வாசித்து (கவிதைகள்... சிறுகதைகள்.. நாவல்கள்..) அவற்றின் பொருண்மையோடு இவற்றையெல்லாம் ஒப்பிட்டுத் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்திருக்கிறார்.

                   அவர் ஆய்வின் போக்கிற்காக இயல்களைப் பகுத்திருக்கும் முறை பின்வருமாறு.

                 1.  உலக வரலாற்றில் மனித உரிமைச் சிந்தனைகள்
                   
                       (இந்த இயலில் மனித உரிமை என்கிற சொல்லுக்கான பொருள்
                     தொடங்கி உலகளவில் காலந்தோறும் மனித உரிமை குறித்த
                     பல்வேறு கருத்தாக்கங்களை வரலாற்றடிப்படையில் மாறாமல்
                     தொகுத்திருக்கிறார். மேலும் மனித உரிமை குறித்த எந்த ஐயப்
                    பாட்டிறகுமான தெளிவாக இவ்வியலை அமைத்திருக்கிறார்.

                2, இவ்வியலில் தமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்
                     இவற்றில் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் தமிழ
                      இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். காப்பியங்கள். பக்தி
                      இலக்கியங்கள் சித்தர்கள். தற்காலக் கவிதைகள் என அமைத்து
                     இவற்றில் பல்வேறு களங்களில் மனித உரிமைப் பற்றிய சிந்தனை
                      களைப் பட்டியலிட்டிருக்கிறார்,

                 3, வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமை சிந்தனைகள்
                       வைரமுத்து படைப்புக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்
                        பட்ட இயல்,

                  3, வைரமுத்து படைப்புக்களில் சமுக மதிப்புகள்

                              சமுகப் பதிப்புக்கள் குறித்த வைரமுத்துப் படைப்புக்கள்.

                  4, வைரமுத்து படைப்புக்களில் பெண்ணிச்சிந்தனைகள் - உரிமைகள்.

                              பெண்ணியம் குறிதத கருத்தாக்கங்கள்.

                   இப்படி மிகத்தெளிவாக ஆய்வாளர் சரவண்ன் அவர்கள் இவ்வாய்வேட்டை அளித்திருக்கிறார். இவற்றின் சிறப்புக்களாகச் சிலவற்றைக் குறிப்பிடவேண்டும்.

              1, வைரமுத்துவின் ஒரு நுர்லைக் கொண்டே ஒரு முனைவர் பட்டத்தை
                  அடைந்துவிடும் சூழலில் அவரின் 27 படைப்புக்கள் (ஒட்டுமொத்தம்)
                  முழுமையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது, அதாவது 27 முனைவர்
                  பட்டங்களை ஒரே முனைவர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்டது,
                  ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் தரமாக செய்யவேண்டும் என்ற
                 முனைப்புதான்,

              2, வைரமுததுவுடன் நிகழ்த்திய நேர்காணல். வைரமுத்து பதில்கள்.

              3, அதற்காக ஆய்வாளர் வைரமுத்துவின் 27 நுர்ல்களை வாசித்தது
                  மட்டுமின்றி மனிதஉரிமை தொடர்பாக 100 நுர்ல்களை வாசித்ததும்
                  அதனைப் பற்றி சரியாக ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டது.

              4, மேலும் ஆய்வேட்டை ஆய்வாளரே கணிப்பொறித்தட்டச்சிட்டது,

              5, வாய்மொழித்தேர்விற்காக பவர் பாய்ண்ட் விளக்கத்தையும்
                  ஆய்வாளரே மேற்கொண்டது,

               6, கையில் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் தான் மேறகொண்ட ஆய்வு
                  குறித்து 40 நிமிடங்களுக்கும் மேலாக ஆய்வாளர் சரவணன்
                  விளக்கம் சொன்னது, ஆய்வு தொடர்பாக கேட்கப்பெற்ற கேள்வி
                   களுக்கும் தரமான சரியான பதிலைச் சொன்னது,


                 இப்படி பல சிறப்புக்களைக் கொண்டது இவ்வாய்வு. பாராட்டிற்கு உரியவர் ஆய்வாளர் சரவணன்.

                     கடைசியாக ஒரேயொரு கேள்வி,,,,

                     இப்படித்தானே உலகில் எல்லா முனைவர் பட்ட (பிஎச்டி) ஆய்வுகளும் நிகழ்த்தப்படவேண்டும், இதுதானே ஆய்வின் முறை, இப்படித் தானே நிகழ்த்துகிறார்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது,

                        என்று கேட்கலாம்,

                         ஒரேயொரு பதில்,

                         ஆய்வாளர் சரவணன் அவர்கள் இரு கண்களும் தெரியாத பார்வையற்றவர்,

                    இத்தனையையும் இன்னொரு படிக்கக்கேட்டு மனதில் பதிய வைத்து நிகழ்த்தியவை,

                             என்றைக்கும் தமிழ்மொழி அழியாது. சரவணன் போன்ற உண்மையான தரமான தமிழ் ஆய்வாளர்கள் இருக்கும்வரை தரமற்ற ஆய்வுகள் மேலெழும்பியும் நிற்காது ,

                              எங்கள் வாழ்வும்
                              எங்கள் வளமும்
                              மங்காத தமிழென்று
                              சங்கே முழங்கு.......

