Sunday, April 14, 2013

எங்கும் நிறைக்கட்டும்.....எப்போதும்....






                                 தொல்காப்பிய நெறியாய்

                                 சங்க இலக்கிய மாண்பாய்

                                 குறுந்தொகை காதலாய்

                                 கலித்தொகை பரிவாய்

                                ஆற்றுப்படை பெருமையாய்

                                 நாலடியார் நல்வழியாய்

                                 திருக்குறளின் பண்பாய்

                                 பைபிளின் புதுமையாய்

                                 குர்ஆனின் ஒழுக்கமாய்

                                 புத்தனின் மௌனமாய்

                                  எல்லாமும் எப்போதும்

                                 நிறைந்து வழியட்டும்

                                 திகட்டாது கனியட்டும்

                                 இந்தத் தமிழ்ப்புத்தாண்டு



                                 எல்லா வளங்களையும்

                                 எங்கும் நிறைக்கட்டும்,,,,


8 comments:

  1. தமிழ்ப் புத்தாண்டிற்கான சிறப்பான கவிதை....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தமிழ்ப்புத்தாண்டு எல்லா வளங்களையும் எங்கும் நிறைக்கட்டும்,,,,

    இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை அருமை ஐயா...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  4. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!... காலமும் சூழ்நிலையும் பிரித்திருந்தாலும் கவின் மிகு கணிணித் தமிழ் கொண்டு மீண்டும் இணைவோம்!...வாழ்க பல்லாண்டு!.....

    ReplyDelete
  6. ஆஹா இப்படியும் கவிதை எழுதலாமா.....சூப்பர்ப்....!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இலக்கியத்தால் வாழ்த்திய இனிமையும் அழகும் கண்டு சிலிர்த்தேன். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹரணி சார்.

    ReplyDelete