                              எப்போதும் வெல்லும் தமிழ்,,,,,


             








26 comments:

  1. உண்மைதான்!... உணர்வு பூர்வமான ஆய்வாளர்கள் - சரவணன் போன்றோர் - மேலும் மேலும் தோன்றிக் கொண்டேயிருப்பர். அதனால் எங்கும் எப்போதும் தமிழ் ஒன்றே வெல்லும்!... அதனை வருங்காலமும் சத்தமாகவே சொல்லும்!...

    ReplyDelete

  2. என்றைக்கும் தமிழ்மொழி அழியாது. சரவணன் போன்ற உண்மையான தரமான தமிழ் ஆய்வாளர்கள் இருக்கும்வரை தரமற்ற ஆய்வுகள் மேலெழும்பியும் நிற்காது ,

    நெகிழ்ச்சியான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. குமார குருபரர் எழுதிய இந்த பாடல்

    மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
    கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
    செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
    கருமமே கண்ணாயினார்

    நினைவுக்கு வருகிறது.

    வைரமுத்து மட்டும் லேசுப்பட்டவரா என்ன?

    பூமி என்னைச் சுற்றி வர ஆசை என்று எழுதினாரே...
    அதுவும் சின்னச் சின்ன ஆசையாமே...

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. முடிவில் ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்...

    ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இவரால் முனைவர் பட்டத்திற்கு பெருமை...

    ReplyDelete
  5. குறுக்கு வழியில் ஆய்வுப் பட்டம் வாங்குபவர்கள் எல்லாம் முகத்தில் இரு புண்ணுடையார் என்பது தெளிவு.

    நெகிழ்வான நிகழ்வு தான்! பாராட்டுகிறேன்... சரவணனுடன் உங்களையும்.

    ReplyDelete
  6. ஞானக்கண் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது இவரிடம் தான் இருக்கிறதென்று இப்போது தெரிகிறது. வாழ்க, சரவணனும் அவர்போன்ற திறமையாளர்களும்! இத் தகவலைத் தெரிவித்த நீங்களும் வாழிய!

    ReplyDelete
  7. புறக் கண் இருண்டிருந்தாலும், அகத்தில் பிரகாசிக்கும் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முனைவர் பட்டத்துக்கான ஆய்வாளர் சரவணன் அவர்களுடைய இந்த மாபெரும் தேடலும் அலசலும் தீர்மானமுமான ஆய்வு முயற்சி அடுத்துவரும் ஆய்வாளர்களுக்கான ஒரு முன்னுதாரணம். தேர்ந்த அர்ப்பணிப்பும், தீராத தாகமும் இருந்தாலொழிய இப்படியொரு சாதனையை நிகழ்த்துவதென்பது அசாத்தியம். அவருக்கும் அவருக்கு உதவியவர்களுக்கும் வழிநடத்தியவர்களுக்கும் எங்கள் இதயபூர்வ வாழ்த்துக்கள். அவர் பெருமையை நாங்களும் அறியத் தந்த தங்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றி ஹரணி சார்.

    ReplyDelete
  9. சிறப்பான பதிவு! ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete

  10. முனைவர் பட்டம் பெற விரும்பும் ஒரு ஆய்வாளர் செயல்பட வேண்டிய முறைகளை சரவணனை எடுத்துக்காட்டாகக் காட்டி விளக்கியுள்ளீர்கள். பிறர் ஆய்வுகளைத் தனதாகக் காட்டி முனைவர் பட்டம் பெறும் பலரைப் பற்றி செய்திகள் வாசித்திருக்கிறேன். இது பெரும்பாலும் விஞ்ஞான ஆராய்ச்சி மேற்கொள்வோரிடம் இருக்கிறதாம். ஆங்கிலத்தில் PLAGIARISM என்பார்கள். சரவணனது ஆராய்ச்சி அவருக்கு உதவியவருக்கும் பெருமை அளிக்கும். புறநிலைத் தேர்வாளர் ....க. அன்பழகன்...........? பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. நெகிழ்ச்சியான பகிர்வு.

    கண்ணுள்ள அனைவருக்கும் இவர் ஒரு வழிகாட்டி.....

    ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும்.....

    ReplyDelete
  12. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

    வணக்கம். புறநிலைத் தேர்வாளர் அடியேன்தான். மனம் நெகிழவைத்த வாய்மொழித்தேர்வு அது.

    ReplyDelete
  13. அன்புள்ள துரை சார்...


    தமிழ்ச்சங்கம் செல்லும்போதெல்லாம் உங்கள் முந்தைய மையம் நினைவுக்கு வரும். தற்போது எங்கிருக்கிறீர்கள். இந்தியாவிலா? அயல்நாட்டிலா?

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்!.. வணக்கம். நான் தற்போது குவைத் நாட்டில் பணிபுரிகின்றேன்.. தங்களை சில மாதங்களாகவே தொடர்ந்து கொண்டுள்ளேன். தங்கள் அன்பினால் நானும் ஒரு தளத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். என்றும் மறக்க இயலாத அன்பு தங்களுடையது!.. தங்கள் குடும்பத்தினர் நலம் தானே.. மீண்டும் சந்திப்போம்!..எனது வலைத்தளம் - http://thanjavur14.blogspot.com - வருகை தாருங்கள்..

      Delete
  14. அன்புள்ள செல்லப்பா அவர்களுக்கு..

    வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். நன்றிகள்.

    ReplyDelete
  15. அன்புள்ள சுப்பு தாத்தா..


    வண்க்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  16. பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அன்பிற்கினிய திரு அன்பழகன் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
    அரங்கத்தில் நிகழ்ந்தவற்றை அகிலம் அறியச்சேய்தமைக்கு மிக்க நன்றிகள் பல!
    எனது ஆய்வு தொடர்பான தங்களின் அரிக்கை என்னை மென்மேலும் உயர்த்தும் என்பதில் அய்யமில்லை.

    ReplyDelete
  18. Greatly delighted that Dr Saravanan has followed strictest methodology and has realy earned the Ph.D degree. Hats of to his guide and His research.Having faith on Research methodology and oneself will certainly unravel mysteries.
    Dr R.Chandramohan
    Sree Sevugan Annamalai College
    Devakottai

    ReplyDelete
  19. Dear Dr Saravanan, Congratulations. The Ph.D degree is only an entry licence to research. Use this licence and probe many more and contribute to the society significantly.
    Dr.R.Chandramohan's team of researchers
    Sree Sevugan Annamalai College
    Devakottai

    ReplyDelete
  20. முனைவர்.க.சரவணன் அவர்களது உழைப்பு போற்றுதற்கு உரியது.
    இவ்வாறு பெரிதும் முயன்று ஆய்வுசெய்வோர் பாராட்டிற்கு உரியோர்.
    வாழ்த்துகள்.

    மின்குழும உரையாடல்களில் உள்ள செய்திகளுக்கு இசைபுடைய வைரமுத்துவின் பாடல்வரிகளையும் அந்தந்த இழைகளில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்,

    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete
  21. ஆய்வாளர் சரவணன் அவர்கள் இரு கண்களும் தெரியாத பார்வையற்றவர்,

    - என்ற கருத்து என்னை உண்மையில் நெகிழச்செய்து விட்டது.

    முனைவர் பட்டம் என்பது இன்று எளிமையாகவே செய்து முடிக்கப்பட்டுவிடுகிறது என்பதும் உண்மை. திறம் பட செய்பவர்களும் உள்ளனர்.

    தங்கள் ஆய்வேடு புத்தகமாக வர வாழ்த்துகிறேன்.


    மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளும் பாராட்டுகளும் நண்பரே... மகிழ்ச்சியே நிறையட்டும்.

    ReplyDelete
  22. சிறப்பான ஆய்வாளரை பற்றி புகழ்ந்துரைத்த உங்களை போன்ற நெறியாளர்கள் இருந்தால் அடுத்தடுத்து பல சரவணன்கள் உருவாகிவிடுவார்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் ,சரவணனுக்கும்

    ReplyDelete
  23. ஆய்வு சூழ​லை சார்ந்த மிகச்சிற்ந்த பதி​வை ​மேற்​கொண்டு தாங்கள் புதிய த​லைமு​றை ஆய்வாளர்களுக்கு ஊக்கமளித்துள்ளீர். மிக்க நன்றி

    ReplyDelete
  24. Dear Dr.Saravanan,cogratulations.The whole credit goes to External examiner Dr.K.Anbalagan for bringing it out for the benifit of readers.My entier efforts are to demonstrate to the youth force that "Human capability is unlimited and that no external force can block his progress.The block can only be with in."If Dr.Anbalagan or the guide Prof F.Selvakumar could help me in reaching out to wider aspiring research students on the above topic I shall provide volumes and volumes of proofs.Thank you.

    ReplyDelete
  25. சரவணன் ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    ReplyDelete